.மட்டர் (பட்டாணி பருப்பு) தால் வடை
மசால்வடை
Mutter dal vadai
மசால் வடை செய்ய கடலை பருப்புக்கு பதில் பட்டாணி பருப்பு பயன் படுத்தினால் சுவை அபாரமாக இருக்கும்.
இந்த குறிப்பு போனவருடம் நோன்புகால சமையல் குங்குமம் தோழியில் வெளியானது.
தேவையான பொருட்கள்
பட்டாணி பருப்பு - ஒரு டம்ளர்
இஞ்சி - இரண்டு அங்குலம் அளவு
பச்ச மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பூண்டு - முன்று பல்
பட்டை - ஒருசிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
சோம்பு- அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை – சிறிது
செய்முறை
1. கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறியதும் தண்ணீர் முழுவதையும் ஒரு வடி தட்டில் வடிக்கவும்.
2. முன்றில் ஒரு பாகம் கடலை பருப்பை எடுத்து அத்துடன் கிராம்பு, பட்டை,இஞ்சி, பூண்டு , சோம்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.அப்போது தான் எல்லாம் மசாலாவும் ஒன்று சேரும்.
3. இப்போது மீதி உள்ள கடலை பருப்பை மிக்சியில் விப்பரில் இரண்டு முறை திருப்பு திருப்பி எடுக்கவும், மிக்சியை ஓடவிடமல் இப்படி திருப்பி எடுத்தால் ஒன்றும் பாதியுமாய் இருக்கும்.
4. அரைத்த மாவில் வெங்காயம் பச்சமிளகாய், கருவேப்பிலை அரிந்து சேர்த்து, நன்கு பிசைந்து ஐந்து நிமிடம் ஊற வைத்து தேவைக்கு ஏற்ப பெரிய வடைகளாகவோ,சிறிய வடைகளாகவோ பொரித்துஎடுக்கவும்.
சர்க்கரை பொங்கல் ரெசிபியை கிழே உள்ள லின்கில் சென்று பார்க்கவும்.
ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்
மசால் வடை மொருகலாக வரவேண்டும் என்றால் தண்ணீர் நல்ல வடித்து மாவை முன்று பாகமாக பிரித்து ஒரு பாகம் நல்ல மைய்யாகவும் , ஒரு பாகம் முக்கால் பதமாகவும், ஒரு பாகம் அரை பதமாகவும் அரைத்து கலந்தால் கிரிஸ்பியாக ஹோட்டலில் செய்வதை விட மிக அருமையாக வரும்.
கஞ்சி , பொங்கல்,உப்புமா போன்றவைகளுக்கு ஏற்ற சூப்பரான ஸ்நாக்ஸ் வடை, இதை கடலை பருப்பிலும் செய்யலாம் பட்டாணி பருப்பிலும் செய்யலாம்.இதில் நான் காரம் அவ்வளவாக சேர்க்கவில்லை. காரம் அதிகம் தேவைபடுபவர்கள். பச்சமிளகாய் அல்லது சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுஙக்ள், இதில் சேர்த்துள்ள இஞ்சி பதில் காஞ்சமிளகாய் ( வரமிளகாயும்) சேர்த்து அரைக்கலாம்.
தமிழ் நாட்டில் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டி, தெருவுக்கு தெரு எந்த முக்கு சந்துக்கு போனாலும் மசால் வடை கிடைக்கும்.
இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு கஞ்சிக்கு ஏற்ற சூப்பரான காம்பினேஷன் இது.
தமிழர் திருநாளான பொங்கலின் போது போகி பண்டிகை அன்று அவர்கள் செய்யும் மெனு
மசால்வடை
பாயாசம்
Tags: Road side Snacks,Festival Recipe, பண்டிகை கால சமையல்
Jaleela Banu, Dubai
http://www.chennaiplazaki.com
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
1 கருத்துகள்:
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா