கரக்கு மொருக்குன்னு சாப்பிட சூப்பாராக இருக்கும். இதை ருசி பார்ர்த்து விட்டால் விடவே மாட்டீங்க..
கருனை கிழங்குன்னு நான் சொல்வது மண்டை சைஸுக்கு பெரிசா இருக்கும். சிலருக்கு இதை அரியும் போது கை அரிக்கும் ஆகையால் புளி தண்ணீரில் கையை நனைத்து கொள்ளனும் என்பார்கள்.
கருனை கிழங்கு சிப்ஸ்
இது எனக்கு ரொம்ப பிடித்த சிப்ஸ்.அம்மா வீட்டில் இருந்து கிரான்மா வீட்டுக்கு போகும் வழியில் பேங்க் வாசலில் தள்ளு வண்டியில் இதை நிறைய பொரித்து கொண்டு இருப்பார். எனக்கும் கிரான்மாவுக்கும், இரண்டு பொட்டலம் வாங்கி சொல்வேன், ஆனால் அது சற்று தடிமனாக இருக்கும்
தேவையானவை
கருனை கிழங்கு - கால் கிலோ
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு தூள் – ½ தேக்கரண்டி (தேவைக்கு)
செய்முறை
கருனைகிழங்கை மேல் தோல் சீவி கழுவு தடிமனாக முன்று இன்ச் அளவுக்கு கட் பண்ணி கொள்ளவும்.
நீளவாக்கில் முன்று இன்ச், அகலம் முக்கால் இஞ்ச் இருக்குமாறு கட் பண்ணி கொள்ளவும்.
எண்ணையை காயவைத்து மிதமான தியில் மொருகலகாக பொரித்து எடுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் உப்பு, மிளகாய் தூள் தூவி நன்கு குலுக்கி விடவும்
மிளகாய் தூளுக்குபதில் மிளகுதூள் மற்றும் அவரவர் விருப்ப்படி சாட் மசாலா, ஆம்சூர் மசாலா இப்படி தூவிக்கொள்ளலாம்.
சிப்ஸ் தயிர் சாதம், புளிசாதம், லெமன் ரைஸ் பண்ணும் போது கண்டிப்பாக செய்வேன். ஆனால் ஓவ்வொருத்தருக்கு ஓவ்வோரு சிப்ஸ் பிடிக்கும். எனக்கு கருனை கிழங்கு சிப்ஸ், என் பெரிய பையனுக்கு வாழைக்காய் சிப்ஸ், சின்ன பையனுக்கு உருளை சிப்ஸ்.
இதில் உள்ள அளவு இரண்டு பேர் சாப்பிடலாம்.
போன பதில் கேட்டு கொண்டபடி சிப்ஸ் செய்து போட்டாச்சு. செய்து பார்த்து உங்கள் பொன்னான கருத்துக்களை தெரிவிக்கவும்.
கருனை கிழங்கு தால்சா
கருனை கிழங்கு வடை
Tweet | ||||||
24 கருத்துகள்:
looks crispy and delicious akka :)
வாவ் !!!!!!!!! மொறு மொறுன்னு சூப்பரா இருக்கு .இப்பதான் அனுப்பியிருக்கேன் கடையில் இருந்து வந்ததும் பொரிசிடுவேன்.
(நான் கேட்டது சுக்காங்காய்.அந்த பெயர்தான் பாக்கெட்ல போட்டிருக்கு
காதிபவனில் வாங்கிய வற்றல் )
பார்க்கவே ரொம்ப நல்லாருக்கு ஜலீலாக்கா..
அருமையான சிப்ஸ்.இதை சேனைகிழங்கு என்று சொல்லுவார்கள்.
Wow super crispy chips.
அட்டகாச சிப்ஸ் !
சிப்ஸ் சூப்பர்.டேஸ்ட் நிச்சயம் அருமையாக இருக்கும்.
இவ்வளவு சிம்பிளா ? நன்றி சகோதரி !
புதுவகையான சிப்ஸ்...
படம் சேனைக்கிழங்கு போல இருக்கே...
கருனைக்கிழங்கு சிப்ஸ் ரொம்பவும் நன்றாக இருக்கிறது ஜலீலா!
மிக்க நன்றி அருனா
ஏஞ்சலுன் ம்ம் சீக்கிரம் பொரிச்சி சாப்பிட்டு விட்டு வந்து சொல்லுங்கள்
சாந்தி பார்க்கவேநல்ல இருககா அப்ப உடனே செய்து சாப்பிடுங்கள்
வருகைக்கு மிக்க நன்றி
ஸாதிகா அக்கா இது சேனை தான் நான் கருனை என்று சொல்வேன்
வருகைக்கு மிக்க நன்றி
வலைஞன் வருகைக்கு மிக்க நன்றி
இராஜராஜேஸ்வரி வருகைக்கு மிக்க நன்றி
ஆசியா செய்து பாருங்கள் ரொம்ப சிம்பில் சூப்பராக இருக்கும்
ஆமாம் திண்டுகல் தனபாலம் என் ரெசிபி எல்லாமே ரொம்ப சிம்பில் அண்ட் டேஸ்டி
வருகைக்கு மிக்க நன்றி
சே குமார் வருகைக்கு மிக்க நன்றி
ஆம் இது சேனை தான்
வாங்க மனோ அக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க் நன்றி
மிகவும் அருமை அக்கா கருணைகிழங்கு சிப்ஸ்.
வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_26.html
Wow...super da....I will try this Ok..:-)
Helen
http://myworldmyhome2012.blogspot.in
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா