ட்ரை கலர் தோசை
– ஆம்லேட் தோசை
குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொண்டு சொல்ல இது போல் கலர்ஃபுல்லாக செய்து கொடுத்தால் அம்மாமார்களின் கவலை தீர்ந்தது, உங்கள் வீட்டு பிள்ளைகளின் டிபன் பாக்ஸ் காலி ஆகி ஒன்ஸ்மோர் கேட்பார்கள்.
தேவையான பொருட்கள்
தோசைமாவு தேவைக்கு ( 1 கப் (அ) 2 கப்)
தக்காளி கேரட்
சட்னி
வதக்கி அரைகக
எண்ணை – அரை தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை பொடி
– அரை தேக்கரண்டி
தக்காளி – முன்று
கேரட் – 1
மிளகாய் தூள்
– கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல்
– 2 மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
காஞ்ச மிளகாய் - 2
பூண்டு – 1 பல்
தாளிக்க
எண்ணை – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை
- சிறிது
உளுந்து - அரை தேக்கரண்டி
செய்முறை
தக்காளி பொடியாக
அரியவும், கேரட்டை துருவிவைக்கவும்.
வதக்க கொடுத்துள்ளவைகளை
வதக்கி ஆரவைக்கவும்.
ஆறியது மிக்சியில்
கட்டியாக அரைத்து எடுக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை
தாளித்து அரைத்த சட்னி கலவையை சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்,
பாலக் பெஸ்டோ
/ டிப் . சட்னி
தேவையானவை
பாலக் கீரை – ஒரு
கப்
உப்பு – தேவைக்கு
பச்சமிளகாய் –
இரண்டு
பூண்டு – 1 பல்
பெரியது
வால்நட் – 5
சர்க்கரை – ஒரு
பின்ச்
செய்முறை
பாலக் கீரையை கழுவி
சுத்தம் செய்து தண்ணீரை வடிக்கவும்.
வெண்ணீரை கொதிக்கவிட்டு
, ஒரு சிட்டிக்கை உப்பு, சர்க்கரை, இட்லி சோடா கால் சிட்டிக்கை சேர்த்து பாலக்கீரையை
சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இரக்கி வெண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த நீரில்
கழுவி மீண்டும் தண்ணீரை வடிக்கவும்.
மிக்சியில் வடித்த
பாலக், பச்சமிளகாய், தேவைக்கு உப்பு, பூண்டு , வால்நட் சேர்த்து நன்கு அரைக்கவும்.
கிரீன் தோசைக்கான
பில்லிங்கும், ரெட் தோசைக்கான பில்லிங்கும் ரெடி
தேவையான அளவு தோசை
மாவை முன்று பாகங்களாகா பிரித்து
ஒரு பாக மாவுடன்
பாலக் கலவையை கலக்கவும்.
அடுத்த பாக மாவுடன்
ஏதும் கலக்க வேண்டாம்.
அடுத்த பாக மாவுடன்
தக்களி கேரட் சட்னியைகலந்து வைக்கவும்.
தவ்வாவை சூடு படுத்தி
உள்ளங்கை சைஸ் குட்டி குட்டி தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
குழந்தைகளுக்கு
லன்ச் பாக்ஸ்க்கு தோசை தனியாக சட்னி தனியாக வைத்து அனுப்பாமல் இப்படி அழகாக மாவிலேயே
சேர்த்து கலர்ஃபுல்லாக அனுப்பலாம்.
மற்றொரு வகை
கலவையை மாவில்
கலக்காமல் முதலில் தோசைமாவை தவ்வாவில் ஊற்றி விட்டு முதலில் வட்ட வடிவமாக ரெட் சட்னியை
சுழற்றவும், அடுத்து வெள்ளை மாவை அதை சுற்றிலும் ஊற்றவும்.
அடுத்து பாலக்
பெஸ்டோ கலந்த மாவை சுற்றிலும் ஊற்றவும்.
Independence Day Recipe அன்று போஸ்ட் செய் ய செய்து வைத்து பப்லிஷ் பண்ண மறந்துட்டேன்.
இந்த மூவர்ண தேசிய கொடியில் ரெசிபி செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். நாட்டு பற்று. என் பள்ளி சீருடை கலரும் இது தான்.
இது என் மகனுக்காக அடிக்கடி இப்படி செய்வது.என் மகன் ஹனீபுதீனுக்கு இன்று பிறந்த நாள் தூஆ செய்து கொள்ளுங்கள்,
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
4 கருத்துகள்:
கலர்கலராய் அழகாய் இருக்கிறது...
அருமை அக்கா...
கடைசி படம் சூப்பரா இருக்கு...
ஹனிபுதீனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.
குழந்தை நல்லா இருக்கட்டும். மனப்பூர்வமானஆசிகள்.
வாவ் செம சூப்பர் ஐடியா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா