Monday, January 3, 2011

K F C லாலிபாப் - K F C loli pop


///இப்போது குழ‌ந்தைக‌ள் அதிக‌மாக‌ விரும்புவ‌து KFC சிக்க‌ன் தான் அந்த‌ அள‌விற்கு சுவை இல்லை என்றாலும் ஓர‌ள்விற்கு ந‌ல்ல‌வே இருக்கும். இது என் பிள்ளைகளுக்காக செய்து பார்த்தது. வெரும் ப‌ருப்பு சாத‌த்திற்கு தொட்டு கொள்ள ந‌ல்ல‌ இருக்கும்.//


தேவையான‌ பொருட்க‌ள்ஊறவைக்க


லெக் பீஸ் - எட்டு துண்டு
இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
பூண்டு - ஐந்து பல்
தக்காளி = ஒன்று
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் = அரை தேக்கரண்டி


பிரட்டி கொள்ள


மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மைதா - ஒரு கப்
கார்ன் மாவு - கால் கப்
உப்பு - சிறிது
எண்ணை + பட்டர் - பொரிக்க தேவையாண அளவு

செய்முறை


1. சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வைக்கவும்.

2. வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி அனைத்தையும் அரைத்து அதில் உப்பு பேக்கிங்க் பவுடர் சேர்த்து சிக்கனில் ஊற்றி நன்கு பிசறி , முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முன்று மணி நேரம் ஊறவைக்கவும்

3. மைதா, கார்ன் மாவில் மிளகாய்தூள் மற்றும் உப்பை கலந்து ஊறிய சிக்கனை தண்ணீரை வடித்து இதில் பிரட்டி பொரித்தெடுக்கவேண்டும்.


4.பொரிக்கும் போது தீயை மீடியமாக வைத்து மூடி போட்டு நன்கு வெந்ததும் தீயை ஹயில் வைத்து பொரித்தெடுக்கவும்.

5. சுவையான kfc சிக்கன் லாலி பாப் ரெடி


அறுசுவையில் நான் முன்பு கொடுத்த KFC சிக்கன் லாலிபாப். (step by step)

ஆக்கம்
ஜலீலா


15 கருத்துகள்:

Jaleela Kamal said...

இது ஏற்கனவே போட்ட குறிப்பு தான்.
இது யாருடைய பார்வைக்கும் போகல் அதான் ரீபோஸ்ட் செய்துள்ளேன்.

Kurinji said...

சூப்பர் !!! பார்க்கத்தான் முடியுது அப்படியே எடுத்து சாப்பிட முடிந்த ரொம்ப நல்லா இருக்கும்.

Pongal Feast Event

Kurinji

சாந்தி மாரியப்பன் said...

டேஸ்ட் நல்லாருக்கும்ன்னு குறிப்பை படிக்கையிலேயே தெரியுது..

shalihazubair said...

வாவ். சூப்பர் ரெசிபி.குட்டீசுக்கு கொண்டாட்டம்.
அன்புடன் சித்திஷா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சூப்பர்.
லாலிபாப் செய்முறை சுலபமாயுள்ளது, கே.எஃப்.சி. ஸ்டைலில்.
ஆனால், தலைப்பில் KFC என்று போட்டால்தான்
குட்டீசுக்கு பிடிக்கும் போலருக்கு. அவர்கள் வழியிலேயே
போய்தான் நம் வழிக்கு கொண்டு வரவேண்டியுள்ளது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரெசிபி பாக்கவே நல்லாவே இருக்கு :)

Anonymous said...

பார்கவே ரொம்ப நல்ல இருக்கு

ஆமினா said...

இது நான் ஏற்கனவே செய்து பார்த்தது அக்கா!!!!

சுப்பரா இருந்துச்சு!!!

RAZIN ABDUL RAHMAN said...

ஹோம் மேட் kfc செய்த சகோக்கு,பின்னூட்டமாக ஒரு கப் பூஸ்ட் பார்ஸல்....

நல்லாவே இருக்கு.அதென்ன குழந்தைகளுக்கு மட்டும் பிடிக்கும்..நாங்களும் சாப்டுவோம்ல...

அன்புடன்
ரஜின்

Asiya Omar said...

அருமையாக இருக்கு.இப்பவே செய்து சாப்பிடனும்னு ஆசை தான்.

Vikis Kitchen said...

KFC சிக்கன் பார்த்தாலே பசிக்குது:) சூப்பர்.

நிலாமதி said...

பதிவுக்கு நன்றி ...நானும் செய்துபார்தது.....சுவை சொல்கிறேன்.

திருப்பூர் சரவணக்குமார் said...

பசிய கிளப்பீட்டீங்களே....

Jaleela Kamal said...

நன்றி குறிஞ்சி

முதல் கமெண்ட்டுக்கு மிக்க நன்றி

அமைதி சாரல் படிக்கும் போதே நல்ல இருக்கா செய்து பார்த்துட்டு சொல்லுங்க்பா.

ஷாலிஹா உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

வாங்க் நிஜாமுதீன்
ஆமாம் பிள்ளைகளுக்கு சிக்கன் பிரை தான் ரொம்ப பிடிக்கும் ஆகையால் பல விதங்களில் செய்து பார்ப்பது.
வருகைக்கு மிக்க நன்றி

நன்றி ஆனந்தி
மிக்க நன்றி மஹா விஜய்

நன்றி ஆமினா நான் அறுசுவையில் ஏற்கனவே கொடுத்த குறிப்பு அங்கு அதை செய்து பார்த்திருப்பிங்க்ன்னு நினைக்கிறேன்

ரொம்ப நன்றி ரஜீன் பூஸ்ட குடிச்சதும் ரொம்ப தெம்பாக இருக்கு
குழ்ந்தைகள் என்றில்லை பெரியவர்கலுக்கும் ரொம்ப பிடித்த ஐட்ட்டம் தான்
தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி ஆசியா

நன்றி விக்கி பசிக்குதா உடனே சிக்கன வாங்குங்க் ஈசி தானே.

நிலாமதி வருகைக்கு மிக்க நன்றி
சுவைத்து சொல்லுங்கள்


வாங்க திருப்பூர் சரவணகுமார் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா