Friday, July 22, 2011

சிக்கன் பிஸ்ஸா தோசை - chicken pizza dosai


இது முழுக்க முழுக்க என் முயற்சி,இப்ப குட்டிசுக்கு பிட்சா என்றால் முன்று வேளைக்கும் செய்து கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். ஓவன் இல்லாதவர்கள், பிரட் பண்ணில், தோசைமாவில் பிட்சாவாக சைவம் மற்றும் அசைவ முறையில் தயாரிக்கலாம்.
காய்கறிகளை வைத்தும் இதே போல் பல வகையாக பிஸ்ஸா தோசை செய்யலாம். இந்த முறையில் செய்வது ஆரோக்கியமும் கூட குழந்தைகள் சாப்பிடாத காயகறிகளை இப்படி பிஸ்ஸா தோசையாக்கிசாப்பிட வைத்துடலாம்.

தேவையான பொருட்கள்

தோசை மாவு - முன்று குழிகரண்டி

சிக்கன் போன்லெஸ் - 100 கிராம்
(மிளகுதூள் - அரை தேக்கரண்டி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை தேக்கரண்டி,உப்பு)

ஆலிவ் காய் கருப்பு மற்றும் பச்சை - 12
துருவிய சீஸ் - முன்று சூப் ஸ்பூன் முழுவதும்


பிஸ்ஸா சாஸ் (அ) கெட்சப் - தேவைக்கு



செய்முறை

சிக்கனை பொடியாக அரிந்து சிறிது உப்பு ,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகு தூள் சேர்த்து வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்.
முதலில் தவ்வாவை காயவைத்து சிறிது எண்ணை ஊற்றி வெங்காயத்தை பாதியா அரிந்து நன்கு தேய்க்கவும். (அப்பதான் ஒட்டாமவரும்).

ஒரு பெரிய குழி கரண்டி அளவு தோசைமாவை சிறிது தடிமனாக ஊற்றவும்.

பாதி வேகும் போது பிட்சா சாஸை தோசை முழுவதும் தேய்த்து சிக்கன் ஆலிவ் காயை பரவலாக தூவி மேலே சீஸை தூவி விடவும்.
சிறிது பட்டர் அங்காங்கே தெளித்து விடவும்.முடி போட்டு 2 நிமிடம் விட்டு தோசையை எடுக்கவும்.
சூப்பரான சுவையான சிக்கன் பிட்சா தோசை ரெடி.


பரிமாறும் அளவு: ஒரு நபருக்கு
முன்று பிட்சா தோசை வரும்.

டிஸ்கி: பார்த்துட்டு சும்மா போகக்கூடாது உங்கள் பொன்னா கமெண்டுகளை சொல்லிட்டு போங்க...



29 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

விதம் விதமா செய்து குழந்தைகளை சாப்பிட வைத்தால் சரிதான் ...

Geetha6 said...

அருமை தோழி ,வாழ்த்துக்கள்

ஆமினா said...

சிக்கன பச்சையாவே போடணுமா? சரியா இருக்குமா?

ஸாதிகா said...

தோசையிலும் பிஸ்ஸா செய்து கட்டி விட்டீர்களா ஜலி?கஃல்ப் வந்தாச்சா?

ஸாதிகா said...

பிஸ்ஸா சாஸ்??????????

இமா க்றிஸ் said...

மீண்டும் சந்தித்தது சந்தோஷம் ஜலீலா.

அந்நியன் 2 said...

அட தோசையில் பீஸ்ஸாவா!!!

பரவா இல்லை அசத்துங்கள் அக்காள்.

வாழ்த்துக்கள்!

Modi said...

ஸலாம் ஜலீலா அக்கா.. ரொம்ப நாளைக்குப்பிறகு.. உங்கள் தந்தையின் மறைவு செய்து உங்கள் பிளாக் மூலம் அறிந்தேன். எல்லாம் இறைவனின் நாட்டப்படியே நடைபெறும்..நம்மால் என்ன செய்ய முடியும்..

Jaleela Kamal said...

வாங்க நட்புடன் ஜமால். ஆமாம் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், சாஸ் சீஸ் என்றால் சத்தமில்லாமல் காலிஆகும்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி கீதா

Jaleela Kamal said...

ஆமினா, 2 மாதம் முன் போட்டு வைத்த பதிவு, சரி பார்க்காம போட்டு விட்டேன்.

சிக்கன் வேகவைத்து உதிர்த்து கொள்ளனும்.

நீண்ட நாள் கழித்து உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா துபாய் வந்துவிட்டேன்.
சந்திக்க முடியாமல் போய் விட்டது.வருத்தம்

Jaleela Kamal said...

பிஸ்ஸா சாஸ் இங்கு தனியாக கிடைக்கிறது.

Jaleela Kamal said...

வாங்க அந்நியன் நலமா?
எங்க கடைக்கு போனீங்களா?

தோசையில் இன்னும் பல விதம் செய்யலாம். அதுவும் பிஸ்ஸா என்றால் எல்லோருக்கும் பிரியமாச்சே/

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

மோடி (ஜலீலா அக்கான்னு ) போட்டு இருக்கீங்க யாருன்னு தெரியல பெயரை போட்டு இருந்தா தெரிந்து இருக்கும்.
எவ்வள்வு ஆற்றி கொண்டாலும் ஆற்றி கொள்ள முடியல.

Jaleela Kamal said...

இமா அக்கா ரொம்ப அதே நினைப்பா இருக்கு,பதிவாவது போடும் என்று வந்தேன்.

Angel said...

தோசை மாவு வீட்ல இருக்கு உடனே செஞ்சுடறேன் .
உங்க பதிவை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு .

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஆஆஆஆஆ ஜலீலாக்கா.... வாங்க வாங்க.... ஊரில் அனைவரும் நலம்தானே?.

பழையபடி தொடருங்க ஜலீலாக்கா...

'பரிவை' சே.குமார் said...

ஜலீலாக்கா.... நலம்தானே?.

பழையபடி தொடருங்க...

தோசையிலும் பிஸ்ஸாவா!!!!!

zumaras said...

ஸலாம்
வந்துட்டீங்களா!வருகையை எதிபார்த்து இருந்தேன்.நோன்புகால சமையல் கிடைக்குமே என்று..
ரமழான் முபாரக்

Umm Mymoonah said...

No words to describe your creativity, romba superaga irrukudu . Thank you for linking with Any One Can Cook, also looking forward to your entries for Iftar Moments :)

Jaleela Kamal said...

ஏஞ்சலின் கண்டிப்பா செய்து பாருங்க எல்ல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.

Jaleela Kamal said...

அதிரா பழைய படி வர முயற்சி செய்கீறேன்.
கருத்து தெரிவித்தமைக்கு நன்றீ

Jaleela Kamal said...

வாங்க சே குமார் ஆமாம் தோசை பிரெட், பன் எல்லாத்திலும் அடிக்கடி செய்வது,
நல்ல இருக்கும் தங்கமணி கிட்ட சொல்லி செய்ய சொல்லுங்கள்.

Jaleela Kamal said...

ஜுமாராஸ், பழையபடி பதிவு போட முடிய்மான்னு தெரியல நோன்பு கால சமையல் மீள் பதிவு செய்கீறேன்

Jaleela Kamal said...

உம்மு மைமூன் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Radhika said...

You have a nice place here. Hats off for the tamil version. Happy to follow you. Do stop by mine when you find time.

CREATIVE KHADIJA said...

Hi Dear,
Thanks for writing your sweet words at my blog, i like your blog but i cant read this language, please add a translate gadget on the top left side on page, it will be helpful for others also..
Happy blogging & have a nice day!!

Umm Mymoonah said...

Congratulations! Your recipe got featured in this week Any One Can Cook, also the selected recipe of the month.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா