Sunday, August 23, 2009

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்


தேவையான பொருட்கள்



வேக வைக்க



காய்ந்த பட்டாணி - ஒரு டம்ளர்
உப்பு - ஒரு பின்ச்



தாளிக்க



எண்ணை - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் - ஒன்று
காய்ந்த மிளகாய் - ஒன்று
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் - ஒரு பத்தை (பொடியாக நீளவாக்கில் அரிந்தது)
உப்பு = ருசிக்கு
கிளி மூக்கு மாங்காய் = கால் பாகம்

செய்முறை

1. பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் ஒரு பின்ச் உப்பு சேர்த்து இர‌ண்டாவ‌து விசில் வ‌ரும் போது அடுப்பை அனைக்க‌வும், இல்லை என்றால் குழைந்து விடும் வெந்ததும் தண்ணீரை வடித்து வைக்கவும்.

2. பிற‌கு ஒரு வயகன்ற வானலியில் எண்ணை விட்டு கடுகு,காய்ந்த மிள‌காய் , பச்சமிளகாயை பொடியாக அரிந்து போட்டு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

3. க‌டைசியாக‌ வேகவைத்த பட்டாணி, நீளவாக்கில் அரிந்த தேங்காய், மாங்காய் சேர்த்து கிளறி தேவைக்கு உப்பு சேர்த்து இரக்கவும்.
குறிப்பு

இது நோன்பு காலங்களில் மாலை நோன்பு திறக்கும் சமயம் சாப்பிடலாம், மற்ற நேரங்களிலும், மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பீச் தான்.
இதில் மாங்காய் சேர்ப்பதால் சுவை ரொம்ப சூப்பராக இருக்கும்.கர்பிணி பெண்கள் மசக்கை நேரத்தில் வாய்க்கு ருசி படும்.
இதில் மாங்காய் எனக்கு கிடைக்காததால் சேர்க்க‌ ப‌ட‌வில்லை, செய்யும் போது சேர்த்து கொள்ள‌வும்.
சூப்பரான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் தயார்.

4 கருத்துகள்:

சீமான்கனி said...

ஐ....நான்தான் பாஸ்ட் ....
அக்கா என் அம்மா அடிக்கடி பண்ணுவாங்க நல்லக்கும்........

தாஜ் said...

நோன்பு திறக்க இன்று என்ன செய்யலாம் என குழப்பத்தில் இருக்கும்போது நினைவுக்கு வருவது உங்கள் வலைதான் நன்றி

Jaleela Kamal said...

சீமான் கனி என் சமையல் எல்லாம் உங்கள் அம்மாவை நினைவூட்டி கொண்டு இருக்கு, முதலில் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

தாஜ் நோன்பு நேரத்தில் நிறைய வேலை இருக்கும், அபப்டி இருந்தும் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

என்ன சமையல் வேண்டு மானாலும் கேட்கலாம் உடனே போடுவேன், ஆனால் படம் தான் உடனே இனைக்க முடியாது,

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா