(சேனை ) இதை நான் கருனை கிழங்கு என்று தான் சொல்வேன், இதற்ககா கருனையா? சேனையா ?
முன்பு அருசுவையில் ஒரு ஆர்கியுமெண்டே நடந்தது
ஆங்கிலத்தில் Elephant foot, என் பையன் கிட்ட அவன் சின்ன வயதில் சொல்லும் போது அப்ப தான் கே.ஜி 1. என்ன mummy elephant foot fry aaa என்பான்.
பைல்ஸ் பிராப்ளம் உள்ளவர்கள் இந்த சேனைகிழங்கை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
இதை மட்டனுடன் சேர்த்து குருமா வைத்தால் சுவை அபாரமாக இருக்கும்.அதே போல் தால்சாவிலும் சேர்ர்த்து செய்வோம்.மோர்குழம்பு, தயிர்சாதம் ரசம் மோர் சாதத்துக்கு உருளை வறுவல் போல்
கருனை கிழங்கு வறுவல் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் .வெஜ் குருமாவில் கூட நான் சிறிது கருனை கிழங்கு சேர்த்து தான் செய்வேன். புளிகுழம்புக்கு இந்த கருனை கிழங்கை சேர்த்தால் சுவை அபாராமாக இருக்கும்.
பிங்கர் சிப்ஸ் கூட உருளைக்கு பதில் கருனையில் சேர்த்தால் நல்ல கிரிஸ்பி கிடைக்கும்.
உருளை சிப்ஸ் போல
கருனை கிழங்கு சிப்ஸ் முன்பு அடிக்கடி செய்வேன், சூப்பராக மொரு மொருப்பு குறையாமல் இருக்கும்.
கருனை கிழங்கு சிப்ஸ் முன்பு பள்ளி சென்று வரும் வழியில், பேங்க் வாசலில் தள்ளு வண்டியில் சுட சுட சுட்டு விற்பார்கள், பார்தால் ஒரு பொட்டலம் வாங்காம வரமாட்டேன். அதிலிருந்து இந்த சிப்ஸ் மேல் அபார பிரியம் .
அடுத்த குறிப்பில் போடுகிறேன்.
தேவையானவை
கருனை கிழங்கு - கால் கிலோ
பச்சமிளகாய் - ஒன்று
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி(தேவைக்கு)
வெங்காயம் - ஒன்று (பொடியாக அரிந்தது)
தேங்காய் துருவல் - ஒரு மேசை கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி துருவல் - கால் தேக்கரண்டி
மைதா,சோளமாவு, அரிசி மாவு - ஒரு மேசை கரண்டி
பொட்டு கடலை மாவு - ஒரு மேசை கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
கருனை கிழங்கை தோலெடுத்து மண்ணிலாமல் கழுவி பெரிய துண்டுகளாக நருக்கி கால் தேக்கரண்டி உப்பு போட்டு வேகவைத்து ஆறியது தண்னீரை வடித்து மசித்து கொள்ள வேண்டும். சோம்பு,பச்சமிளகாய், தேங்காய் துருவல் கொத்துமல்லி கீரையை அரைத்து கொள்ளவேன்டும். மசித்த கிழஙகில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,அரைத்த விழுது,வெங்காயம், மைதா, சோள,அரிசி, பொட்டு கடலை மாவுகள் அனைத்தையும் போட்டு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். தோசை தவ்வாவில் எண்ணையை ஊற்றி வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும். |
|
28 கருத்துகள்:
//(சேனை ) இதை நான் கருனை கிழங்கு என்று தான் சொல்வேன், // செல்லாது,செல்லாது! :)))))))
அதெப்படி சேனைக் கிழங்க கருணைக்கிழங்குன்னு சொல்லுவீங்க ஜலீலாக்கா? சே.கிழங்கு பெருசா இருக்கும், கருணைக்கிழங்கு சின்னதா இருக்கும்ல?
நான் சேனைக்கிழங்கு வடை செய்ததில்லை, ப்ரோஸன் கிழங்கு வடைக்கு நல்லாவும் இருக்காது. யாம் டிக்கி சூப்பரா இருக்கு!
அருமையாக செய்து காட்டி இருக்கீங்க ஜலி.
சத்தான, சுவையான, கொஞ்சம் வித்தியாசமான சேனைக்கிழங்கு வடை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜலீலாக்கா.
சேனை கிழங்கு இல்லை, இல்லை நீங்கள் சொல்லும் கருணை கிழங்கு வடை நன்றாக இருக்கிறது.
சிப்ஸ் மிக நன்றாக இருக்கும். அடுத்த் பதிவுக்கு காத்திருக்கிறேன்.
நானும் கருணைக்கிழங்கு என்றுதான் சொல்வேன் .ஆனா இங்கே ரொம்ப விலை .மண்ணுக்கு கீழே விளையும் கிழங்குகளில் மிகவும் சத்து உள்ளது கருணைக்கிழங்கு ..நானும் சிப்ஸ் ரெசிப்பிக்காக ஆவலுடன் காத்திருக்கேன் .
(ஜலீலா சுக்காங்காய் வத்தல் இருக்கே அதில் என்ன செய்யலாம் ).
SUPER! vada attagasama irruku..
அம்மாவும் இதுபோல் செய்வாங்க,ரொம்ப பிடிக்கும்...நாங்களும் கருணைகிழங்குன்னு தான் சொல்வோம்...
ஜலீலா ரெசிப்பி சூப்பர்.
சேனைக்கிழங்கு வேறு,கருணைக்கிழங்கு வேறு தானே!..நீங்க சொல்ற செய்முறை எல்லாம் பார்க்கும் பொழுது அது சேனைக்கிழங்கு தான்.கிழங்கு படத்தை காட்டினால் சேனையா கருணையான்னு கண்டுபிடிச்சிடலாம்.
பயனுள்ள சமையல் ! நன்றி சகோதரி !
கருணை கிழங்கு வடை நன்றாக இருக்கிறது.
உங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சமயமிருப்பின் பார்த்து கருத்துக் கூறவும். ந்ன்றி.
http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.html
சேனை கிழங்கு வடை ரொம்ப நல்லா இருக்கு அக்கா . பார்க்கவே சாப்பிட தோணுது. நான் இதை சப்பாத்தி கூட தொட்டும் சாப்பிடுவேன்.
சூப்பராக இருக்கே ஜலீலாக்கா.. ஆனா இதில் கருணைக்கிழங்கு என எதைச் சொல்லி இருக்கிறீங்க எனப் புரியவில்லை.... முழுசா, கிழங்கின் படத்தைப் போட்டிருக்கலாமே..
எங்கட ஊரில் கருணைக் கிழங்கு என்போம், அது கிழங்கு தோல் நீக்கியபின் மஞ்சள்/ஒரேஞ் நிறமாகத்தான் இருக்கும், தோல் நீக்கிக் கழுவினால், கை எல்லாம் சுணைக்கும்... அதுதான் கருணைக்கிழங்கு.
மகி இது கருனை கிழங்கு தான் நானும் சொல்வேன்
ஆமாம் இந்த டிக்கி ரொம்ப் சூப்ப்ராக வந்தது முன்பு அடிக்கடி செய்வேன்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க் நன்றி மகி.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா
புவனேஸ்வரி வாங்க வருகைக்கு மிக்க நன்றி. ஆம் இது சற்று வித்தியாசமே..
கோமதி அரசு வருகைக்கு மிக்க நன்றி
சிப்ஸ் வந்து கொண்டே இருக்கு....
ஏஞ்சலின் உங்களை இங்கு பார்த்ததில் மிக்க மகிழ்சி
சிப்ஸ் செய்து சாப்பிட்டாச்சு ஆனால் இங்கு வரதான் கொஞ்சம் லேட்
சுங்கங்காயா? சுண்டைக்காயா??
பிரியா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
வருகைக்கு நன்றி மேனகா, இதில் சேர்த்துள்ள பொருட்கள் என் இஷ்டத்துக்கு நான் சேர்த்தது.
ஆசியா உஙக்ள் பாராட்டுக்கு நன்றி
கருனை கிழங்கு நல்ல மண்டை சைஸுக்கு இருக்கும் அதை தான் சொல்றேன்
தொடர் வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்
மிக்க நன்றீ காஞ்சனா
கனேஷ் சார் என்னை வலைச்சரத்தில் அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்
ஆமா விக்கி இதை சாண்ட்விச் போல் காலை உணவுக்கு நான் எடுத்து செல்வேன்
நல்ல இருக்கும்.
பேபி அதிரா வாங்கோ வாங்கோ வந்தது
ரொம்ப ஜந்தோஜம்
அதிரா மண்டை சைஸுக்கு பெருசா இருக்கும்
இது படம் எப்பவாவது இனைக்கிறேன்
வாங்கியதும் காலை வேலைக்கு செல்லும் அவசரத்தில் கிளீன் பண்ண் முடியாது முதலே வெட்டி விட்டேன்
அடுத்த முறை படம் இனைக்கிறேன்
///எங்கட ஊரில் கருணைக் கிழங்கு என்போம், அது கிழங்கு தோல் நீக்கியபின் மஞ்சள்/ஒரேஞ் நிறமாகத்தான் இருக்கும், தோல் நீக்கிக் கழுவினால், கை எல்லாம் சுணைக்கும்... அதுதான் கருணைக்கிழங்கு.///
அதே அதே
jaleela akka,
epdi irukeenga?naan super.paapa piranthurukaa.per varshini.inum 1 year kuda aagala.spending time with her.adhan system kita kuda vara neram kidaikala...will post soon.niabagam vachu visarichathuku nandrika..
அருமை.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா