கடற் பாசி என்னும் சைனா கிராஸ் இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உனவு களில் இதுவும் ஒரு வகையாகும்.கடற்பாசியை ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பால் சேர்த்தும் செய்யலாம், இரண்டு வகையான கலர் சேர்த்து தனித்தனியாக செய்து கலந்து கலர்புல்லாகவும் செய்யலாம்,இளநீரில் (அ) தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம், ஜூஸுக்கு கரைக்கும் டேங்கிலும் செய்யலாம்.
1. ரூ ஆப்ஷா கடற்பாசி
ரூ ஆப்ஷா என்பது பாக்கிஸ்தானியர்கள் பயன் படுத்துவது இது பாலில் கரைத்து குடிக்கும் பானம் இது உடல் சூட்டை தணிக்கும், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.
கடற்பாசி = ஒரு கைபிடி அளவுசர்க்கரை = இரண்டு மேசை கரண்டி அளவு
பால் = ஒரு டம்ளர்
ரூ ஆப்ஷா = இரண்டு மேசை கரண்டி
பாதம் = நான்கு
1. அரை டம்ளர் தண்ணீரில் கடற்பாசியை பொடியாக அரிந்து போட்டு சிறிது நேரம் ஊறவைத்து காய்ச்சவும்.
2.கரைந்து வரும் சமையத்தில் அதில் பாலை சர்க்கரை சேர்த்து கொதிகக் விட்டு வடிகட்டவும் நல்ல கரைந்து விட்டால் வடிகட்ட தேவையில்லை.
3. அதில் ரூ ஆப்ஷாவை கலந்து ஒரு தட்டில் ஊற்றி அதன் மேல் பாதத்தை தோலெடுத்து பொடியாக அரிந்து தூவி விட்டு ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து குளிறவிடவும்.
4. நன்கு ஆறி செட்டானதும் வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு சாப்பிடவும்.
2.இளநீர் கடற்பாசி
இளநீர் = ஒன்று முழுவதும்
சர்க்கரை = ஒரு மேசை கரண்டி
தேவையான நட்ஸ் = 4 பாதம் (அ) பிஸ்தா, முந்திரி
கடற் பாசி = ஒரு கை
1. கடற்பாசியை அரை டம்ளர் தண்ணீரில் பொடியாக அரிந்து போட்டு ஊறவைத்து நன்கு கரையும் வரை காய்ச்சி சர்க்கரை சேர்த்து இளநீரை ஊற்றி உடனே அடுப்பை அனைக்கவும்.
2. ஒரு டிரே (அ) தட்டில் ஊற்றி மேலே நட்ஸ் வகைகளை தூவி ஆறவைத்து குளிறவைத்து சாப்பிடவும்.இது சாப்பிட சாப்பிட நிறைய சாப்பிடனும் போல் தோன்றும் அவ்வளவு ருசியாக இருக்கும்.
3.டேங்க் கடற்பாசி
கடற்பாசி = ஒரு கை பிடி அளவு
சர்க்கரை = ஒரு மேசைகரண்டி அளவு
ஏதாவது ஒரு பிளேவர் டேங்க் பவுடர் = இரண்டு மேசை கரண்டி அளவு
தண்ணீர் = இரண்டு டம்ளர்
1. ஒன்னறை டம்ளர் தண்ணீரில் கடற்பாசியை கரைத்து ஊறவைத்து சர்கக்ரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
2. நன்கு கரைந்து வரும் போது டேங்க் பவுடரை கலந்த்து ஊற்றி ஒரு டிரேயில் ஊற்றி தேவையான நட்ஸ் வகையை ஊற்றி ஆறவிடவும்.
3. ஆறியதும் பிரிட்ஜில் வைத்து குளிறவைத்து சாப்பிடவும்.
Tweet | ||||||
4 கருத்துகள்:
கடற் பாசி என்னும் சைனா கிராஸ் இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உனவு களில் இதுவும் ஒரு வகையாகும்.//
கேள்விப்பட்டிருக்கிறேன் ஜலீலா....
//கடற்பாசியை ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பால் சேர்த்தும் செய்யலாம், இரண்டு வகையான கலர் சேர்த்து தனித்தனியாக செய்து கலந்து கலர்புல்லாகவும் செய்யலாம்,இளநீரில் (அ) தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம், ஜூஸுக்கு கரைக்கும் டேங்கிலும் செய்யலாம்.//
ஆமாம்.... செய்யலாம்....ய்யலாம்....யலாம்...லாம்...ம். (செய்யலாம் போல இருக்கே!!)
//ரூ ஆப்ஷா என்பது பாக்கிஸ்தானியர்கள் பயன் படுத்துவது இது பாலில் கரைத்து குடிக்கும் பானம் இது உடல் சூட்டை தணிக்கும், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.//
சிகப்பா இருக்கும்ல..... டி.வி.ல விளம்பரம் பார்த்து இருக்கேன்....
சூப்பர் செய்முறை விளக்கம் அளித்த தோழி ஜலீலாவிற்கு நன்றி..... வாழ்த்துக்கள்...
//சிகப்பா இருக்கும்ல..... டி.வி.ல விளம்பரம் பார்த்து இருக்கேன்....
சூப்பர் செய்முறை விளக்கம் அளித்த தோழி ஜலீலாவிற்கு நன்றி..... வாழ்த்துக்கள்...//
பொருமையா படித்து பதில் அளித்தமைக்கு நன்றி கோபி.
கடற்பாசி செய்முறை அழகா சொல்லிருக்கீங்க
வாங்க தாஜ் செய்து பார்த்து எப்படி இருந்தது என்றூ சொல்லுங்கள்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா