Saturday, August 29, 2009

பிளெயின் கடல்பாசி (ரூ ஆப் ஷா) - rooapsa agar agar
தேவையான‌ பொருட்க‌ள்கடல் பாசி = 10 கிராம்
தண்ணீர் = முன்று டம்ளர்
ரூ ஆப் ஷா = ஒரு குழி கர‌ண்டி
சர்க்கரை = தேவையான அளவு
பாத‌ம் , பிஸ்தா = வேண்டிய நட்ஸ் வகைகள் = ஒரு மேசை கரண்டி
செய்முறை


1. ஒரு வாயகன்ற சட்டியில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசியும் சேர்த்து + சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.


2. நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.


3. நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இரக்கவும்.வடிகட்டி கொள்ளவும்.மீதி அதில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடலாம்.


4. இப்போது ரூ ஆப் ஷா சேர்த்து, ந‌ட்ஸ் வ‌கைக‌ளை பொடியாக‌ தூவி ஒரு த‌ட்டில் ஊற்றி ஆற‌வைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்க‌வும்.


5. வேண்டிய‌ வ‌டிவில் க‌ட் செய்து சாப்பிட‌வும்.


குறிப்பு

இந்த கடல்பாசியை தேங்காய் உடைத்த தன்ணீர், இளநீர், ஜவ்வரிசி,டேங்க்,மற்றும் ரஸ்னா ஜுஸ் பவுடர்கள், பால் சேர்த்து பல வகையாக தயாரிக்கலாம்.

அதில் பழங்கள் போட்டு செய்தால் இன்னும் சுவை கூடும்.கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது.

நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது.


linking to Agar Agar Recipe contest sponsored by Marine Chemicals , Kochi. www.Indiaagar.com hosted at Food Corner
 

17 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க மத்த நண்பர்கள் சார்பாக!!

seemangani said...

//வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது.

நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது //

நன்றி....

SUMAZLA/சுமஜ்லா said...

ரமலானுக்கேற்ற உணவு அக்கா!

Jaleela said...

நன்றி ராஜ் (மற்றவர்கள் எல்லோருக்கும் சேர்த்தா?)

Jaleela said...

சீமான் கனி செய்து பார்த்து சொல்லுங்கள்\

தவறாமல் பதில் அளித்தமைக்கு நன்றி

Jaleela said...

சுஹைனா வந்து பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

ரூ ஹஃப்ஸா - எனக்கு பிடித்த ஒன்று

இதையும் செய்து பார்த்திடறோம்.

S.A. நவாஸுதீன் said...

இது நாங்களும் செய்வதுண்டு. நன்றி சகோதரி

Jaleela said...

சகோதரர் நட்புடன் ஜமால் இது பால் சேர்க்காமல் செய்த்தது. ரொம்ப ஈசியா வேலை முடிந்து விட்டது.

Jaleela said...

சகோதரர் நவாஸ் இதில் நோன்பு பிடிக்கும் சின்ன பிள்ளைகளை உற்சாகப்படுத்தும் இது போல் கலர் கலர் என்றால், ரெடி புட்கலர் சேர்ப்பத்ற்கு பதில் இது நேச்சுரலா ரூ ஆப் ஷா ஊற்றீயதால் ரெட் கலர் நல்ல வந்துவிட்டது.

smiley said...

ரூ ஆப் ஷா means ????

smiley said...

ரூ ஆப் ஷா என்றால் என்ன ? அது எங்கு கிடைக்கும்

Jaleela said...

ரூ ஆப்ஷா என்பது. ரோஸ் சர்பத் போல், நன்னாரி எஸன்ஸ் போல் அதுவும் ஒரு எஸன்ஸ்

smiley said...

Dear Jallela Akka

Thanks

goma said...
This comment has been removed by the author.
Torviewtoronto said...

thank you for linking this delicious dessert
http://torviewtoronto.blogspot.com/2011/04/food-palette-series-pink.html

Amy said...

This looks delicious,specially I like the pretty colour...
Thanks for linking with contest & good luck with your entry!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா