ஒவ்வொர் ஆண்டு பள்ளி துவக்கத்திலும் இதை ஓத சொல்லவும், எல்லா பிள்ளைகளும் கல்வியில் சிறந்தவர்களாக விளங்க ஆண்டவன் கிருபை புரியட்டும்.
அத்துடன் கீழே உள்ள தூஆவையும் சொல்லி கொடுக்கவும்.
1. ரப்பி ஜித்னி இல்மா, ரப்பி ஜித்னி இல்மா,ரப்பி ஜித்னி இல்மா.
"ரட்சகா ரப்பே எனக்கு கல்வி அறிவை அதிகப்படுத்துவாயாக"!
2. ரப்பிஷ் ரஹ்லி சத்ரி வ யஸ்ஸிர்லி அம்ரி வஹ்லுல் உஹ்ததம் மில்-லிசானி யஃப்கஹூ கௌலி.
"இறைவா! எனக்காக என் என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக!
என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!" (என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக)
3. அல்லாஹும்ம இன்னி அஸஅலுக்க இல்மன் நாஃபிஅன் வ ரிஜ்கன் வாஸிஅன் வஸிஃபாஅன் மின் குல்லி தாஇன்.
"யா அல்லாஹ் பயனுள்ள அறிவு, தாரளமான உணவு, எல்லா நோய்களிலிருந்தும் நிவாரனம் இவற்றையே நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்."
4.சுப்ஹான்க்க ல இல்மலனா இல்லா மா அல்லம்தனா இன்னக்க அன் தல் அலீமுல் ஹகீம்.
(யா அல்லாஹ்) நீ மகாத்தூயவன் நீ கற்றுகொடுத்ததை தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை.நிச்சயமாக நீ அனைத்தையும் அறிந்தவன் ஞானமுள்ளவன்.
Tweet | ||||||
2 கருத்துகள்:
ரொம்ப நல்ல விஷயம், நல்ல துஆக்கள் சகோதரி
தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி நவாஸ்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா