Sunday, August 9, 2009

கிரிஸ்பி லாலி பாப் பிரை






தே.பொருட்கள்
சிக்கன் லெக் பீஸ் - 10
மிளகாய் தூள் - ஒரு மேசை கரண்டி
சிக்கன் மசாலா - ஒரு மேசை கரண்டி
உப்பு - இரண்டு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசை கரண்டி
கார்பிளார் மாவு - இரண்டு மேசை கரண்டி
பிரெட் கிரெமெஸ் - கால் கப்
முட்டை - இரண்டு
கரம் மசாலா தூள் - அரைதேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
கொத்து மல்லி தழை - சிரிது
கருவேப்பிலை - சிறிது
கடலை மாவு - இரண்டு தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி










செய்முறை





1. தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.சிக்கனை நன்கு (ஒரு சொட்டு, வினிகர், இரண்டு தேக்கரண்டி கடலை மாவு )சேர்த்து பிசறி கழுவி எடுக்கவும்.
அப்போதுதான் சிக்கன் வடை வராது.


2.கழுவிய சிக்கனை நல்ல ஆழமாகா நாலா பக்கமும் கீரல் போட வேண்டும்.


3.சிக்கனை குக்கரில் போட்டு அதில் உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட்,பாதி மிளகாய் தூள்,பாதி சிக்கன் மசாலா,கரம் மசாலா, கருவேப்பிலை ,கொத்துமல்லி மண்போக கழுவி பொடியாக அரிந்து அதையும் சேர்த்து நன்கு பிசறி இரண்டு விசில் விட்டு இரக்க வேண்டும்.



4.தனியாக ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டை, மீதி உள்ள மிளகாய்தூள்,சிக்கன் மசாலா,கார்ன்பிளார் மாவு கிரெம்ஸ் பவுடர் அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும்.










5.வெந்து வைத்துள்ள சிக்கனில் தண்ணீர் அதிகம் இருந்தால் அதை வடித்து விட்டு மசாலாவோடு சேர்த்து நல்ல பிசறை வைக்கவேண்டும். மசாலா சச்ரியாக ஒட்ட வில்லை என்றால் வடித்த தண்ணீர் சிறிது ஊற்றி பிசையலாம்.இப்போது இருபது நிமிடம் ஊறவைக்கவேண்டும்.


6. ஒரு வாயன்ற வனலியில் பொரிக்க தேவையண எண்ணை ஊற்றி + படரும் சேர்த்து கொள்ளலாம். கொள்ளும் அள்விற்கு போட்டு மிதமான தீயில் நல்ல மொருகலாக பொரித்து எடுக்கவேண்டும்.




7. பொரித்ததை நன்கு எண்ணை வடியுமாறு ஒரு டிஸு பேப்பர் (அ) நியுஸ் பேப்பரில் வைத்து வடிய விட வேண்டும்.




8.சுவையான கிரிஸ்பி லாலிபாப் சிக்கன் ரெடி.



குறிப்பு


சிக்கன் பிரை செய்யும் போது மசாலா போட்டு ஊறவைத்தால் லாலிபாப்பில் உள்ளே வேகாது, சில பிள்ளைகள் மென்று சாப்பிடாமல் அப்படியே முழுங்குவார்கள், அப்போது நெஞ்சிலேயே நிற்கும்.செமிக்காதுஇப்படி ஒரு விசில் குக்கரில் வேக விட்டு செய்வதால் உள்ளே நல்ல வெந்து குழந்தைகளுக்கு ஈசியாக சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

இது நான் செய்யும் பல வகையில் ஒரு வகை

6 கருத்துகள்:

R.Gopi said...

ஜலீலா

என்னிக்கு பண்ண போறீங்க? எப்போ பண்ணுனீங்க?

நல்லா இருந்ததா??.... என்சாய்....

Jaleela said...

என்ன சொல்றீங்க ஒன்றும் புரியல

R.Gopi said...

இந்த சிக்கன் லாலிபாப் ஃப்ரை எப்போ பண்ணுனீங்க, இல்ல ஏற்கனவே பண்ணிட்டீங்களான்னு கேட்டேன்....

நல்லா இருந்துச்சா, என்ஜாய் பண்ணுங்கன்னு சொன்னேன்...

இப்போ, ஓகேவா ஜலீலா?

தமிழரசி said...

நான் செய்துட்டு சொல்றேன் டா.... நன்றி சொல்லி கொடுத்ததுக்கு...

Jaleela said...

நன்றி தமிழரசி நான் காத்திருக்கிறேன்

Jaleela said...

கோபி இது பிள்ளைகளின் பேவரிட், அடிக்கடி செய்வது.
பல சுவைகளில்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா