அரைக்க
நன்கு பழுத்த தக்காளி = நான்கு
இஞ்சி = ஒரு அங்குல துண்டு
காஞ்ச மிளகாய் = ஒன்று
தேங்காய் துருவல் = ஒரு மேசை கரண்டி
உப்பு = சிறிது
தாளிக்க
எண்ணை = அரை தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
பெருங்காயம் = ஒரு பின்ச்
செய்முறை
தக்காளியை பொடியாக அரிந்து, இஞ்சியை தோல் நீக்கி பொடியாக அரிந்து அத்துடன் தக்காளி,உப்பு, காஞ்ச மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.
சுவையான தக்காளி இஞ்சி சட்னி ரெடி
குறிப்பு
இது கர்பிணி பெண்கள் வாய்க்கு ருசி படும்.தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும், செய்வதும் சுலபம்.
எல்லாவகையான தோசை அடைக்கும் தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.
படம் பிறகு சேர்க்கப்படும்
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா