1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் பெயர் ஜலீலா பானு..எனக்கு என் பெயர் ரொம்ப பிடிக்கும்.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பையனை காலேஜ் சேர்த்து விட்டு ஹாஸ்டல் ரூம் விட்டு வெளியில் வரும் போது.அழுதது. (அப்போது எல்லா ரூமில் உள்ள பிள்ளைகள் என்னை பார்த்து ஆன்டி டோன்ட் க்ரை வி ஆர் ஹியர் என்றார்கள்)மற்றபடி டீவில் கலங்கும் செய்திகளை பார்த்தேலே உடனே அழுகை வரும்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இதுல என்ன சந்தேகம் பிடிக்கவே பிடிக்காது, கம்புயுட்டர் வந்ததிலிருந்து கையெழுத்தா அப்படின்னா என்ன என்று ஆகிவிட்டது.
4.பிடித்த மதிய உணவு என்ன?
சைவம் : புளிசாதம், மசால் வடை
அசைவம்: பகாறா கானா, மீன் குழம்பு, மீன் வறுவல்,மாங்காய் ஊறுகாய் ( அதுவும் நான் செய்தது)அப்பளம்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனே பழக மாட்டேன் பழகி விட்டா விடவே மாட்டேன்.எல்லோருடனும் பழக பிடிக்கும்.
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் குளிக்க பிடிக்கும் ஆனால் பயம், ஆனால் அப்படி காலை நனைத்து கொண்டு நின்றால் மனசே கரைந்து லேசாக இருக்கும், அருவியில் குளிக்க பிடிக்கும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவருடைய பேச்சு முகபாவனை அணிந்துள்ள ஆடை.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது எப்போதும் சுறு சுறுப்பாக (அந்த எறும்பை விட) இருப்பேன்.,
பிடிக்காதது என் முன் கோபம்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவர் ரொம்ப பொருமை,பொருமை, பொருமை.
பிடிக்காத விசயம் எந்த நேரமும் டீ குடிப்பது.
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா, அப்பா உடன் இல்லாதது நினைத்து, இப்போதைக்கு என் பையன் கூட இல்லாதது நினைத்து வருந்து கிறேன்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு வெள்ளை சுடிதார்.
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
டீவியில் கார்டூன் சத்ததுடன்,பதிவு போட்டு கொண்டு இருக்கேன்.
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மயில் வர்ண புளு
14.பிடித்த மணம்?
மழை வருமுன் அடிக்கும் மண்வாசனை, ராயல் மெர்ஜ் ஜாஸ்மின், பூவில் மல்லிகை
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
யாரை அழைப்பது தெரியல அழைக்க நினைப்பாவர்கள் எல்லோரும் இந்த 32 கேள்வி பதிலில் கில்லியாக இருக்கிறார்கள்
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
ஹர்ஷினி அம்மா இவருடைய பிளாக் டிசைன் + தோடு கம்மல் எல்லா கைவேலையும் ரொம்ப பிடிக்கும்
17. பிடித்த விளையாட்டு?
கேரம், வாலி பால்
18.கண்ணாடி அணிபவரா?
ஆமாம்
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
காமடி, காமடி, காமடி படம் தான் ரொம்ப பிடிக்கும்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
ரப்புனே பனாயா ஜோடி ,படம் அவ்வளவாக இப்போது பார்ப்பது கிடையாது, நேரமும் கிடையாது, நேரம் கிடைத்தால் பார்ப்பேன். இது ஊர் சென்று திரும்புகையில் ஜெட் ஏரில் (வந்து கொண்டு இருக்கும் போது பார்த்தது) ரொம்ப அருமை.
21.பிடித்த பருவ காலம் எது?
மழைகாலம்.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
நிறைய தூஆக்கள் எங்கு பார்த்தாலும் பார்த்து ஓதிகொண்டு குறித்துக்கொள்வேன்.
காமடி, டிப்ஸ், சமையல் எங்கு இருந்தாலும் படிப்பேன்.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்பவாவது மாற்றுவேன்
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் = அத்தான் ஜலி ஜலி என்று கூப்பிடுவது, தங்கைமார்கள் ஜோக் அடித்து ஒன்றாக சேர்ந்து சிரிக்கும் சத்தம், பிடிக்காத சத்தம் = சாலையில் உள்ள ஹாரன் சத்தம், தீடிருன்னு அடிக்கும் குக்கர் விசில்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
துபாய்,சவுதி (உம்ரா சென்றது)சிங்கப்பூர், மஸ்கட்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
சமையல் பத்து வகை என்றாலும் ஒரு மணி நேரத்தில் முடிப்பேன், லேடிஸ் டெயிலர், ஹிந்தி பேச , படிக்க எழுத தெரியும் ஓரளவிற்கு
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அண்டை புழுகு (பொய் சொல்வது, துரோகம்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சட்டுன்னு கோபப்படுவது,பட படப்பு (ஆனால் இப்ப இல்லை 80% கம்மி பண்ணியாச்சு)
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
எல்லா இடமும் போக ஆசைதான்.
சிங்கப்பூர், ஊட்டி, கொடைகாணல்
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நோயில்லாத வாழ்க்கை
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
இதுவரை அப்படி எதுவும் இல்லை.
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை என்பது ஒரு பாடம். வாழ்க்கை வாழ்வதற்கே, இன்பம், துன்பம் எல்லாம் மாறி மாறி வரும் அதை எதிர்கொண்டு வாழ கத்து கொள்ளனும். காலத்தைத்திட்ட வேண்டாம், (என் நேரம் சரியில்லை என்று) நேரம் நல்ல தான் இருக்கு அதை நாம் சரியாக பயன் படுத்தி கொள்ளவேண்டும்.
பொருமை,விட்டுகொடுக்கும் மன்ப்பாண்மை,ஈகோ இல்லாமல் இருப்பது இது முன்றும் இருந்தால் வாழ்க்கை இனிக்கும்.
Tweet | ||||||
14 கருத்துகள்:
ஹிந்தி தெரியுமா உங்களுக்கு.ம்ம்ம் கலக்குங்க ஜலிலாக்கா.எனக்கு தெரிந்தது நம்பர்ஸ் மற்றும் பானி,கமலி,துமாரா நாம் க்யா ஹை,இப்படி ஒரு சில வார்த்தைகள் தான் தெரியும்.
உங்களைப்பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி சகோதரி. வாழ்க்கை பற்றிய வரிகள் ரொம்ப நல்ல விஷயம்
ஜலீலா அக்கா என் கேள்விகளுக்கு பதில் தந்ததில் மகிழ்ச்சி...என்ன அக்கா பையனை ஹாஸ்டலில் விட்டதில் இருந்த்து ரொம்ப டல் ஆயிட்டீங்க...கவலைபடதீங்க அக்கா அவங்க அங்கே ஜாலியா இருக்க ஆரம்பிச்சுடுவாங்க..:-)
//டீவில் கலங்கும் செய்திகளை பார்த்தேலே உடனே அழுகை வரும்.//
தண்ணி கலங்கி இருந்தா கூட அழுவீங்களா?
அக்கா பதில் எல்லாம் அருமையக்கா. மேனகா அக்காவை சும்மானா நினைச்சிங்க அக்கா சகலகலாவல்லி. //சமையல் பத்து வகை என்றாலும் ஒரு மணி நேரத்தில் முடிப்பேன்// உண்ணைய்லே மிக பெரிய திறமையக்கா. 4 பேர் விருந்தாளி வந்தாலே எனக்கு கையும் ஓடாது காலூம் ஓடாது இப்ப தான் கொஞ்சம் தெரிவருகிறேன்
அட, ஹிந்தி கூட தெரியுமா உங்களுக்கு? நிச்சயம் ஒரு நாள் இந்த சமையல் ராணியின் கையால் சாப்பிடணும்.
ஆமாம் மேனகா, ஏதாவது கத்துக்கனும் என்று எப்போதும் நினைப்பது சின்னவயதில் இருந்து சனிக்கிழமை போடும் ஹிந்தி படம் மட்டும் தவறாமல் பார்ப்பேன்.
ஆனால் எங்க வீட்டில் என் அப்பாவை தவிர யாருக்கும் ஹிந்தி தெரியாது.
எப்படியோ கல்யாணம் ஆனபிறகு என் ஹஸ் சவுதி போயாச்சு, மாமியார் வீட்டில் அப்ப மதியம் எல்லோரும் தூங்கும் நேரம் (என் முதல் பையனை அம்மா வீட்டில் தூங்க வைத்து நான் படுத்து இருப்பது போல் தலையனைகளை போட்டு என் சேலை கொண்டு மூடி வைத்து விட்டு )க்ளாஸ் போவேன். இரவு எல்லோரும் தூங்கியவுடன் ஹோம் வொர்க் செய்வேன்.
அதேல்லாம் ஒரு காலம் உடனே ஹிந்தி பண்டிட் என்று நினைக்கவேண்டாம், எத்திசை போனாலும் ஓரளவிற்கு சமாளிக்கலாம்.
இப்ப உங்களுக்கு பிரென்ச் தெரிகிறது இல்லையா அது போல், சின்ன கிளாஸுக்கு டியுஷன் எடுக்கும் அளவிற்கு தெரியும்.
இப்ப எல்லாம் ஒன்றூம் கிடையாது. ஒன்லி படம் பார்ப்பது பேசுவதோடு சரி
//உங்களைப்பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி சகோதரி. வாழ்க்கை பற்றிய வரிகள் ரொம்ப நல்ல விஷயம்//
வாழ்க்கைய பற்றி ஒரு வரி என்று இருந்தது.
ஆமாம் எழுத எழுத வந்து கொண்டே இருக்கு, அதான் முன்று பாயிண்ட் டோடு நிருத்தி விட்டேன்.
////டீவில் கலங்கும் செய்திகளை பார்த்தேலே உடனே அழுகை வரும்.//
தண்ணி கலங்கி இருந்தா கூட அழுவீங்களா?//
ராஜ் குமார் ஹா ஹா ரொம்ப காமடியா சொல்றீங்க,,
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை பாயிஜா எனக்கு தெரிந்த இத்தனை விஷியங்கள் ஒன்றுமே கிடையாது,
எவ்வளவோ பெண்கள் மிகவும் வியக்கத்தக்க அளவி இருக்கிறார்கள்,
என் சமையலை சாப்பிட்டு சென்றவர் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் பட்டுன்னு சொல்வாங்க உங்கள் பிரியாணி கல்யாண பிரியாணி தான் , கிரிப் ஆப் சிக்கன் சூப் (இது எங்க அண்ணி கத்து கொடுத்தது தான்) நானே பல மாறுதல் களுடன் செய்து கொள்வேன், இன்னும் எல்லோரின் நாவிலும் நிற்கிறது,
பகோடா கட பகோடா , தீடீருன்னு ஒரு விருந்தாளி , எப்போது வாரம் ஒரு முறை ரசம் மட்டும் வைத்து சாப்பிடுவோம் அப்ப என்ன வைப்பது என்றூ தெரியல பகோடா போட்டு வைத்தேன் கட பகோடான்னே நினைத்து விட்டார்கள்.
மசால் வ்டை 10 வருடம் முன் என் பிரெண்ட் கீதாவிற்கு செய்து அனுப்பினே இன்னும் அவங்க ஹஸ் மசால் வடை சாப்பிடும் போதெல்லாம் சொல்வாராம்.
என் பிள்ளைகளின் பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் நான் கொடுத்து அனுப்பும் வெஜ், பிட்ஜா பிரெட், சிக்கன் சாண்ட் விச், வெஜ் நூடுல்ஸ் ரொம்ப பிடிக்கும்.என்னை பார்க்கும் போது அந்த சமையலை சொல்லி என்னிடம் சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாய் இருக்கும்.
ஆமாம் ஹர்ஷினி கொஞ்சம் இல்லை ரொம்பவே டல் இல்லை என்றால் இந்த கேள்வி பதில் எல்லாம் நீங்க கேட்ட போது உடனே டான்னு போட்டு இருப்பேன்.
சுஹைனா வாங்க என்ன மெனு சொல்லுங்க உடனே செய்து தரேன்.
ஜலீலா உங்கள் பேட்டி சூப்பர் நானு துபாய் உங்கள் சாப்பாட்டுக்கெ வரனும் பொலிருக்கே
//ஜலீலா உங்கள் பேட்டி சூப்பர் நானு துபாய் உங்கள் சாப்பாட்டுக்கெ வரனும் பொலிருக்கே//
வாங்க தாஜ்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா