Wednesday, August 5, 2009

லெமன் லாலி பாப் சிக்கன் - lemon loli pop chicken



தேவையான பொருட்கள்

சிக்கன் லாலி பாப் - 12 பீஸ் (லெக் பீஸ்)
லெமென் - இரண்டு
மிளகாய் தூள் = ஒரு மேசை கரண்டி

உப்பு தூள் - ஒன்னறை தேக்கரண்டி (தேவைக்கு)
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரன்டு தேக்கரண்டி
கார்ன் பிளார்(சோள) மாவு - இரண்டு மேசை கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணை - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
சோயா சாஸ் - ஒரு தேகக்ரண்டி



செய்முறை


1.சிக்கன் லெக் பீஸை சுத்தமாக கழுவி ஆழமாக இரண்டு கீரல்கள் போட்டு ஒரு எலுமிச்சையில் உள்ள சாறை ஊற்றி பத்து நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2.முதலில் லெமென்,உப்பு,கார்ன் மாவு ,அரிசி மாவு சேர்த்து நன்கு பிசறவும்.

3.பிறகுமிளகு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய் தூள், எண்ணை சேர்த்து பிசறவும்.


4.சிக்கனை எல்லாமசாலாக்களும் ஒரு சேர பிறட்டியதும் முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.


5.நன்கு ஊறிய சிக்கனை எண்ணையை காயவைத்து டீப் பிரை செய்யவும்.

6.நல்ல எலுமிச்சையின் மணத்தில் குழந்தைகளுக்கு பிடித்த லாலி பாப் ரெடி.வும்



குறிப்பு:



1.சிக்கனில் ஒவ்வன்றாக போட்டு விரவுவதால் நன்கு மசாலா பிடிக்கும்.

2.பொரிக்கும் போது எண்ணை சூடானது தீயை மிதமாக வைத்து பொரிகக்வும். அப்போது தான் சிக்கன் நன்கு வேகும்.

3.ஒரு மணி நேரம் ஊறினால் போதும் முன்று மணி நேரம் ஊறினால் இன்னும் நல்ல இருக்கும்.

4.சிக்கனை பல முறையில் பொரிக்கலாம் அதில் இது ஒரு வகை.


5. காஷ்மீரி சில்லி நல்ல கலர் புல்லாக இருக்கும்,காரம் அதிகம் இருக்காது, இது கிடைக்காதவர்கள், சாதா மிளகாய் தூள் சேர்த்து , ரெட் கலர் பொடி சிறிது சேர்த்து கொள்ளலாம்.

8 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

குழந்தைகளுக்கென்ன

எனக்குமே ரொம்ப பிடிக்கும் இவ்வகை.

Jaleela said...

வாங்க சாகோதரர் ஜமால்,

வருகைக்கு மிக்க நன்றி,எல்லோருக்கும் பிடித்தது இந்த லாலிபாப்.

செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

அதான் ஹோட்டலில் கூட போனதும் இப்ப எல்லாம் ஸ்டாட்டர்ஸ்க்கு லாலி பாப் தான்.

அதில் பிள்ளைக்களுக்கு ரொம்ப பிடித்தது லாலி பாப்

அதிரை அபூபக்கர் said...

தெளிவான முறையில் சிக்கன் லாலிபாப் செய்வதை விளக்கியுள்ளீர்கள்... எனக்கு பிடித்த உணவு

Jaleela Kamal said...

//தெளிவான முறையில் சிக்கன் லாலிபாப் செய்வதை விளக்கியுள்ளீர்கள்... எனக்கு பிடித்த உணவு//

நன்றி அதிரை அபூ பக்கர், தொடர்ந்து வந்து கருத்து தெரிவிப்பதற்கும் மிக்க நன்றீ

Anonymous said...

hai sis, when we have to add rice flour?

Jaleela Kamal said...

அனானி யாருன்னு தெரியலை பெயரை குறிப்பிட்டு இருக்கலாம்.

அரிசி மாவும் கார்ன் மாவுடன் சேர்த்து பிசறனும், இடையில் அதை டைப் செய்யல விட்டு போச்சு. முடிந்த்த போது சேர்க்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

Umm Mymoonah said...

Wow! Yummy yummy, looks very good. Thank you for sending it to Any One Can Cook.

Umm Mymoonah said...

Hi sis, I couldn't see any link to the event, plz give a link to the event sis, so that readers would know about it.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா