Tweet | ||||||
Wednesday, January 6, 2016
அவகோடா பாதம் சட்னி - Avocado Badam Chutney - Paleo
பேலியோ டயட் பழவகைகள் எதுவும் எடுத்து கொள்ள கூடாது , ஆனால் அவகோடா பழம் சாப்பிடலாம், இதை பால் சேர்த்து மில்க் ஷேக் போல அல்லது தயிர் சேர்த்து ஸ்மூத்தி போல குடிக்கலாம்.
சாலட் செய்து சாப்பிடலாம். பார்பிகியி , ஃப்ரை வகைகளுக்கு சட்னியாகவும் அரைத்து சாப்பிடலாம்.
அவகோடா தேங்காய்
சட்னி – Avocado Coconut Chutney
Avocado Dip
for Grill Item
தேவையான பொருட்கள்
அவகோடா பழம் - 1
தேங்காய் துருவியது
– கால் கப்
பச்சமிளகாய் -1
இஞ்சி – சிறிய
துண்டு
கொத்துமல்லி கருவேப்பிலை
– அரை கப்
லெமன் சாறு – ஒரு
மேசைகரண்டி
பாதாம் - 15
செய்முறை
கொத்துமல்லி கருவேப்பிலையை
மண்ணில்லாமல் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாதாம் பருப்பை
வெண்ணீரில் ஊறவைத்து தொலெடுத்து கொள்ளவும்.
அவகோடா பழத்தை
கொட்டை மற்றும் தோலை எடுத்து விட்டுசேர்க்கவும்.
மிக்சியில் பாதாம்,
அவகோடா, கொத்துமல்லி கருவேப்பிலை, உப்பு , பச்சமிளகாய், தேஙகாய் சேர்த்து அரைக்கவும்
கடைசியாக லெமன் சாறு கலந்து ஒரு திருப்பு திருப்பி எடுக்கவும்.
கவனிக்க:
இது பேலியோ கட்லெட்,
வடை,பேன்கேக், சிக்கன், மட்டன், மீன், இறால் போன்ற கிரில் வகைகளுக்கு பக்க உணவாக சாப்பிடலாம்.
காரம் அதிகம் விரும்புவோர்
பச்சமிளகாய் இரண்டாக போட்டு கொள்ளலாம். நான் காரம் அதிகம் எடுக்க மாட்டேன்.
Paleo Diet Recipes
ஆக்கம்
ஜலீலாகமால்
Subscribe to:
Post Comments (Atom)
6 கருத்துகள்:
அருமை
என் மருமகள் ஒருமுறை அவகோடவை துருவி போட்டு சப்பாத்தி செய்தாள். சட்னி செய்தது இல்லை.எங்கள் ஊரில் கிடைக்காது , கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.
புதுமையா இருக்கு... ஆனா ரொம்பக் காஸ்ட்லியாச்சே அம்மா...
கோமதி அக்கா உங்கள் சப்பாத்தியில் துருவி போட்டு செய்தார்களா?
இது இங்க துபாயில் இந்த பழம் நிறைய கிடைக்கும்.
மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
சே குமார் ஆமாம் காஸ்லி தான் ஆனால் வாரம் ஒரு முறை சாப்பிடாலாமே , பேலியோ டயட்க்கு அவகோடா பழம் மட்டும் தான் எடுக்கனும். அதை நாம இது போல் கிரில் , ப்ரை வகைகளுக்கு ஹமூஸுக்கு பதில் செய்து சாப்பிடலாம்.
வருகைக்கு மிக்க நன்றி..
புதிய குறிப்பு.நல்ல பகிர்வு.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா