Tuesday, August 18, 2009

நோன்பு கால ச‌மைய‌ல் டிப்ஸ்



1. நோன்பு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது நோன்பு கஞ்சி தான்.

இதற்கு தேவையான அரிசி, பாசி பருப்பு, வெந்தயம் போன்றவற்றை முதலே திரித்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.
மொத்தமாக சிக்கன் (அ) மட்டன் கீமாவை அரை கிலோ அளவிற்கு தாளித்து வைத்து கொள்ளுங்கள்.
தினம் தாளித்த கீமாவை தேவைக்கு போட்டு கொதிக்க விட்டு கலந்து வைத்துள்ள அரிசியை தேவைக்கு ஊறவைத்து செய்து கொள்ளலாம்.
இல்லை கஞ்சி மொத்தமாக முன்று நாளைக்கு ஒரு முறை தயாரித்து வைத்து கொள்ளலாம்.


2. எண்ணையில் பொரிக்கும் அயிட்டத்தை கடைசி நேரத்தில் பொரிக்காதீர்கள்.
அது அவசரத்தில் கடைசி நேரத்தில் பொரிக்காதீர்கள்.பொரித்த எண்ணையை மறுநாள் சுடும் போது அதில் தண்ணீர் படாமல் முடிவைகக்வும். மறு நாள் பொரிக்கும் போது அதை வடி கட்டி கொள்ளுங்கள்.லேசாக தண்ணீர் பட்டாலும் அது உங்கள் முகத்தில் தான் தெரிக்கும். இப்படி ஒருவருக்கு முன்பு ஆகி இருக்கு கடைசி நேரத்தில் அவசரமா பொரிக்கும் போது மேலே தெரித்து உடனே அந்த நேரத்தில் ஹாஸ்பிட்டல் போய் இருக்கிறார்கள். குழந்தையை வைத்து கொண்டு செய்பவர்கள் ரொம்ப உஷாராக இருக்கவும்.நோன்பு நேரத்தில் இந்த டென்ஷன் வேறு தேவையா?ஒரு நாள் பொரித்து விட்டுஅந்த எண்ணையை முன்று நாட்களுக்குள் முடித்து விடுங்கள்.

3. வடைக்கு மொத்தமாக முன்று நாளைக்கு சேர்த்து அரைத்து கை படாமல் எடுத்து முன்று பாகமாக பிரித்து வையுங்கள்.

4. சுண்டல் வகைகள் நிறைய செய்யலாம். அதையும் அரை கிலோ அளவில் ஊறவைத்து வேக வைத்து வைத்து கொண்டால் தேவைக்கு அன்றாடம் தாளித்து கொள்ளலாம்.

5. பாசி பருப்பு இனிப்பு சுண்டர். கொண்டைகடலை கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல், வேர்கடலை அவித்தும் சாப்பிடலாம்.


6. சோமாஸ், க‌ட்லெட் ச‌மோசா வ‌கைக‌ளை முன்பே த‌யாரித்து பிரீஜ் செய்து வைத்து கொள்ள‌லாம்.

7. ஜூஸையும் இர‌ண்டு நாட்க‌ளுக்கு சேர்த்து க‌ரைத்து வைத்து கொள்ள‌லாம்.
இத‌னால் நேர‌த்தை மிச்ச‌ ப‌டுத்தி கொள்ளலாம்.

8. கடல் பாசி ஒரே வகையில் செய்யாமல் நல்ல கலர் புல்லாக செய்து வைத்தால் பிள்ளைகளுக்கு நோன்பு நேரம் ரொம்ப பிடிக்கும், அதை செய்து அவர்களை கட் பண்ண்ண சொல்லுங்கள்.



9. வ‌யிறு கேஸ் பிராப்ள‌ம், அல்ச‌ர் உள்ள‌வ‌ர்க‌ள். வெள்ளை க‌ஞ்சி பூண்டு , தேங்காய் பால் சேர்த்து செய்து குடிக்க‌வும்.

10. தின‌ம் ஜ‌வ்வ‌ரிசி பாயாச‌ம், க‌ஞ்சி செய்து குடித்தால் அல்ச‌ர், வ‌யிறு பிராப்ள‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ரொம்ப‌ இதமாக‌ இருக்கும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
இல்லை ஜ‌வ்வ‌ரிசியை ஊற‌வைத்து வேக‌ வைத்து தின‌ம் பாலில் சேர்த்தும் குடிக்க‌லாம்.


11. பிரெஷ் பழ ஜூஸ்கள் தயாரித்து குடித்தால் உடல் தெம்பாக இருக்கும், புருட் சேல‌டும் கூட‌ அடிக்க‌டி செய்து சாப்பிட‌லாம்.

12. நோன்பு க‌ஞ்சியும் ஒரே மாதிரியாக‌ செய்யாம‌ல் சிக்க‌ன் க‌ஞ்சி, ம‌ட்ட‌ன் க‌ஞ்சி, வெள்ளை க‌ஞ்சி, ஸ்வீட் கார்ன் சிக்க‌ன் சூப், த‌க‌காளி சூப், பால‌க் சூப், ஓட்ஸ் சூப் என்று ப‌ல‌ வ‌கையாக‌ செய்து குடிக்க‌லாம்.

13. ப‌ஜ்ஜிக்கு காய் க‌ளை முத‌லே அரிந்து பிரிட்ஜில் வைத்து கொள்ள‌வும். இது சுடும் போது ரொம்ப‌ வ‌ச‌தியாக‌ இருக்கும். ப‌ஜ்ஜி யில் ப‌ல‌ வித‌மாய் சிக்க‌ன் ப‌ஜ்ஜி, வெங்காய‌ம், த‌க்காளி வெள்ள‌ரி, வாழக்காய், பேபி கார்ன் , க‌த்திரிக்காய் என்று ப‌ல‌ வித‌மாக‌ ப‌ஜ்ஜி செய்து சாப்பிட‌லாம்.


14. ப‌கோடா செய்யும் போது அதில் காய் க‌றிக‌ள் ம‌ற்றும் இஞ்சி சேர்த்து கொள்ளுங்க‌ள்.இது நெஞ்சி கரிக்காமல் இருக்கும், வழக்கம் போல் பூண்டும் தட்டி போட்டு கொள்ளுங்கள்


15.அப்பளம் , வத்தல் கூட கொஞ்சம் அதிகமா பொரித்து எண்ணை வடிந்ததும் அதை ஒரு கவரில் வைத்து பிரிட்ஜில் வைக்கலாம்.


16. லோ பிரெஷர் உள்ளவர்கள் பிரெஷ் ஆரஞ்ச் ஜூஸில், உபபு ஒரு சிட்டிக்கை, குளுக்கோஸ் சேர்த்து குடிக்கவும், அதே போல் லெமன் ஜூஸிலும். இது நல்ல எனர்ஜியை கொடுக்கும். அடிக்கடி மயக்கம் வருவதை த‌டுக்கும்.


17 .ஆள்வள்ளி கிழங்கு (மரவள்ளி) , சர்க்கரை வள்ளி கிழங்கு அவித்து சாப்பிடலாம் அதில் சர்க்கரை , நெய், தேங்காய் சேர்த்து உருண்டை பிடித்தும் சாப்பிடலாம்

18. வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை மாவு கலவையில் முக்கியதும் பிஞ்சி போகும் அதற்கு வெங்காயத்தை முதலே வட்ட வடிவமாக அரிந்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மாலை பொரிக்கும் போது நல்ல கிரிப்பாக இருக்கும், இதே போல் வாழக்காய், மற்றும் உருளையையும் செய்யலாம். பஜ்ஜியில் கண்டிப்பாக பூண்டு பொடி (அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) பெருங்காயப்பொடி சேர்த்து செய்யவும். வயிறு உப்புசம் ஆகாது

தொடரும்

33 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா தான் இருக்கும் போல.. முடுஞ்சா செஞ்சு அனுப்புங்க.. புண்ணியமா போகும்!!!

ஷ‌ஃபிக்ஸ் said...

உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் ரமலான் முபாரக்!! இறைவன் நமது நற்செயல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வானாக!!

நட்புடன் ஜமால் said...

ஆஹா! மொத்த நோன்புக்கும் டிப்ஸ் கொடுத்தாச்சி போல

நன்றிங்கோ ...

S.A. நவாஸுதீன் said...

நோன்பு ஸ்பெஷல் கலை கட்ட ஆரம்பிச்சிடுச்சு. இனி தினம் ஒரு ஸ்பெஷல் கிடைக்கும். நாங்களும் (அதிகம் மெனக்கிடாமல்) சிம்பிளா செய்ற மாதிர் நிறைய டிப்ஸ் கொடுங்க சகோதரி

Jaleela said...

நல்லா தான் இருக்கும் போல.. முடுஞ்சா செஞ்சு அனுப்புங்க.. புண்ணியமா போகும்!!!

அதுக்கென்ன ராஜ் செய்து அனுப்பிட்டா போச்சு ஆனா எபப்டி அனுப்புவது?

Jaleela said...

நன்றி ஷபி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ரமலான் முபாரக்.

இறைவன் நம் எல்லோருக்கும் நோன்பு பிடிக்க சக்தியை கொடுத்து நோன்பை நிறைவேற்றி வைப்பானாக‌

Jaleela said...

ஆஹா! மொத்த நோன்புக்கும் டிப்ஸ் கொடுத்தாச்சி போல

நன்றிங்கோ ...

ஆமாம் இன்னும் விடுபட்ட டிப்ஸ்கள் நிறைய இருக்கு , வருகைக்கு நன்றிங்கோ!

S.A. நவாஸுதீன் said...

Jaleela said...

நல்லா தான் இருக்கும் போல.. முடுஞ்சா செஞ்சு அனுப்புங்க.. புண்ணியமா போகும்!!!

அதுக்கென்ன ராஜ் செய்து அனுப்பிட்டா போச்சு ஆனா எபப்டி அனுப்புவது?

சகோதரி சுமஜ்லா சொன்ன மாதிரி அத எவாபரேட் பண்ணி, சர்வர்ல லோட் பண்ணி, அது கண்டென்ஸாகி அனுப்பிடுங்க .

Jaleela said...

இதை படிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரமலான் முபாரக்

Jaleela said...

//நோன்பு ஸ்பெஷல் கலை கட்ட ஆரம்பிச்சிடுச்சு. இனி தினம் ஒரு ஸ்பெஷல் கிடைக்கும். நாங்களும் (அதிகம் மெனக்கிடாமல்) சிம்பிளா செய்ற மாதிர் நிறைய டிப்ஸ் கொடுங்க சகோதரி//


நவாஸ் நிறைய குறிப்புகள் இருக்கு , என்ன ஸ்பெஷல் வேண்டுமானாலும் கேட்கலாம். சிம்பிளா செய்யும் வண்ணம் உடனே போடுவேன்.

Jaleela said...

//சகோதரி சுமஜ்லா சொன்ன மாதிரி அத எவாபரேட் பண்ணி, சர்வர்ல லோட் பண்ணி, அது கண்டென்ஸாகி அனுப்பிடுங்க//


ஹா ஹா ஹா

சீமான்கனி said...

நல்லாத்தான் இருக்கு அனால் யாரு செஞ்சு குடுப்பாக...
எதாவது சிம்பெல நாங்க செய்றமாதிரி சொல்லுங்க அக்கா...
நன்றி....
ரமலான் வாழ்த்துகள் ....

SUFFIX said...

புதிய வலைப்பூந்தோட்டம்!! ரமலான் ஸ்பெஷலாக்கும்!! வாழ்த்துக்கள் சகோதரி!!

SUMAZLA/சுமஜ்லா said...

//சகோதரி சுமஜ்லா சொன்ன மாதிரி அத எவாபரேட் பண்ணி, சர்வர்ல லோட் பண்ணி, அது கண்டென்ஸாகி அனுப்பிடுங்க .//

அட, அங்க நான் சொன்னதை இங்க கோக்கு மாக்கு பண்ணிட்டு இருக்கீங்களா?

Unknown said...

useful tips akka

S.A. நவாஸுதீன் said...

புதுவீட்டுக்கு பால் காய்சியாச்சா? ரொம்ப நல்லா இருக்கு சகோதரி. சகோதரி சுமஜ்லாவிற்கும் பாராட்டுக்கள்.

Sheik Mukthar said...

Very useful notes

Sheik Mukthar

shahul said...

நல்ல டிப்ஸ் சரியான நேரத்தில்..

நீங்கள் சம்மதித்தால் இதை எங்கள் ப்ளாக்கில் போடலாம் என் நினைக்கிறேன். நோன்பாளிகளுக்கு உதவுமே...

நன்றி

சாகுல், ரியாத்

Jaleela Kamal said...

முதலில் புது டெம்ளேட் போட்டு கொடுத்த சுகைனாவிற்கு என் நன்றி.

Jaleela Kamal said...

//நல்லாத்தான் இருக்கு அனால் யாரு செஞ்சு குடுப்பாக...
எதாவது சிம்பெல நாங்க செய்றமாதிரி சொல்லுங்க அக்கா...
நன்றி....
ரமலான் வாழ்த்துகள் ....//

வருகைக்கு நன்றி சீமான் கனி,

//என்ன ரெசிபி வேண்டுமானாலும் கேட்கலாம். தெரிந்ததை கண்டிப்பா போடுவேன்
ரமலான் வாழ்த்துகள் ....//

Jaleela Kamal said...

//புதிய வலைப்பூந்தோட்டம்!! ரமலான் ஸ்பெஷலாக்கும்!! வாழ்த்துக்கள் சகோதரி//

புது பிலாக் வருகைக்கு நன்றி ஷபி, ஆமாம் புதிய வலைப்பூந்தோட்டம் ரமலான் ஸ்பெஷலே தான்.

Jaleela Kamal said...

//புதுவீட்டுக்கு பால் காய்சியாச்சா? ரொம்ப நல்லா இருக்கு சகோதரி. சகோதரி சுமஜ்லாவிற்கும் பாராட்டுக்கள்//


//நவாஸ்// புது வீட்டுக்கு வந்ததற்கும், தவறாமல் என் நான்கு பிளாக்குக்கும் கருத்து தெரிவித்தமைக்கும், தமிலிழில் என் நோன்பு டிப்ஸை போட்டதற்கும் மிக்க நன்றி,

Jaleela Kamal said...

வாங்க பாயிஜா நான் பிளாக் ஆரம்பிக்க காரணமாய் இருந்தவரும் நீஙக்ள் தான், என்னை நான் ஆரம்பித்த காலத்திலிருந்து உற்சாகப்படுத்தியவரும் நீங்கள் தான். நன்றி பாயிஜா.

Jaleela Kamal said...

ஷேக் முக்ததிர் வருகைக்கு நன்றி.

Jaleela Kamal said...

///நல்ல டிப்ஸ் சரியான நேரத்தில்..

நீங்கள் சம்மதித்தால் இதை எங்கள் ப்ளாக்கில் போடலாம் என் நினைக்கிறேன். நோன்பாளிகளுக்கு உதவுமே...
//


வருகைக்கு நன்றி ஷாஹுல்


நோன்பாளிகளுக்கு உதவும் என்று சொன்ன பிறகு சரின்னு சொல்லாமல் இருப்பேனா?

வேண்டுமானால் உங்கள் பிளாக்கில் லிங்க் கொடுத்து கொள்ளலாம்.

நட்புடன் ஜமால் said...

ரமழான் முபாராக்கு

சப்ராஸ் அபூ பக்கர் said...

நல்ல சில குறிப்புக்கள்....

அனைவருக்கும் ரமலான் முபாரக்.....

வா ரமலானே வா..... எனும் தலைப்பில் ஒரு கவிதை.... வாசிக்க என் தளத்திற்கு வாருங்கள்....

அதிரை அபூபக்கர் said...

நோன்பு காலத்தின் சமையல் டிப்ஸ் மிகவும் பயன்படக்கூடியது. சகோதரி அவர்களுக்கு ரமலான் முபராக்..

Jaleela Kamal said...

நன்றி நட்புடன் ஜமால்.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி சப்ரஸ் அபூபக்கர்.

Jaleela Kamal said...

நன்றி அதிரை அபூபக்கர்.

எல்லோருக்கும் ரமலான் முபாரக்

Malini's Signature said...

அன்பு ஜலீலா அக்கா உங்களுக்கு நான் அளித்த விருது ஏத்துக்குங்க பிளிஸ் :-)
http://kathampamtamil.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html

Jaleela Kamal said...

வாங்க ஹர்ஷினி அம்மா ஊருக்கு போய் வந்தாச்சா?உங்கள் அவார்டுக்கு
ரொம்ப நன்றி. நோன்பு ஆரம்பித்து விட்டது என்பதால் உடனே பதில் போட முடியல‌

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா