Wednesday, March 19, 2014

ராகி ரவை தோசை - Ragi dosai







ராகி தோசை

தேவையான பொருட்கள்
ராகி மாவு ( கேழ்வரகு மாவு) - அரை கப்
அரிசி மாவு - 1 மேசைகரண்டி
ரவை - 2 மேசைகரண்டி
கோதுமை மாவு - ஒரு மேசைகரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒன்று
பச்சமிளகாய் - பொடியாக நறுக்கியது -1
உப்பு தேவைக்கு
கருவேப்பிலை சிறிது
எண்ணை - தோசை சுட தேவையான அளவு

செய்முறை

எண்ணையை தவிர மேற்கண்ட அனைத்து பொருட்களையும் தோசைமாவு பதத்துக்கு கரைக்கவும்.

தோசை தவ்வாவை காயவைத்து மெல்லிய தோசையாக ஊற்றி சுற்றிலும் எண்ணை ஊற்றி நன்கு மொருகலாக சுட்டு எடுக்கவும்.

இதற்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்

தோசையில் தடவி அப்படியே காலை டிபனுக்கு எடுத்து செல்லலாம். ஹெல்தியான டயட் ரெசிபி.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

6 கருத்துகள்:

கோமதி அரசு said...

அருமையான சத்தான ராகி தோசை.
நன்றி ஜலீலா,

திண்டுக்கல் தனபாலன் said...

வாரத்திற்கு 3 முறை ராகி தோசை செய்து விடுவார்கள்...

உங்களின் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி...

ADHI VENKAT said...

சுவையான ராகி தோசை. பகிர்வுக்கு நன்றி.

மாதேவி said...

ஹெல்தியான தோசை.

சாரதா சமையல் said...

ராகி தோசை சூப்பர்!!

Vikis Kitchen said...

ராகி தோசை அருமையா இருக்கு அக்கா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா