Friday, August 28, 2009

பாப் கார்ன் சிக்கன் பிரை


தேவையான பொருட்கள்

ஊற‌ வைக்க‌

போன்லெஸ் = 50 கிராம்
வெள்ளை மிளகு தூள் (அ) கருப்பு மிளகு தூள் ‍= கால் தேக்கரண்டி
உப்பு = சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
ரெட் கலர் பொடி = சிறிது
எலுமிச்சை சாறு = கால் தேக்கரண்டி

தோய்க்க‌

முட்டை = சிக்கன் தோய்க்க தேவையான அளவு (கால் பாகம்)
கிரெம்ஸ் = இரண்டு மேசை கரண்டி
கார்ன் பிளார் மாவு = அரை தேக்கரண்டி

செய்முறை

போன் லெஸ் சிக்கனை பொடியாக அரிந்து அதை நன்கு கழுவி ஊறவைக்க வேன்டிய மசாலாக்கலை போட்டு ஊறவைக்கவும்.
முட்டையை நன்கு அடித்து அதில் சிக்கன் துண்டுகளை தோய்த்து கிரெம்ஸ் மற்றும் கார்ன் மாவை கலந்து அதில் பிரட்டி அப்படியே உருண்டையாக உருட்ட வரும்.
உருண்டைகளை பட்டர் + எண்ணை கலந்த கலவையில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

குழந்தைகளுக்கு பிடித்த சுவையான பாப் கார்ன் சிக்கன் பிரை ரெடி, எடுத்து சாப்பிட இலகுவாக இருக்கும்.
சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் எளிதில் தயாரித்து விடலாம்.

18 கருத்துகள்:

சீமான்கனி said...

கிரெம்ஸ்...???
அப்டினா என்னது???
அக்கா....கோலா உருண்டைனு ஒன்னு என் அக்கா..நன்னா செய்வாங்க....

அது எப்படி செய்றதுன்னு...கொஞ்சம் சொல்லுக......

Unknown said...

வாவ் பார்க்கவே சூப்பராக இருக்கு அக்கா .

நட்புடன் ஜமால் said...

ரொம்ப எளிமையாக தெரியுது

எனக்கும் கிரெம்ஸ்-ஸுன்னா என்னான்னு தெரியாது.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//குழந்தைகளுக்கு பிடித்த சுவையான பாப் கார்ன் சிக்கன் பிரை ரெடி, எடுத்து சாப்பிட இலகுவாக இருக்கும்//

ம்ம்ம்்ம்.. என்ன மாதிரி ஆளுங்களுக்குன்னு சொல்லுங்க!!!

Jaleela Kamal said...

கிரெம்ஸ்...???
அப்டினா என்னது???
அக்கா....கோலா உருண்டைனு ஒன்னு என் அக்கா..நன்னா செய்வாங்க....

அது எப்படி செய்றதுன்னு...கொஞ்சம் சொல்லுக
சீமான் கனி கிரெம்ஸ் என்றால் பிரெட் கிரெம்ஸ் என்று தனியா விற்கிறது எல்லா கட்லெட், இது போல கிரிஸ்பி அயிட்டஙக்ள், போன்றவைகளுக்கு பயன் படுத்துவது, அபப்டி கிரெம்ச் இல்லை என்றால் கார்ன் பிளார் காலை உணவு பாலுடன் சேர்த்து சாப்பிடுவது அதை பொடித்து அதிலும் இதை பிரட்டலாம், இல்லை ஓட்ஸிலும் ஒன்றும் பாதியுமாய் பிரட்டலாம், இது மொரு மொருப்புக்காக சேர்க்க படுவது.

கோலா உருண்டை செய்யும் போது போடுகிறேன்.

கோலா உருன்டை உடனே வேண்டுமென்றால் ரெசிபி மட்டும் போடுகிறேன் பட்ம் பிரகு

Jaleela Kamal said...

பாயிஜா அஜ்ஹாரா விற்கு செய்து கொடுங்கள்

Jaleela Kamal said...

//நட்புடன் ஜமால் தவறாமல் கருத்து தெரிவித்து ஓட்டும் போட்டு விட்டு போகிறீர்கள் ரொம்ப சந்தோஷம்..//


கிரெம்ஸ் என்பது, பிரெட் கிரெம்ஸ் என்று தனியா விற்கிறது எல்லா கட்லெட், இது போல கிரிஸ்பி அயிட்டஙக்ள், போன்றவைகளுக்கு பயன் படுத்துவது, அபப்டி கிரெம்ச் இல்லை என்றால் கார்ன் பிளார் காலை உணவு பாலுடன் சேர்த்து சாப்பிடுவது அதை பொடித்து அதிலும் இதை பிரட்டலாம், இல்லை ஓட்ஸிலும் ஒன்றும் பாதியுமாய் பிரட்டலாம், இது மொரு மொருப்புக்காக சேர்க்க படுவது

Jaleela Kamal said...

/ம்ம்ம்்ம்.. என்ன மாதிரி ஆளுங்களுக்குன்னு சொல்லுங்க!!!//



ராஜ் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு என்றால் கொஞ்சம் காரசாரமா மசாலா வகைகளை கூட்டனும், இது குழந்தைகளுக்கு, காரம் கம்மியாக, போட்டுள்ளேன். பெரியவர்களும் சாப்பிடலாம்.
கருத்தும் தெரிவித்து ஓட்டும் போட்டு ஊக்குவிப்பதற்கு. ரொமப் நன்றி.


நோன்பு என்பதால் நேரமில்லை, போஸ்டிங் முதலே போட்டு ஆப்ஷன் போட்டு வைத்து விட்டேன்

SUMAZLA/சுமஜ்லா said...

அய்யோ, இன்னிக்கு கறிகுழம்பு வைக்க ஆரம்பித்து, கரண்ட் போய், தேங்காய் அரைக்க முடியாமல், அது பிரியாணியாக முடிந்தது தனி கதை அக்கா. ஏனோ, சமையலில் மட்டும் எனக்கு அறிவு கொஞ்சம் கம்மி...

சரி, இங்கே பாருங்க:http://sumazla.blogspot.com/2009/08/blog-post_29.html

தாஜ் said...

salaam ஜலீலா

நலமா நெட் இரண்டு நாளா கனெக்‌ஷன் இல்லை அதனால் அதனால் உங்க அவார்டை இப்பதான் வாங்க முடிந்தது ரொம்ப நன்றி.

பாப்கார்ன் சிக்கன் சூப்பர் இது செய்ய தெரியாமதான் கடையில் வாங்குவேன்

இனி ஹோம் மேட்தான் இதுக்கும் நன்றி

Jaleela Kamal said...

சுஹைனா அறிவு கொஞ்சம் கம்மியா யார் நீங்க சொல்றீங்களா?

நன்றி முடியும்போது போடுகிறேன்.

Jaleela Kamal said...

தாஜ் வாங்க என் பையனும் ஒரே பாப் கார்ன் சிக்கன் கேட்டு கொண்டு இருந்தால் அதான் சிம்பிளா டிரை பண்ணி பார்த்ததும், இன்னும் வேறு மசாலா சேர்த்து செய்தால் நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன்.

வேலை ச‌ரியாக‌ இருக்கு ப‌திவு கூட‌ போட‌ முடிய‌ல‌

S.A. நவாஸுதீன் said...

நோன்பு திறக்க சிக்கன் பக்கோடா பண்றது உண்டு. இதையும் முயற்சி பண்ணி பாப்போம்

Jaleela Kamal said...

ம்ம் ஈசியா இருக்கும் செய்து பாருங்கள். நானும் சிக்கன் பஜ்ஜி, சிக்கன் பகோடா எல்லாம் செய்வதுண்டு.

ப‌ஜ்ஜிக்காக‌ ரெடி ப‌ண்ண‌ துண்டுக‌ள் தான் பாப் கார்ன் ஆகிவிட்ட‌து.

Biruntha said...

வணக்கம் அக்கா,
நலமா?
நான் இன்று தான் உங்கள் பிளாக்கில் பதிவிடுகின்றேன். இதுவரை உங்கள் பிளாக்கைப் பார்த்ததோடு சரி. உங்கள் சமையல் குறிப்புகளிலிருந்து சிலவற்றைச் செய்தும் பார்த்துள்ளேன். நேரமின்மையால் என்னால் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியவில்லை.
நேற்றும் உங்களின் பாப் கார்ன் சிக்கன் பிரை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. முதலில் கிட்டத்தட்ட 8 சிக்கன் பிரை தான் செய்தேன், அது சீக்கிரமே தீர்ந்து விட்டதால் மீண்டும் 20 ற்கு மேல் செய்தேன். என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிட்டார் (நானும் தான்).

வெள்ளிக்கிழமை உங்களின் வெஜ் பிரியாணியும் தயிர் பச்சடியும் தான் எங்கள் மதிய உணவு. அதுவும் அன்று மதியமே தீர்ந்து விட்டது.


உங்களுக்கு எங்கள் இருவரின் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அன்புடன்
பிருந்தா

Jaleela Kamal said...

வாங்க பிருந்தா, நீங்கள் சுஹைனா ஹஜ் பதிவில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பிருந்தாவா?

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி


பாப்கார்ன் சிக்கன் பிரை என் பையனுக்காக நானே டிரை செய்தது. ரொம்ப நல்ல இருக்கு என்றான்.

செய்தால் உடனே தட்டு காலி தான், குழந்தைகளுக்கு என்றில்லை பெரியவர்களுக்கும் சாப்பிட பிடிக்கும்.

பிரியாணி செய்து பார்த்தீர்களா? இது சந்தேகமே இல்லை நல்ல வரும்.

இது என்னுடைய அளவு.



இவ்வ‌ள‌வு நாள் க‌ழித்து வ‌ந்து ப‌தில் போட்ட‌து ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.
உங்கள் இருவரின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. பிருந்தா இனி அடிக்கடி வாங்க, கருத்தை தெரிவியுஙக்ள்.

Biruntha said...

ஆமாம், நான் அதே பிருந்தாதான். சகோதரி சுஹைனாவின் பிளாக்கிலிருந்துதான் நீங்களும் பிளாக் வைத்திருப்பது தெரிந்தது.
நீங்கள் கொடுக்கும் அளவுகள் எப்போதும் சரியாக இருப்பதால்தான் உங்கள் சமையலை அடிக்கடி செய்து பார்ப்பேன். இதுவரை எதுவுமே பிழைத்ததில்லை.

Jaleela Kamal said...

பிருந்தா ரொம்ப சந்தோஷம்.

சுஹைனா போட்டிருந்த ஹஜ்விளக்கத்தை நீஙக்ள் ஆர்வமாய் படித்து பதில் போட்டது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அப்போ இருந்தே உங்களிடம் எப்படியாவது பேசனும் என்று. என் பிலாக்கிற்கு வந்து கருத்து தெரிவித்ததன் மூலம் பேசி கொண்டோம், மிக்க மகிழ்சி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா