வரகரிசி - வரகு அரிசி பொங்கல்- Kodo Millet Pongal
- வரகரிசி – 200 கிராம்
- பாசி பருப்பு – 75 கிராம்
- பெருங்காயம் – 2 சிட்டிக்கை
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிக்கை
- உப்பு - தேவைக்கு
- தண்ணீர் – 4 டம்ளர் ( 800 மில்லி)
நெய் – ஒரு தேக்கரண்டி
தாளிக்க
- எண்ணை + நெய் – 2 மேசைகரண்டி
- சீரகம்- ஒரு தேக்கரண்டி
- மிளகு – ஒரு தேக்கரண்டி
- பச்சமிளகாய்- பொடியாக அரிந்தது
அரை தேக்கரண்டி
- இஞ்சி – பொடியாக அரிந்தது அரை தேக்கரண்டி
- பொடியாக அரிந்த பாதாம் , பிஸ்தா – 2 மேசைகரண்டி
செய்முறை
- பாசிப்பருபை லேசாக வருத்து கொள்ளவும், வரகரிசி பாசிப்பருப்பு இரண்டையும்
களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- குக்கரில், அரிசி பருப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு, நெய் சேர்த்து
800 மில்லி தண்ணீர் சேர்த்து மூடி போடாமல்
கொதிக்கவிட்டு பிறகு குக்கரை மூடி 3 , 4 விசில் விட்டு இரக்கவும்.
- ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து நன்கு கிளறி விட்டு கட்டியில்லாமல்
கிளறி வைக்கவும்.
- தனியாக சிறிய தாளிக்கும் சட்டியில் மேலே தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து
தாளித்து வெந்த பொங்கலுடன் சேர்த்து கலக்கி இரக்கவும்.
- சுவையான வரகரிசி பொங்கல் ரெடி.
வரகரிசி - வரகு அரிசி என்பது பழங்கால மக்கள் பயன்படுத்திய ஆரோக்கியமான அரிசிவகை,
இந்த ஆரோக்கியமான அரிசி வகைகளான குதிரைவாலி,சாமை, வரகரசி, இப்போது மக்களிடையே மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளது சந்தோஷமான விடயம்.
இது சென்னையில் நீல்கிரீஸில் கிடைக்கும், வாங்கி செய்து பாருங்கள்.
வரகரிசி பொங்கல்/Kodo millet pongal
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
6 கருத்துகள்:
சத்துள்ள பொங்கல்... நன்றி சகோதரி...
Very healthy n tasty pongal !!
தனபாலன் சார்
மேனகா
மிக்க நன்றி
நன்றாக இருக்கிறது அக்கா...நான் இதுவரை சிறுதானியங்கள் சமைத்ததில்லை...இங்கும் கிடைக்கிறது...உங்க பொங்கலை செய்து பார்க்கிறேன்..
சுவையான சத்துள்ள பொங்கல் ரெசிபிக்கு நன்றி.
சத்தான பொங்கல் பகிர்வு.
அருமை அக்கா...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா