வெளிநாடுகளில் நிறைய பெண்கள் வீட்டில் வேலைகளை முடித்து விட்டு தனியாக உடகார்ந்து பொழுது போகாமல் இருக்கிறார்கள், டிவி, டிவிய விட்டா கம்பியுட்டர், கை வேலையே தெரியாதவர்களும் இது போல் சின்ன சின்ன வேலையை எளிதாக செய்யலாம். எல்லோருக்கும் கை வேலை செய்ய ஆசை தான் ஆனால் சிலர் தான் அதில் கைதேர்ந்து இருக்கிறார்கள், யார் நம்ம பாயிஜா, ஹர்ஷினி அம்மா போல் அவர்களை போல் போட முடியவில்லை என்றாலும் இது போல் போட்டா ஓரள்விற்கு நமக்கும் எம்ராய்டரி தெரியுதுன்னு சந்தோஷ பட்டு கொள்ளலாம். இது போல் ஒரு ஜான் தூரத்திற்கு ஐந்து ஐந்து கல்லாக வைத்து பூப்போலும் கல் வைக்கலாம். இதற்கு கரு நீலம் (அ) பச்சை கலர் சேலைகள் நல்ல எடுப்பாக தெரியும். தேவையான பொருட்கள் பிக்கர் மல்டி கலர் கற்கள் (அ) வெள்ளை கற்கள் பிளெயின் சேலை முதலில் கல்லை அதன் கோப்பிலிருந்து தனியாக பிரித்து வைக்கவும். பிளெயின் சேலையில் ஆங்காங்கே குறித்து முதலில் உங்களுக்கு பிடித்தமான பூவை வரைத்து சங்கிலி தையலால் தைத்து கொள்ளவும். பிறகு கோருக்கும் கோப்பில் நான்கு மூலை இருக்கும் அதை சேலையின் பின்புறம் மாட்டவும். அதன் மேலே பிரித்து தனியாக வைத்துள்ள கல்லை பதித்து பிக்கர் கொண்டு நான்கு மூலையையும் அழுத்தி விடவும். இது முதலில் வைக்கும் போது கொஞ்சம் சிரமமாக இருக்கும், வைக்க வைக்க பழகிடும். எம்ராய்டரி பூ போட ஒரு சங்கிலி தையல் மட்டும் தெரிந்தால் போதும். நமக்கு விருப்பமான பூவை வரைந்து இது போல் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ஒதுக்கி போட்ட நேரம் ஈசியாக போகும். நமக்கும் நாமே போட்டோம் என்ற சந்தோஷமும் இருக்கும். இது போல் சேலையின் ஓரத்தில் (அ) சுடிதார் கை , கழுத்து பாகங்களில் மணி வைத்தும் தைக்கலாம்.
Tweet | ||||||
12 கருத்துகள்:
ஆக மொத்தம் எங்க தலையில கல்லு விழாம இருக்கணும் !!!
ஆஹா!!!. இப்போ புது ப்ளைன் புடவையும் கல்லும்ல வீட்ல கேப்பாக
ஜலீலா அக்கா ரொம்ப ஈஸியா சொல்லி குடுத்து இருகீங்க...நல்லா இருக்குகா அக்கா... எனக்கும் இப்போ எம்ராய்டரி எல்லாம் போடனும் போல ஆசை வந்துருச்சு :-)....இப்போ வெளியூர் பயணம்.... அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கனும்.
ஆக மொத்தம் எங்க தலையில கல்லு விழாம இருக்கணும் !!!
//ஹிஹி ஏற்கனவே வாங்கியதாலா?/
//அட இந்த குசும்பு தானே வேண்டாம், ராஜ் உங்கள் ஷூ லேசில் என் பின்னூட்டத்தை உங்கள் ஜக்கம்மா ஏத்துக்கல.
//ஆஹா!!!. இப்போ புது ப்ளைன் புடவையும் கல்லும்ல வீட்ல கேப்பாக//
உங்களை விட்டு தனியா பிரிந்து இருக்காங்க வாங்கி கொடுத்தா அவர்களுக்கும் டைம் பாஸ் ஆகும்,
அப்படி ஒன்றும் அதிகம் இல்லை.
சேலை (200 லிருந்து 300)
கல் 1000 வாங்கினால் 3 சேலைக்கு வைக்கலாம்.
இல்லை வீட்டில் பயன் படுத்திய மசூர் சில்க் மற்றும் பட்டு புடவைக்கு கூட வைக்கலாம் நல்ல ரிச்சாக இருக்கும்.
என் தங்கைக்கு கரு நீல புடவையில் தலைப்பில் முன்று முன்று கல் பதித்து
வைத்து கொடுத்தேன் ரொம்ப அருமையா இருந்தது.
ஹர்ஷினி அம்மா இது செய்து வைத்து ரொம்ப நாள் ஆகுது நிறைய படம் உண்டு இது வரை போடுவதே போதும் போதும் என்றாகி விட்டது.
நீங்க எப்படி தான் போடுகிறீர்களோ இதை போடும் போது பாயிஜாவையும், உஙக்ளையும் தான் நினைத்து கொண்டேன்.
தையல் தைத்து பழக பிலெயின் சேலை வாங்கினேன்,
லெமென் யெல்லாவில் பெயின்ட் செய்து சுடி தைத்தேன்.
பிஸ்தா கலரின் சில்வர் பீட் கழுத்துக்கும், கையிக்கும் வைத்து தைத்தேன்.
சேலையில் கல் எல்லா தங்கைகளுக்கும் வைத்து கொடுத்தேன்.
எம்ராயிடரி சங்கிலி தையல் மட்டும் தான் நல்ல தெரியும் மற்றது கற்றேன் ஆனால் எப்படி போடுவது என்று மறந்து விட்டது.
அந்த பிஸ்தா கிரீன் எம்ராய்டரி மட்டும் மதியம் லன்ச் அவரில் தினம் ஒரு பூ போட்டு முடிந்தேன்.
இது கல் வைக்கும் போது என் பையன் வீடியோவும் எடுத்தான், அந்த பைஅயிலை இனைக்க முடியல/
அக்கா இவ்வளைவும் சொல்லிட்டு அவ்வளவுதான்னும் சொல்லரீங்கலே .... இதை படிக்கும் போதே ஆபிஸ் வேலையும், வீட்டு வேலையும் முடித்து எப்படிதான் இப்படி நேரம் கிடைக்குதோன்னு இருக்கு அக்கா !!!!!
//ராஜ் உங்கள் ஷூ லேசில் என் பின்னூட்டத்தை உங்கள் ஜக்கம்மா ஏத்துக்கல.//
ஒரு வேளை இந்த பிரபல பதிவர்களை ஏத்துக்கமாட்டேங்குறாங்களோ? கேட்குரேன்..
ஆமாம் ராஜ் கேட்டு சொல்லுங்கள்.
முன்று முறை ட்ரை பண்ணேன்,
(ஷூ லேஸில் இத்தனை விஷியம் இருக்கா எம்ட்ராயட்ரி போல)
இத இத்தனை பொருமையா போடுபவர் யார்?
இப்ப எதுவும் செய்வதில்லை முயற்சி செய்கிறேன் ஆனா முடியல, நேரம் சரியா இருக்கு.
உங்கள் உள்ள தோடு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும், முன்பு ஒரு சமையம் மேட்சிங் இல்லை என்றால் போடவே மாட்டேன்.
சூப்பர்,நல்லா அழகாவும்,ஈஸியாகவும் சொல்லி குடுத்திருக்கிங்க ஜலிலாக்கா!!
//சூப்பர்,நல்லா அழகாவும்,ஈஸியாகவும் சொல்லி குடுத்திருக்கிங்க //
நன்றி மேனகா/
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா