கேன்சர் அபாயம் - 1
இதற்கு முன் கேன்சர் பற்றி பதிவு போட்டு இருந்தேன்.பெரிய பதிவா இருந்ததால் இங்கு மீதி போட்டுள்ளேன்
ஒரு 45 வய்து பெண்மணி கேன்சர் ஆப்ரேஷன் செய்து சரியாக கவனிக்காததால் ஒரு பெண் அது லிவரில் பரவி ரொம்ப பாடுபட்டு போன வருடம் டிசம்பரில் உயிர் துறந்தார்.
அந்த பெண்மணிக்கு கல்யாணவயதில் பெண் , படித்து கொண்டிருக்கும் ஒரு பையனும் இருந்தார்கள். பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி சீரும் சிறப்புமாக செய்து முடித்தார்கள்அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆக 1 மாதம் முன்பு தான் கேன்சர் இருப்பது தெரியவந்து அவங்களுக்கு கர்ப்பப்பையில் கேன்சர் வந்துள்ளது .உடனே கீமோ தெரபி செய்து ஆப்ரேஷனும் நல்ல படியாக முடிந்தது. .
ஆனால் ரெஸ்டில் இருக்காம ஊரில் அவங்க சொந்த காரர்களுக்கு உடம்பு சரியில்லை என்று போனார்கள், அதில் ரயிலில் பயணம் செய்ததால்
இன்பெக் ஷன் ஆகிவிட்டது. அதுவும் இல்லாமல் உடம்பு சரியில்லாதவரை கூப்பிட்டு வந்து சென்னை ஹாஸ்பிட்டலில் வைத்து வைத்தியம் பார்த்தார்கள்.
இந்த அமமா அவரை பார்த்து கொள்ள யாரும் இல்லாததால் அவர்களே அவர் கூடவே ஹாஸ்பிட்டலில் இருந்து கவனித்து கொண்டதால் ஹாஸ்பிட்டலில் அதுவும் இன்பெக்ஷன் ஆகி இருக்கு.
மறுபடி கேன்சர் லிவரில் பரவி இருப்பது தெரிய வந்தது ஹோமியோ மருத்துவ சிகிச்சை எடுத்து போய் பயனளிக்காததால் அவர்கள் ஊருக்கே போய் அங்கு சிகிச்சை எடுத்து கொண்டார்கள். கீமோதெரபி மறுபடி செய்து கொண்டே இருந்தார்கள்.அவர் அந்த சிகிச்சை மூலம் படாத பாடு பட்டு இருக்கிறான்க , கல்யாண ஆன பொண்ணும் அம்மாவை பார்த்து மனநொந்து ஒன்றும் சரியா சாப்பிடமால் இந்த வயசிலேயே அல்சர் + லோ பீபி.
செலவுகள் ஆனதோ லட்சகணக்கில். என்ன செய்தும் பிரயோஜனம் இல்லை.
நோய் கண்டவர்கள் எந்த நோயாக இருந்தாலும் நிறைய கூட்டமாக இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டாம்.
மற்றவர்கள் என்ன நினைத்து கொள்வார்களோ என்றும் நினைக்கவேண்டாம்.
தொலை தூர பயணமும் மேற்கொள்ளாதீர்கள்.
சாப்பாடு விஷியத்தில் ரொம்பவும் கவனம் வேண்டும். ஆப்ரேஷன் செய்து கொண்டவர்களுக்கு உணவு
ஒருவர் Brain cancer ஆப்ரேஷன் செய்து இப்ப நல்ல இருக்கிறார்.
அவர்கள் சொன்னார்கள் தினம் முட்டையின் வெள்ளை கரு மட்டும் காலை மாலை சாப்பிட்டால் நல்ல ஆகும். இப்படி சாப்பிடுவதால் இழந்த தெம்பை மீட்கலாம்.
அடுத்து சின்ன கோழிமுழு கோழி சூப் வைத்து குடிக்கனும்.
எல்லா காய் கறிகளும் போட்டு சூப் வைத்து தினம் குடிக்கனும்.
பழத்தில் ஆப்பிள் ரொம்ப நல்லது மற்ற பழவகைகள் டாக்டரிடம் சாப்பிடலாமா என்று கேட்டு சாப்பிடுங்கள்.
கொத்து மல்லி சட்னி, புளிக்கு பதில் லெமென் சேர்த்து சாப்பிடனும், இது அப்ப இரத்ததை சுத்த படுத்தி கொண்டே இருக்கும்.
இந்த மருந்து சாப்பிட்டு சாப்பிட்டு வாய் கசப்பு,மரத்து போனது போல் இருக்கும். அதற்கு இந்த சட்னியும் வாய்க்கு ருசி படும், கிஸ்மிஸ் பழம் அதுவும் அப்ப வாயில் போட்டு மென்றூ கொள்ளலாம்.
முட்டை கோஸும், புரோகோலியும் ரொம்ப நல்லது அடிகக்டி முட்டைகோஸ் பொரியல், கூட்டு, புரோகோலி சூப் அது போல் வைத்து சாப்பிடலாம்.
நிறைய சூப் வகைகள் எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
மற்றபடி இட்லி, இடியாப்பம்,ஆப்பம், ஓட்ஸ்,ராகி, கொழுக்கட்டை போன்ற ஆவியில் அவித்த உணவுகள் மிகவும் நல்லது. கார்ன்பிலேக்ஸ் உடன் நட்ஸ் சேர்த்தும் சாப்பிடலாம். போன்றவையும் சாப்பிடலாம்.
கேன்சர் ஆப்ரேஷன் செய்துகொண்டவர்கள். தவறாமல் முன்று மாததிற்கு ஒரு முறை போய் செக்கப் செய்து கொள்வது நல்லது மாத்திரைகளை தொடர்ச்சியாக டாக்டரின் அட்வைஸ் படி நடப்பது நல்லது/ இதற்காக நீங்களே எந்த கை மருந்தும் எடுக்காதீர்கள்.
சுட சுட டீ காபி போன்றவைகளை சுட சுடகுடிப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இது நாளடைவில் தொண்டை வெந்து போய் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு.
கேன்சர் வந்தவர்களின் வலி மிகக்கொடுமையானது அவர்களை புரிந்து கொண்டு அவகளை சுற்றி இருப்பவர்கள் அன்பும் அரவனைப்பும் இருந்தால் மிகவும் நல்லது. .
Tweet | ||||||
6 கருத்துகள்:
தகவலுக்கு நன்றி ஜலீலா, தாங்கள் எழுதியது போல, பச்சைக் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை விட முக்கியம் மனதை திடமாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி நல்ல தகவல் கொடுத்து இருக்கின்றீர்கள்
ஆமாம் ஷபி எடுத்துகொளள வேண்டிய உணவு என்பது என் சொந்த டிப்ஸ் அங்கு இடையில் போட முடியவில்லை நானும் முன்று நாளா டிரை பண்றேன், பதிவு ரொம்ப வே என்னை பாடு படுத்தி விட்டது.
லிங்க் கும் எப்படி கொடுப்பது என்று போட்டு பாதி பதிவு டெலிட் ஆகி கடைசியில் என்ன இருக்கோ அதை போட்டு இருக்கேன்.
அந்த எடுத்து கொள்ள வேண்டிய உணவு படுத்த படுககையா கிடந்தவரை 16 நாளில் ஓரளவிற்கு எழுந்து உட்கார வைத்தது.
இது கேன்சர் நோயாளி என்றில்லை, ஆப்ரேஷன் செய்த யாருமே அந்த உணவை கடை பிடித்தால் நல்ல தொம்பு கிடைக்கும்.
என்னுடைய ஒவ்வொரு குறிப்பையும் தவறாமல் படித்து பதில் அளிக்கும், நவாஸ் மட்டும், ஷபிக்ஸ் க்கு மிக்க நன்றி.
இது உங்கள் மூலமாக பலரை சென்றடையனும்.
பதிவு என் சொந்த நடையில் எழுதி இருக்கேன். சரியாக கோர்வையா எழுத வரல
இதன் தொடர்சி இன்னும் கொஞ்ச நாள் கழித்து.
நன்றிங்க.. அப்படியே அவங்ளோட என்னையும் சேத்துக்கோங்க..
சேர்த்து கொள்கிறேன், சேர்த்து கொள்கிறேன், இல்லை என்றால் ஜக்கம்மாவிற்கு பதில் சொல்ல முடியாது.
நன்றி ராஜ்,
தவறாமல் படித்து பதில் போட்டமைக்கு, ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் படிக்கீறார்கள், ஆனால் யாரும் பதில் போடுவதில்லை.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா