கேழ்வரகு (ராகி)இட்லி
தேவையானவை
கேழ்வரகு மாவு - 100 கிராம்
இட்லி மாவு – ஒரு குழிகரண்டி
உளுந்து – 25 கிராம்
வெந்தயம் – கால் தேக்கரண்டி
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
உப்பு – தேவைக்கு
செய்முறை
ராகி மாவை லேசாக வறுத்து கொள்ளவும். உளுந்தையும் வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து மை போல் அரைத்து கொள்ளவும்.
அரைத்த உளுந்துடன் இட்லி மாவு, ராகிமாவையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி (இட்லிமாவு பத்த்தில்)கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
புளித்த மாவில் இட்லி சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லிகளாக வார்க்கவும்.
டயட்டுக்கு ஏற்ற சுவையான டிபன். தக்காளி பூண்டு சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். சர்க்கரை வியாதிகார்களுக்கு ஏற்ற டிபன்.
குறிப்பு: வெளிநாடுகளில் சமைக்கும் பேச்சுலர்கள் மிகச்சுலபமாக செய்து விடலாம். ராகி மாவு எல்லா தமிழ்க்டைகள், ஆதில் சூப்பர் மார்கெட்களில் கிடைக்கின்றன. உளுந்து வெந்தயம் ஊறவைப்பதற்கு பதிலாக மிக்சியில் பொடித்தும் மாவுடன் ஊறவைத்துகொள்ளலாம்.இட்லிமாவுக்கு பதில் அரிசிமாவும் சேர்த்து கொள்ளலாம். ரெடி மிக்ஸ் போல மிக்ஸ் செய்தே புளிக்கவைத்து செய்யலாம். ரொம்ப ஈசியான இட்லி, நல்ல் சாஃப்டாக வரும்.
.
Tweet | ||||||
11 கருத்துகள்:
சர்க்கரை நோய்க்கு ஏற்ற அழகான பதிவாகக் கொடுத்துள்ளீர்கள்.
ராகி மாவை அப்படியே கஞ்சியாக வைத்து மோர் ஊற்றி, உப்பு போட்டு சாப்பிட்டாலே ஜோராகத்தான் உள்ளது.
நான் பெரும்பாலும் தினமும் காலையில் இந்தக்கஞ்சியைத்தான் மிகவும் விரும்பிக் குடித்து வருகிறேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான உணவு அறிமுகம். வாழ்த்துக்கள்.
Wat a healthy and nutritious idli.
wow healthy version idly,thanks for sharing...
"எனக்கு ஏற்ற பதிவு ! நன்றி !சகோ ! வாழ்த்துக்கள் !
பகிர்வுக்கு நன்றி Jaleela.
ராகி இட்லி பார்க்கவே அட்டகாசமாக பஞ்சு பஞ்சாக இருக்கு.சூப்பர்.
கேழ்வரகு இட்லி இதுவரை சாப்பிட்டதில்லை. ஒரு முறை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ராகி இட்லி சூப்பர் அக்கா . பார்க்கும் பொழுதே சாப்பிடனும் போல இருக்கு அக்கா.....
take care sister.your tips are very useful.
take care
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா