Wednesday, August 26, 2009

இந்தியன் பிலாபில் - pilafil



தேவையான‌ பொருட்கள்


கொண்டை கடலை = கால் கிலோ 8 ம‌ணி நேர‌ம் ஊற‌வைத்த‌து)
இஞ்சி - 25 கிராம்
ப‌ச்ச‌ மிள‌காய் - 3
காஞ்ச‌ மிள‌காய் - 1
சோம்பு - ஒன்ன‌றை தேக்கர‌ண்டி
க‌ர‌ம் ம‌சாலா - ஒரு தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை - ஒரு அரை க‌ட்டு
புதினா - கால் கை பிடி
க‌ருவேப்பிலை - சிறிது
கிரெம்ஸ் ப‌வுட‌ர் - ஒன்ன‌றை மேசை க‌ர‌ண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் - அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு
வெங்காய‌ம் = ஒன்று பெரியது


செய்முறை

1. கொண்டை க‌ட‌லையை இர‌வு முழுவ‌தும் (அ) எட்டு ம‌ணி நேர‌ம் ஊற‌வைத்து த‌ண்ணீரை ந‌ன்கு வ‌டித்து கொள்ள‌வும்.


2. முத‌லில் இஞ்சி, ப‌ச்ச‌மிள‌காய், காஞ்ச‌ மிள‌காயை போட்டு அரைக‌க்வும்.

3. அடுத்து அதோடு கொண்டைக‌ட‌லை முன்றில் ஒரு ப‌ங்கு, கொத்தும‌ல்லி, புதினா, க‌ருவேப்பிலையை சேர்த்து கொர கொரப்பாக‌ அரைக்க‌வும்.


4. பிற‌கு இன்னொரு பாக‌ம் கொண்டைக‌ட‌லை, க‌ர‌ம் ம‌சாலா, சோம்பை சேர்த்து ந‌ன்கு அரைத்து த‌னியாக‌ எடுத்து வைக்க‌வும்.


5. இப்போது மூன்றாம் பாக‌த்தை எடுத்து கொர‌ கொர‌ப்பாக‌ அரைக்க‌வும்.


6. ஒரு ப‌வுளில் அரைத்த‌ க‌ல‌வைக‌ள், கிரெம்ஸ் ப‌வுட‌ர்,பேக்கிங் ப‌வுட‌ர்,க‌ர‌ம் ம‌சாலா,உப்பு சேர்த்து வெங்காய‌ம் பொடியாக‌ அரிந்து க‌ல‌க்க‌வும்.


7. க‌ல‌க்கிய‌தை ஐந்து நிமிட‌ம் ஊற‌வ‌க்கவும்.


8. சின்ன‌ சின்ன‌ உருண்டைக‌ளாக‌ உருட்டி வ‌டைய‌ போல் த‌ட்டி வைக்க‌வும்.
9. ஒரு இரும்பு வான‌லியில் போட்டு பொரிக‌வும்.


10. பிற‌ட்டி விட்டு ந‌ன்கு பொரிய‌ விட‌னும், இது வேக‌ மொருக‌ லேட்டாகும்.


11. பொரிந்து பொன் முருவ‌லான‌தும் எடுக்க‌னும்.


12. சுவையான‌ பிலாபில் ரெடி.

குறிப்பு


இது நோன்பு நேர‌த்தில் க‌ஞ்சிக்குவைத்து சாப்பிட‌லாம்.
ம‌சால் வ‌டையை விட‌ கூடுத‌ல் மொரு மொருப்பு த‌ரும். இஞ்சி சேருவ‌தால் உட‌லுக்கு மிக‌வும் ந‌ல்ல‌து.
கொண்டை க‌டலையில் சுண்ட‌ல், அடை, இப்போது பிலாபிலும். இது லெப‌னீஸ் க‌டைக‌ளில் இந்த‌ கொண்டைக‌ட‌லையில் கார‌ம் ஏதும் சேர்க்காம‌ல் வ‌டை போல் செய்து அதை பிலாபில் என்பார்க‌ள். அதில் சாண்ட் விச் போல‌வும் கொடுப்பார்க‌ள்.
இது பெரும்பாலும் எல்லா அர‌ப் நாடுக‌ளிலும் கிடைக்கும், முக்கிய‌மா ம‌க்காவில் ஹ‌ராம் ஷ‌ரிப் எதிரில் இந்த‌ சாண்ட்விச் தான் அதிக‌மாக‌ கிடைக்கிற‌து.
இந்த‌ பிலாபிலை குபூஸ் ஹமூஸ் சேர்த்து சாண்ட்விச்சாக கொடுப்பார்கள்.
நான் ந‌ம் இந்திய‌ன் ஸ்டைலில் செய்துள்ளேன்.நாமும் ரொட்டி , சப்பாத்தியினுள் வைத்து சாப்பிடலாம்.

16 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

எகிஃப்த்தியர் மற்றும் லெபனான் கடைகளில் நான் விரும்பி சாப்பிடும் பொருள் இது.

இன்ஷா அல்லாஹ் - செய்து பார்த்தடறேன்.

கமலா said...

குறிப்பும், படமும் அருமையாக உள்ளது. இதுவரை கொண்டைக்கடலையில் வடை (பிலாபில்) செய்ததில்லை. இதை செய்துப் பார்க்க வேண்டும்.

அன்புடன் கமலா

Jaleela Kamal said...

நட்புடன் ஜமால் இது நீங்கள் அங்கு சாப்பிட சுவை இதில் வராது,இது நான் என் இழ்ட‌த்துக்கு நான் முய‌ற்சி செய்த‌து.


அது போல் வேண்டும் என்றால் (பேக்கிங் பவுடர், முட்டை, சீரகத்தூள், சிறிது மிளகு தூள் , லெட்டியுஸ் இலைகள் சேர்த்து செய்வாட்கள் என்று நினைக்கிறேன், அது இனிதான் முயற்சி செய்யனும்,

Jaleela Kamal said...

வாங்க கமலா வாங்க இது மசால் வடை போலும் செய்யலாம்,
இதில் பச்சை கிரை வகைகள் உள்ளே போகனும் என்பதால் எல்லாத்தையும் சேர்த்து அரைத்தேன்.
செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். இது ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோவும் இருக்கு ஆனால் இபப் இனைக்க முடியல.

S.A. நவாஸுதீன் said...

அட, இது எங்க ஊரு (சவுதி) தாமியா. கலக்குறீங்க சகோதரி. அடுத்து அல்பைக் ப்ரோஸ்ட் செய்முறையும் தெரியுமோ.

Jaleela Kamal said...

நவாஸ் அல்பைக் ப்ரோஸ்ட் அதை மறக்கவே முடியாது, சுவையை வைத்து ஓரளவிற்கு கொடுக்க முடியும்.
உம்ரா சென்ற போது இரண்டு முறை சாப்பிட்டோம்

ஒ பிலாஃபில் பெயர் தாமியா வா?

SUFFIX said...

//S.A. நவாஸுதீன் said...
அட, இது எங்க ஊரு (சவுதி) தாமியா. கலக்குறீங்க சகோதரி. அடுத்து அல்பைக் ப்ரோஸ்ட் செய்முறையும் தெரியுமோ.//

அட ஆமா, தாமியா.... நன்றி, இந்த தாமியா ரெசப்பி ரகசியம் இப்போ தெரிஞ்சுடுச்சு.

Jaleela Kamal said...

/அட ஆமா, தாமியா.... நன்றி, இந்த தாமியா ரெசப்பி ரகசியம் இப்போ தெரிஞ்சுடுச்சு//

ஆஹா தாமியா ரகசியம் தெரிந்து விட்டதா?

ஷபிக்ஸ் இதை முன்று முறை ஓவ்வொரு மாதிரி செய்து பார்த்ததில் இந்த முறை தான் பிள்ளைகளுகக்கு ரொம்ப பிடித்து இருந்தது, சுட்டதும் தட்டு காலி..

அதான் இந்த முறையை போட்டேன்.

Hema S said...

Jaleela madam! yaar nu theriyudha? Came from suhaina's blog :-)

சீமான்கனி said...

தாமியா... ஐ ....
இப்டித்தான் செய்வாங்களா ????
நல்லக்கும்....

SUMAZLA/சுமஜ்லா said...

குபூஸ் என்ற பேரை கேட்டாலே எனக்கு ஹஜ் ஞாபகம் தான் வருது!

Jaleela Kamal said...

ஹேமா உங்களை தெரியாமல் இருக்குமா? நல்லவே தெரியும். சுஹைனா பிளாக்கில் பதிவு போடும் போதே பார்த்தேன்.

மன்றத்தில் உங்கள் காமடி பதிவு களை ரொம்பவே ரசித்து இருக்கேன்.

வாங்க ஹேமா வருகைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

//தாமியா... ஐ ....
இப்டித்தான் செய்வாங்களா ????
நல்லக்கும்....//



சீமான் கனி


இது போல் செய்து விட்டு தாமியா இப்படி இல்லையே என்று சொல்லக்கூடாது, இது என் பிள்ளைகளின் ருசிக்கேற்றவாறு குபூஸ், ஹமூஸுடன் செய்தது.

இதனுடன் உள்ள குபூஸும், ஹமூஸும் தனி குறீப்பாக போடலாம் என்று இத்துடன் போடவில்லை.

Jaleela Kamal said...

சுஹைனா இந்த குபூஸ் என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும். தினம் சாப்பாடுக்கு குபூஸ் ஹமூஸ் இருந்தால் கூட போதும்.

அன்புடன் மலிக்கா said...

ஜலீலாக்கா உங்க ரெசிபி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

தங்களை தொடர்கருத்துகளுக்கு அன்போடு அழைக்கின்றேன்,

http://niroodai.blogspot.com/

Jaleela Kamal said...

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி மலிக்கா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா