கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு. இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .
ஸ்ட்ராபெர்ரி பாதாம் அகர் அகர் புட்டிங்
Strawberry Badam Agar Agar Pudding
தேவையான பொருட்கள்
- அகர் அகர் (கடல் பாசி) – 10 கிராம்
- சர்க்கரை - 100 கிராம்
- பால் – 500 மில்லி
- ஸ்ட்ராபெர்ரி எசனஸ் – தேவைக்கு
- பொடியாக நறுக்கிய பாதாம் – தேவைக்கு
செய்முறை
அகர் அகரை பொடி செய்து சிறிது தண்ணீரில் ஊறவைத்து பால் சேர்த்து நன்கு கட்டியாகும் வரை காய்ச்சவும.சர்க்கரை சேர்க்கவும்.
ஸ்ட்ராபெர்ரி எசன்ஸை சேர்த்து ஒரு பெரிய தட்டில்
காய்ச்சிய அகர் அகரை ஊற்றி பாதாம் தூவி ஆறவைத்து குளீரூட்டியில் குளிர வைத்து வேண்டிய வடிவில் கட் செய்யவும்.
2016 முதல் போஸ்ட்
Tweet | ||||||
2 கருத்துகள்:
ரெம்ப கலர்புல் புட்டிப் ஜலீலா!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பிரியா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா