அதை தவிர்க்க தேவையான நேரம் மட்டும் டயப்பர் பயன் படுத்தி கொண்டு மற்ற நேரங்களில் கீழே படத்தில் காட்டியுள்ளவாரு செய்து பயன் படுத்தலாம்.
2 மணி நேரத்துக்கு ஒரு முறை துணி நனைந்து இருக்குதான்னு செக் பண்ணனும்.
பிறந்த குழந்தைகளுக்கு 3 மாதம் வரை இருக்கும் இடம் விட்டு அசைய வாய்ப்பில்லை கை காலை ஆட்டி கொண்டு இருப்பார்கள்.
அப்போது கீழே ரப்பர் ஷீட் விரித்து நியுஸ் பேப்பர் கொஞ்சம் திக்காக வைத்து விட்டு சின்ன மெல்லிய துணியை கட்டினால் போதும். ஈரம் ஆனதும் பேப்பரை எடுத்து விட்டு வேர பேப்பர் மாற்றி கொள்ளலாம்.
வெது வெதுப்பான வெண்ணீரில் பஞ்சை நனைத்து துடைத்து விட்டு வேற துணி மாற்றி விட்டு கீழே மறுபடி பேப்பரை மாற்றி விடுங்கள்
துணியை அதிகம் துவைக்க தேவையில்லை, பேம்பரும் செலவாகாது,
குழந்தைகள் இரவில் தூங்கும் போது டயப்பர் தேவைதான் பேம்பர் போடும் போது தேஙகாய் என்னை அல்லது ஆலிவ் ஆயில் தடவி போட்டு விடுங்கள்.
1. குழந்தைகளுக்கு டயப்பருக்கு பதில் நாமே நேப்கின் செய்து பயன் படுத்துங்கள்.
2. அது வெள்ளை கலர் பெரிய சதுர வடிவ நாப்கீனை மடித்து வைத்து பிளாஸ்கிட் அதன் மேல் போடு ஜட்டியும் இருக்கிறது அதை பயன் படுத்தலாம்.
3. இதனால் தேவையில்லாத ரேஷிலிருந்து பாது காத்து கொள்ளலாம்.
4. ஒரு நாளைக்கு நான்கு இருந்தால் கூட போதும், மொத்தமா ஊறவைத்து துவைத்து கொள்ளலாம்.
5. அம்மா பாட்டிகளின் ஷாஃப்டான காட்டன் சேலை யும் இது போல் நாப்கின்கள் நிறைய கிழித்துவைத்து பயன் படுத்தலாம்.
ஒரு சேலையை கிழித்தால் இரண்டுமாதத்துக்கு தேவையான் நாப்கின் துண்டுகள் கிடைக்கும்
6. அதே போல் ஆண்களின் காட்டன் லுங்கியை நன்கு அலசி கிழித்து பயன் படுத்தலாம்.
7.. படத்தில் காட்டியுள்ளபடி செய்து பயன் படுத்தவும்.
ஆக்கம்
ஜலீலாகமால்
(தொடர்ரும்)
Tweet | ||||||
14 கருத்துகள்:
நேப்கின் என்றால் துணியா அக்கா? அது ஈரம் காக்காதா? இல்லை கடையில் என்னவென்று கேட்கனும். எனக்கு 7 மாத குழந்தை இருக்கு. அந்த ஜட்டி கூட என்னன்னு கடையில கேட்கனும்னு சொல்லுங்க பீலீஸ்
//அம்மா பாட்டிகளின் ஷாஃப்டான காட்டன் சேலை யும் இது போல் நாப்கின்கள் நிறைய கிழித்துவைத்து பயன் படுத்தலாம்.
6. அதே போல் ஆண்களின் காட்டன் லுங்கியை நன்கு அலசி கிழித்து பயன் படுத்தலாம்.//
ஆஹா... இது நாள் வரை "அருமையா இருக்கே...ஜலீலாக்கா வலையிலிருந்து படிச்சு செஞ்சியா"ன்னு கேட்ட ஒரியாக்காரர் எல்லாம்.... மெய்யாலுமே ஜலீலாக்கா சொல்லிதான் என் லுங்கிய கிழிச்சியான்னு கேட்கப்போறாரு.... ஆனாலும் நீங்க சொல்லி என்னிக்கு நான் தட்டியிருக்கேன்.... இன்னிக்கே கிழிச்சிர்றேன்..... :)))
இந்த நாப்கினையும் கவனித்து அடிக்கடி மாற்றாவிட்டால் ரேஸஸ் கண்டிப்பாக வருமே.இதற்கு பேம்பர் எவ்வளவோ மேல்.ஈரத்தை அப்சர்வ் செய்து மேற்புறம் டிரையாக இருக்கும்.
நெப்கின் கட்டினால் அடிக்கடி கண்ணும் மருத்துமாக பார்த்து மாற்றியாக வேண்டும்.
அனானி,நேப்கின் என்றால் பருத்தியிலான சதுர வடிவ துணி.எல்லா பேபி ஷாப்புகளிலும் கிடைக்கும்.விலை தரத்திற்கு தகுந்த படி 60 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை இருக்கும்.குழந்தை பிறந்ததும் குழந்தையை சுற்றி வைக்கவும் இதனை பயன் படுத்தி விட்டு பின் குழந்தையின் ஒரு வயது வரை நேப்கின் ஆகவும் பயன் படுத்திக்கொள்ளலாம்.
அவசியமான அதேநேரம், சிம்பிளான(அனைவருக்கும் ஏற்ற) கருத்துக்கள் ஜலீலாக்கா.
ஜலீலா நல்ல டிப்ஸ்.
Thanks for sharing this...
http://recipe-excavator.blogspot.com
ஜலீலா அக்கா உங்களுடை நாப்கின் குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் எனக்கு தெரிந்தவர்களுக்கு தெரிவிக்கிறேன் அக்கா.... வாழ்த்துக்கள் அக்கா...
அனானி கமெண்ட் (சாரி) நான் முபு இதை கவனிக்கல.
துணி தான் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றினால் சரியாக இருக்கும்.
பிலாஸ்டிக் ஜட்டிகள் கடையில் விற்கின்றன.
டயப்பர் ஒத்துக்காத பிள்ளைகளுக்கு இப்படி பயன் படுத்தலாம்
ஒரியா காரர் இத படிகக மாட்டாருன்னு தைரியத்தில் தானே அன்னு எழுதினீங்க
ஆமாம் ஸாதிகா அக்கா நேப்கின் கட்டினால் கண்ணும் கருத்துமாக மாற்றனும். என் பையனுக்கு அப்படி தான் செய்தேன்.
அதான் சிலருக்கு பயன்படும் என்று இந்த டிப்ஸ் போட்டேன்.
பூஸாரே வருகைக்கு மிக்க நன்றி
வருகைக்கு மிக்க நன்றி ஆசியா
மிக்க நன்றீ சங்கீதா நம்பி
விஜி பார்த்திபன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
மற்றவர்களுக்கும் பயன் பட்டால் ரொம்ப சந்தோஷம்/
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா