உளுந்து பருப்பு = ஒரு கப்
ஸ்பினாச் கீரை = அரை கப்
வெங்காயம் = அரை
கருவேப்பிலை = ஒரு மேசை கரண்டி
கொத்து மல்லி = ஒரு மேசை கரண்டி
பச்சமிளகாய் = ஒன்று
இஞ்சி = ஒரு தேக்கரண்டி (துருவியது)
மிளகு = அரை தேக்கரண்டி ( முக்கால் பாகம் திரித்தது)
உப்பு = முக்கால் தேக்கரண்டி (அ) அவரவர் ருசிக்கு
செய்முறை
1.உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து மையாக அரைக்கவும்.
2. ஸ்பினாச், கொத்து மல்லி, கருவேப்பிலையை மண்ணில்லாமல் கழுவி நல்ல பைனாக (பொடியாக) அரிந்து வைக்கவும்.
3. அரைத்த மாவில் உப்பு, பொடியாக அரிந்த ஸ்பினாச் (பாலக்) கீரை பொடியாக அரிந்த பச்சமிளகாய் , துருவிய இஞ்சி, கொத்து மல்லி , கருவேப்பிலை மிளகு எல்லாம் சேர்த்து நன்கு கிளறவும்.
4. எண்ணையை காய வைத்து வடைகளாக பொரித்து எடுக்கவும்.
சுவையான ஸ்பினாச் வடை ரெடி. தொட்டுக்கொள்ள புதினா துவையல் (அ) பொட்டுகடலை துவையல், நோன்பு கஞ்சிக்கும் பொருந்தும்.
குறிப்பு:
எண்ணையை ரொம்ப சூடு படுத்தி விட்டு வடையை போட்டால் உள்ளே வேகாது, எண்ணை சூடானதும் தீயின் அளவை சிறிது மீடியமாக வைத்து வடையை போட்டு திருப்பியதும் ஒரு முறை கரண்டியால் அமுக்கி விடவும் பிறகு நல்ல வெந்து வரும்.
இஞ்சி மிளகு சேர்வதால் சுவை வித்தியாசமாக இருக்கும்.
நல்ல ஷாஃப்டாகவும் , கிரிஸ்பியாகவும் இருக்கும், இதற்கு சோடா மாவு கூட தேவையில்லை
Tweet | ||||||
17 கருத்துகள்:
நல்லா இருக்கும் போல இருக்குங்க..
ஆமா இந்த வடை சாப்பிட்டா பாப்பாய்(popeye)மாதிறி பலம் வருமாங்க?
ஸ்பினாச் கீரை - இதனை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும்
------------------------
மேலும் விபரங்களுக்கு.
-----------------------
அவசியம் முயற்சி செய்து பார்க்கிறேன் சகோதரி.
மேலும் பல கீரைகள் மெனு கொடுக்கவும்.
//நல்லா இருக்கும் போல இருக்குங்க..
ஆமா இந்த வடை சாப்பிட்டா பாப்பாய்(popeye)
மாதிறி பலம் வருமாங்க?//
ஆகலாம் ஆகலாம் பாப்பாயும் ஆகலாம் , பீம்பாயாகவும் ஆகலாம்,. இருந்தாலும் கவுண்டருக்கு குசும்பு ஜாஸ்தி தான்.
நன்றி ராஜ்
நட்புடன் ஜமால் தகவலுக்கு மிக்க நன்றீ
இதில் பாலக் கீரை தான் என்றில்லை, வெந்தய கீரை, முருங்கக்கீரையும் போட்டு சுடலாம்.
http://allinalljaleela.blogspot.com/2009/06/blog-post_07.html
நட்புடன் ஜமால் இதில் முருங்கக்கீரை பொரியல் இருக்கு பார்த்து கொள்ளவும்.
முடிந்த போது மீதி போடுகிறேன்.
வடை பார்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு
எளிய முறையில் விளக்கம். அருமை.. இதை நான் செய்துபார்த்து சாப்பிட முயற்சிக்கிறேன்...
மெதுவடைல இத்தனை வகையா. ஹ்ம்ம். கலக்குங்க
//எளிய முறையில் விளக்கம். அருமை.. இதை நான் செய்துபார்த்து சாப்பிட முயற்சிக்கிறேன்//
அதிரை அபூபக்கர்
தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி, செய்து பார்த்து சொல்லுங்கள்.
ஆமாம் நவாஸ் எல்லோருக்கும் மெதுவடை தெரிந்தது தானே என்று போடல,
ஆனால் இது சத்தானதும், கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு வடை மூலமாக கொடுத்து விடலாம்.
வடைய போட்டு பார்த்துட்டு விடைய சொல்றோம் ஜலீலா, கீரை சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு, வடையும் ஆச்சு. நன்றிங்கோ.
அக்கா...வடை நல்லா இருக்கு....
இதை துபையில் இருக்கும்போது என் நண்பன் ஒருவன் செய்து கொடுத்தான்...அதில் ஏதோ பருப்பும் சேர்த்திருந்தான்....வடை
சாப்பிட்டு ரேம்பனால் ஆச்சு அக்கா....
//வடைய போட்டு பார்த்துட்டு விடைய சொல்றோம் ஜலீலா, கீரை சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு, வடையும் ஆச்சு. நன்றிங்கோ//
ஷபிக்ஸ் தவறாமல் கருத்து தெரிவிப்பதற்கும் மிக்க நன்றிங்கோ
//அக்கா...வடை நல்லா இருக்கு....
இதை துபையில் இருக்கும்போது என் நண்பன் ஒருவன் செய்து கொடுத்தான்...அதில் ஏதோ பருப்பும் சேர்த்திருந்தான்....வடை
சாப்பிட்டு ரேம்பனால் ஆச்சு அக்கா....//
சீமான் கனி அது பருப்பு வடையிலும் செய்வார்கள், ஆனால் இது இன்னும் நல்ல இருக்கும்
உங்கள் ஸ்பினாச் வடை இப்போதுதான் செய்து முடித்தேன். கீரை இருந்ததால் உடனேயே செய்து பார்க்கத் தோன்றியது. நன்றாகவே வந்தது. சுவையாகவும் உள்ளது.
பிருந்தா ஸ்பினாச் வடை பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
இது சுவை ரொம்ப அருமையாக இருக்கும்
This is again a very delicious vadai, for kids we always have to hide the veggies like this. Thank you for linking it with Any One Can Cook.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா