ஈரல், (லிவர், கல் பக்காத்து ) மிகவும் சத்தானது, அதிக ஹிமோ குளோபின் சத்தும் இரும்பு சத்தும் இதில் அதிகமாக இருக்கு, தெம்பிலாதவர்களுக்கு எழுதி கொடுக்கும் அயர்ன் டானிக்குக்கு பதில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
இதை தக்காளி சேர்த்து கூட்டாகவோ, அல்லது சூப்பாகவோ, இதை சேர்த்து புலாவாகவோ செய்து சாப்பிடலாம்.
சுட்டு சாப்பிட்டால் இன்னும் நல்ல இருக்கும்.
தேவையானவை
ஆட்டு ஈரல் | 200 கிராம் | ||
இஞ்சி பூண்டு பேஸ்ட் | ஒரு தேக்க்ரண்டி | ||
கரம் மசாலா தூள் | கால் தேக்கரண்டி | ||
உப்பு | தேவைக்கு | ||
மிளகாய் தூள் | அரை தேக்கரண்டி | ||
வெங்காயம் | பொடியாக அரிந்த்து ஒரு ஸ்பூன் | ||
எண்ணை | இரண்டு தேக்கரண்டி | ||
மிளகு தூள் | அரை தேக்கரண்டி | ||
சோயா சாஸ் | ஒரு தேக்க்ரண்டி | ||
லெமன் ஜூஸ் | கால் தேக்கரண்டி | ||
கொத்துமல்லி தழை | சிறிது | ||
செய்முறை
ஈரலை சுத்தமாக சிறிது மஞ்சல் தூள்
சேர்த்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
வாயகன்ற வானலியில் எண்ணை ஊற்றி வெஙகய்ம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி அத்துடன் ஈரல், மிளகாய் தூள், உப்பு தூள் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்
2 நிமிடம் முடி போட்டு வேக விடவும்.
கடைசியாக சோயா சாஸ், மிளகு தூள், கரம்மசாலாதூள் தூவி மேலும் இரண்டு நிமிடம் வதக்கி இரக்கவும்.
கொத்துமல்லி தழை, கேப்சிகம் சேர்த்து அலங்கரிக்கவும்.
குறிப்பு:
ஈரலை ரொம்ப நேரம் வேகவைத்தால் கல்லு மாதிரிஆகி கருப்பாகிவிடும்.
ஈரல் வேக மொத்தம் 6 நிமிடம் போதும் .
ஆக்கம்
ஜலீலா
Tweet | ||||||
18 கருத்துகள்:
ம் .....நானும் தான் டிரை பண்றேன் ஆள்(ஆடு ) ஓடிடுது..என்ன செய்ய ஹா..ஹா..
ஐயன் டானிக்குக்கு நல்ல மாற்று இது ...!!
கரெக்ட் :-))
நல்ல குறிப்பு ஜலீலா.
ஹா ஹா ஜெய்லானி ஓடுர ஆளா (ஆட) ட்ரை பண்ணா ஓடதான் செய்யும்.
தொடர் வருகை தந்து பின்ன்னூட்டமிடுவதற்கு நன்றி ஆசியா.
நல்லாயிருக்குக்கா...
சமையல் குறிப்பு கொடுப்பது மட்டும் அல்லாமல் அரோக்கிய குறிப்பும் கொடுப்பது அசத்தல்...
வித்தியாசமா இருக்கு
நல்லா சொல்லி இருக்கியே அக்காள் இப்ப வர வர மருத்துவ ரீதியில் சமையல் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் உங்களுக்கும் டாக்ட்டர் பட்டம் கொடுத்துட வேண்டியதுதான்.
இப்போது அம்மா கூடவே இரப்பதால் இந்த சமையல் எண்ணமே நம்மளுக்கு வாறதில்லை.. ஹ..ஹ..ஹ..
நன்றி மேனகா
ஆமாம் மஹா விஜெய் இது ஆரோக்கியமான குறிப்பும் கூட
நன்றி ஆமினா
நாட்டாம வாங்க்கோஎன் குறிப்புகல் நிறைய மருத்துவ குறிப்பு போல் தான் இருக்கும் வருகைக்கு மிக்க நன்றி
மதி சுதா அம்மா கையால் சாப்பிடும் போது இதை விட வேறு என்ன வேனும்.
வருகைக்கு மிக்க நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரி அவர்களுக்கு,
சக சகோதரன் என்ற முறையில் கீழ்காணும் பதிவில் முஸ்லிம் பதிவர்களுக்கு ஒரு ஆலோசனையை சொல்ல முயற்சித்திருக்கின்றேன். அது சரியென்னும் பட்சத்தில் செயல்படுத்த ஆவணச் செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் நம் முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமீன்.
முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
super, akka.
aaha viththiyaasamana fry jali.
வா அலைக்கும் அஸ்ஸ்லாம்
வாங்க ஆஷிக் அஹமது வருகைக்கு மிக்கநன்றி
கண்டிப்பாக வந்து படிக்கிறேன்.
நன்றி ஸாதிகா அக்கா, இது சும்மா ட்ட்ரை பண்ணது ரொம்ப நல்ல இருந்தது,
looks delicious
thank you torveiw
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா