Saturday, February 19, 2011

கேன்சர் கேன்சர் கேன்சர்




கடந்த ஐந்து வருட காலமாக என் காதில் மாதம் ஒருத்தருக்காவது கேன்சர் இருக்கு என்பது காதில் விழுந்து கொண்டே இருக்கு, அதில் சில பேர் சரியான சிகிச்சை, உணவு கட்டுபாடு, தொடர்ந்து கொடுத்த மாத்திரைகளை சரியாக உட்கொண்டு வருவதால் நன்றாக தேறி இருக்கிறார்கள். ஆனால் சில பேர் ( லிவர் மற்றும் தொண்டையில் கேன்சர் வந்தவர்கள் ஏதும் செய்யமுடியாத நிலையில் இறைவனடி சேர்ந்துள்ளனர்
.

நான் நேரில் கண்ட கேள்வி பட்ட , எனக்கு தெரிந்த கேன்சர் பற்றிய விஷியங்களை எல்லோருக்கும் தெரிய படுத்தனும் என்ற் நோக்குடன். ஏற்கனவே பிளாக்கில் 4 பதிவுகள் போட்டு வைத்து இருந்தேன் அதை யாரும் படித்த மாதிரி தெரியல,
லேடிஸ் ஸ்பெஷலுக்காக தேனக்கா பதிவு அனுப்ப சொல்லும் போது என்ன செய்வது சமையலை தவிர ஒன்றும் தெரியாதே என்று எண்ணும் போது கேன்சர் என்னும் கொடிய நோயாலா எங்க வீட்டிலேயே அவதி பட்டவர்கள் இருக்கிறார்கள், ஆகையால் அதை பற்றியே எழுதி விட்டேன்.

இன்னும் பல சொந்தஙக்ள், மற்றும் தோழமைகள் வீட்டிலும், இப்படி இந்த ஐந்து வருடத்தில் எனக்கு 25 பேருக்கு மேல் வந்துள்ளது. இன்னும் உலகத்தில் பல பேருக்கு இருக்கும்

(இது பெண்களுக்கு தொண்டை, லிவர்,கர்ப்ப பை , மார்பக புற்றுநோயும்)வந்துள்ளது.


(ஆண்களுக்கு குடல், பிரெயின், நாக்கு, லிவர் ,பிளட் கேன்சர் போன்றும் வந்துள்ளது.)



(ஆண்களுக்கு, தொடர்ந்து சிக்ரேட் பிடிப்பதாலும், என்னோரமும் பான் பீடா போடுவதாலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் பேச்சுலர்களுக்கு சாப்பாடு பிரச்சனையாலும் ,சாப்பாடு ஒத்துக்காமல் வாய் புண் அல்சர் பிறகு அதே கேன்சராகவும் மாறி இருக்கு)

வாய் புண் மற்றும் அல்சர் வராமல் ஓரளவுக்கு பாதுக்காக்கும் டிப்ஸை பிற்கு போடுகிறேன். .
இதற்கான உணவு முறைகள் சிலவற்றை பின்பு போடுகிறேன்.

இப்போதைக்கு லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழுக்கு நான் அனுப்பிய கட்டுரை சிலர் ஜூம் செய்து படிக்க முடியல என்றாதால் இங்கு அந்த மெசேஜை போட்டுள்ளேன்
லேடிஸ் ஸ்பெஷல் பிப்ரவரி மாத இதழில். 50 , 51 ஆம் பக்கம் என்படைப்பு.

சமையல் முதல் கேன்சர் வரை என்ற தலைப்பில் என் படைப்பு

இப்போது பெருகிவரும் நோயில் இப்போது சாதரண ஜுரம் தலைவலி போல் புற்று நோயும்
அதிகரித்து கொண்டே இருக்கு முன்பு இதற்கு மருந்தில்லை என்ற காலம் போய் இப்போது
அதை கை தேர்ந்த டாக்டர்கள் குணபடுத்தவும் செய்கிறார்கள்.
பெண்கள் இருக்கிற அவசர உலகில் வேலை வேலை என குழந்தைகளையும், கணவரையும் ,
பெரியவர்களையும் கவனிக்கும் பிஸியில் தங்கள் உடல் நலத்தை சற்றும் கவனிப்பதில்லை
நேரத்துக்கும் உணவும் உட்கொள்வதில்லை.இதனால் பிற்காலத்தில் உடல்நலம் இயலாமல்
போவதை பற்றி சற்றும் நினைப்பதில்லை.


-- 1. முதலில் எக்பேரி டேட் ஆன பிரெட் அது பார்க்க வெளியில் நல்ல இருந்தாலும்
உள்ளே பூஞ்சை பிடித்து இருக்கும்.அதே போல் ஊறுகாயிலும் சில நேரம் பூஞ்சை
வந்திருக்கும். அதை எல்லாம் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.


2. அடுத்து தினம் பயன் படுத்து ஆயில் சிக்கன், அப்பளம் போன்றவை பொரித்து விட்டு
அந்த மீதி எண்ணையை என்ன செய்வது என்று தெரியாமல் நாள் பட வைத்து பயன்
படுத்தாதீர்கள். முடிந்தால் குறைந்த அளவில் ஊற்றி பொரித்து எடுங்கள். இல்லை
இரண்டு முன்று நாட்களுக்குள் அதை பயன்படுத்தி முடித்து விடுங்கள்.


3. அடுத்து முட்டை, கட்லெட்,அப்பளம், ரொட்டி, மீன் போன்றவை கவனக்குறைவால்
கரிந்து போய் விடும் அதை தூர போட மனமில்லாமல் வீட்டில் உள்ள பெண்கள் தான்
என்னவோ என்ன என்ன மீதி ஆகுதோ அதுக்கேல்லாம் அவர்கள் வயிறுதான் குப்பை தொட்டி
போல் போட்டு உள்ள தள்ளுவது, இது போல் தவறு இனி செய்யாதீர்கள்.


4. அடுத்து புது துணிவாங்கும் போது கண்டிப்பாக கவணம் தேவை. வேவ்வேறு நாட்டில்
இருந்து தயாரித்து வருகிறது, அதில் பல பேர்களிம் கை பட்டு தான் வந்து ந்

சேரும் அதனால் பல வியாதியை தரும் கிருமிகள் தொற்றி இருக்கும்.. இனி ஒரு முறை
வீட்டில் அலசி அயர்ன் செய்து விட்டு போட்டு கொள்ளுங்கள்.


5 . பெண்கள் உள்ளாடை கருப்பு கலர் போடுவதை தவிர்க்கவும்.பெண்கள் உள்ளாடைகளை
வெண்ணீரில் அலசுங்கள். இப்படி செய்வதால் கிருமிகள் அழியும்.உள்ளாடைகளை 6
மாதத்துக்கு மேல் பயன் படுத்த வேண்டாம்.நெடு நாட்களாக வெள்ளை படும் பெண்கள்
உடனே டாக்டரிடம் போய் காண்பிக்கவும், இல்லை என்றால் கர்ப்பபையில் கேன்சர் வர
வாய்ப்பிருக்கு.கர்ப்ப பையில் கேன்சர் வந்தால் அது கிட்னி லிவரையும்
பாதிக்கும்.



6. ஆண்கள் பான் பீடா போடுவதை தவிர்க்கவும். என்னேரும் பான் பீடா
போடுவர்களுக்கு நாக்கில் கேன்சர் வர வாய்ப்பு இருக்கு.இது நேரில் க‌ண்ட‌து
அந்த‌ ந‌ப‌ர் இப்போது உயிரோடு இல்லை.


7. எந்த‌ வியாதியும் த‌லைவ‌லியோ ம‌ற்ற‌வ‌லியோ தொட‌ர்ந்து ஒரு மாதத்திலிருந்து
முன்று மாத‌ம் ஆறு மாத‌ம் என்று விடாம‌ல் வ‌ந்தால் உட‌னே முறையாக‌
டிரீட்மெண்ட் எடுக்க‌வும். நீங்களாக வீட்டு வைத்தியம் எடுக்க வேண்டாம்.


8. பிளாஸ்டிக் பாட்டில் அதை திருப்பி பார்த்தால் முக்கோண வடிவத்திற்குள் நம்பர்
1 என்று இருக்கும். அதை அதிக நாட்களுக்கு பயன் படுத்தலாம். நம்பர் 5 உள்ளதை
ரொம்ப நாட்களுக்கு பயன் படுத்த கூடாது


9. ஒரு 45 வ‌ய‌து பெண்ணிற்கு வாயில் புண்ணு இர‌ண்டு வ‌ருட‌மா இருந்திருக்கு அது
வ‌லிக்க‌வும் இல்லையாம் க‌டைசியில் போய் காண்பிக்க‌ போன‌ அது கேன்ச‌ர் , லாஸ்ட்
ஸ்டேஜ் ஒன்றும் ப‌ண்ண‌ முடியாது என்று சொல்லிவிட்டார்க‌ள், இன்னும் அதிக‌மாகி
பிற‌கு சாப்பிட‌ முழுங்க‌ முடியாம‌ல் இர‌ண்டு மாதமாக‌ அவ‌தி ப‌ட்டு அவ‌ர்
இறைய‌டி சேர்ந்துவிட்டார்.

.


10. பெண்கள் எல்லோரும் 35., 40 வயதை கடக்கும் போது கண்டிப்பாக எண்டோஸ்கோபி
டெஸ்டும், மேமோகிராம் டெஸ்டும் எடுத்து கொள்ளவேண்டும். நோய் இருக்கோ இல்லையோ
ஒரு வருடத்துக்கு ஒரு முறை ஒரு ஜென‌ர‌ல் செக்க‌ப் செய்து கொள்வ‌து ந‌ல்ல‌து.


எல்லாத்துக்கும் நம் உணவு முறை தான் காரணம் . சரியான உணவு முறையை எடுத்துக்கொண்டாலே நல்லது
உணவே மருந்து.

Jaleela Banu, Dubai
கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியது.இதையும் சென்று படிக்கவும்.


46 கருத்துகள்:

Lifewithspices said...

Migavum arupudhamaana post.Even i have missed 2 of my close people because of stomach cancer. Let this be an awakening post.

Thanks.

Unknown said...

Migavum nalla kuripugal. Thanks for sharing Jaleela.

நட்புடன் ஜமால் said...

informative ...

R.Gopi said...

ஜலீலா மேடம்...

நிறைய உபயோகமான விஷயங்களை அழகாக தொடுத்து மாலையாக தந்தமைக்கு நன்றி...

தொடர்ந்து இது போல் பல பதிவுகளை பதிந்து கலக்குங்கள்...

சுதர்ஷன் said...

மிகவும் பயனுள்ளதும் தேவைப்பட்ட தகவலும் கூட :)

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

athira said...

தலைப்பைப் பார்த்ததும் பயந்திட்டேன்.

மிகவும் பயனுள்ள தகவல் உண்மைதான், பல பேருக்கு கவனக்குறைவாலும் இது உள்ளே இருந்து முத்தி விடுகிறது.

லேடீஷ் ஸ்பெஷலிலும் கலக்குறீங்க வாழ்த்துக்கள்.

நாஸியா said...

rombo thanks akkka. Jazakallah,,, sila vishayangal rombave informative

ராமலக்ஷ்மி said...

விழிப்புணர்வைத் தரும் நல்ல கட்டுரை. லேடீஸ் ஸ்பெஷலில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஜலீலா.

Vijiskitchencreations said...

நல்ல பயனுள்ள தகவல். அதை நல்ல பக்குவமா தெரிவித்திருக்கிங்க.

அமுதா கிருஷ்ணா said...

மிக அவசியமான கட்டுரை.

சௌந்தர் said...

நல்ல பதிவு அக்கா...எனக்கு தெரிந்த ஒரு வயதான பாட்டிக்கு வாயில் கேன்சர் வந்து கன்னத்தில் இருக்கும் சதை எல்லாம் அழிந்து விட்டது....அவருக்கு கேன்சர் அவர் புயிலை மற்றும் சுருட்டு பிடிப்பார்...அந்த நோய் வந்தும் அவர் அந்த பழக்கத்தை விட வில்லை....

பெண்கள் 40 வயதுக்கு மேல் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்....

இந்த தகவல்கள் மேலும் பல பேருக்கு சென்று வரவேண்டும்...

ஆயிஷா said...

நல்ல பயனுள்ள தகவல்.

Angel said...

email reader il vandhadhaal naan andha post mudhalil paditheen.both are very informative .

சாந்தி மாரியப்பன் said...

நல்ல கட்டுரை ஜலீலா..

Umm Mymoonah said...

Romba thanks sister ethai share panniyatharku, everybody should read this.

varagan said...

கடைகளில் சாம்பார் மற்றும் சுடான Fast Food களை பிளாஸ்டிக் பைகளில் வாங்க வேண்டாம் என எச்சரியுங்கள்.

இன்று காபி,டி மற்றும் பல சுடான திண்பண்டங்கள் பிளாஸ்டிக் கவரில் பெறுகிறோம்.

இது முக்கியமாக தவிர்க்கப்படவேண்டும்.

அன்புடன்

வராகன்.

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு பகிர்வு ஜலீலாக்கா.

enrenrum16 said...

மிகவும் பயனுள்ள தகவல்கள் ஜலீலாக்கா... சமையல் மட்டுமல்ல்..சமூகநலத்திலும் உங்களுக்குள்ள அக்கறையை வெளிப்படுத்திவிட்டீர்கள்:)...
வாழ்த்துக்கள்...

GEETHA ACHAL said...

அனைவருக்கும் பயனுள்ள பதிவு...கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு...அருமையாக எழுதி இருக்கின்றிங்க..பகிர்வுக்கு நன்றி...

Akila said...

romba usefullana vishayam... thanks for sharing...
Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

தூயவனின் அடிமை said...

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

Julaiha Nazir said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலிலாக்கா நலமா...
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஜலீலாக்கா...கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது. சமையல் மட்டுமல்ல்;சமூகநலத்திலும் உங்களுக்குள்ள அக்கறையை வெளிப்படுத்திவிட்டீர்கள் தொடரட்டும் உங்களின் பணி வாழ்த்துக்கள்

Nithu said...

Even I have been hearing a lot of news about people suffering from cancer. It is so sad. As u said, we need to be take care of us and be careful about the food habits. Nice post.

கோமதி அரசு said...

உங்கள் சமையல் முதல் கானசர் வரையை லேடிஸ் ஸ்பெஷ்லில் படித்தேன்.

தேவையான விஷயம்.

பாலக் வடை,மூவர்ண குடை மிளகாய் சாதம் நன்றாக இருக்கிறது நன்றி.

வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

லேடீஸ் ஸ்பெஷலில் வாசித்தேன் ஜலீலா.தேவையான பகிர்வு.மீண்டும் வாழ்த்துக்கள்.

Aruna Manikandan said...

Nice informative post akka
Thx. for sharing :)

Unknown said...

கேன்சரைப் பற்றி அருமையா தொகுத்திருக்கீங்க.நல்ல பயனுள்ள கட்டுரை.பகிர்வுக்கு நன்றி.

ADHI VENKAT said...

நல்லதொரு பகிர்வு. அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

mak said...

பிளாஸ்டிக் பாட்டிலின் பின் புறத்தில்
முக்கோணத்தின் உள்ளே போடப்படும் நம்பர்
5 அல்லது அதற்கு மேலும் உள்ளதே உணவு பயன் பாட்டிற்கு உகந்தது
5 அல்லது அதற்கு குறைவானதை பயன் படுத்த கூடாது
அல்லது ஒரு முறை பயபடுத்தி தூகிஎரிய வேண்டும் .
1 போடப்பட்டுள பாட்டில் use அண்ட் த்ரோ
உங்கள் தகவலுக்கு நன்றி

mak said...

http://makku-maggu.blogspot.com/2010/02/blog-post.html

http://makku-maggu.blogspot.com/2010/02/blog-post.html

பித்தனின் வாக்கு said...

very good and useful article

R. Gopi said...

நல்ல பதிவு

Malar Gandhi said...

That is whole lot of good information. Good to create awareness through readers. Thanks for sharing the information with us.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா..,மிகவும் பயனுள்ள பகிர்வு...
கேன்சரின் தாக்கம் இப்போது அதிகாமகி கொண்டே வருவது மிகுந்த வருத்தத்திற்க்குரிய விஷயம்.
அதற்க்கேற்றர் போல் உங்கள் பதிவு இருப்பது சிறப்பு....
இறைவன் நம் அனைவரையும் இது போன்ற கொடூரமான வியாதிஅக்ளிலிருஎது பாதுகாப்பானாக....

அன்புடன்,
அப்சரா.

எம் அப்துல் காதர் said...

ரொம்ப அருமையான தகவல் ஜலீலாக்கா. நிச்சயம் எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த அற்புதமான மருத்துவ விழிப்புணர்வு கட்டுரையை தந்த சகோதரரி ஜலீலா கமால் அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டவன் நான், ஒரு சில புற்றுநோய்கள் கடும் வலி கொண்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து பணிவிடை செய்துள்ளோன். அவர்கள் படும் வேதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நினைத்தாலே கண்ணீர் வரும். இறைவன் நம் எல்லோரையும் பாதுக்காக்கவேண்டும்.

சரியான உணவு பழக்கங்களே இது போன்ற நோய்களுக்கு காரணம் என்பதை வழியுறுத்தி சொன்னதற்கு மிக்க நன்றி.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி, நமக்கு எந்த நோய்யையும் தருபவன் இறைவனே அதை குணமாக்குபவனும் அவனே. இவையெல்லாம் நம்முடைய ஈமானை சோதிப்பதற்காகவே.


இது போன்ற கொடிய நோயிலிருந்து யா அல்லாஹ் எங்கள் எல்லோரையும் பாதுகாப்பாயாக...

சகோதரி ஜலீலா கமால் உங்கள் அனுமதியுடன் எங்கள் வலைப்பூவில் இந்த கட்டுரையை வெளியிட்டோம், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது நேரம் கிடைதால் உங்கள் பதிலை பதியுங்கள் கீழ் உள்ள சுட்டிக்கு சென்று.

http://adirainirubar.blogspot.com/2011/02/blog-post_4272.html

Jaleela Kamal said...

வாங்க கல்பனா,இந்த கொடிய வியாதியால் இரண்டு பேரா , மிகவும் மனவருத்தமே.
கருத்துக்கு மிக்க நன்றி திவ்யா
நன்றி சகோ.ஜமால்
கருத்துக்கு மிக்க நன்றி மதி சுதா
நன்றி கோபி.உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி

வாங்க சுதர்ஷன் வருகைக்கு மிக்க நன்றி

ஆமாம் அதிரா நினைத்தாலே மிகவும் வருத்தமாக இருக்கிறது .

ஆமாம் நாஸியா எல்லாம் நேரில் கண்ட்தால் இந்த அளவுக்கு சொல்ல முடியுது.
நன்றி ராம்லஷ்மி

Jaleela Kamal said...

@ வாங்க விஜி டீச்சர் இந்த பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு, எப்படி இருக்கீங்க.கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

@ வருகைக்கு மிக்க நன்றி அமுதா

@ சௌந்தர் புகையிலை போடுபவகளையும் கண்டிப்பாக எச்சரிக்கனும், பிறகு அந்த் கொடிய வியாதியால் உடல் நலம் கெட்டு, எதுவும் சாப்பிடவும் முடியாமல், பணமும் தண்ணியாக செலவாகுவதற்கு இப்படி இதை பற்றி, தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்வது நல்ல்து,
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சௌந்தர்

@ நன்றி ஆயிஷா

ஏஞ்சலின் இந்த கொடிய வியாதியால் உங்கள் அப்பாவை இழந்த்து குறித்து மிக வருத்தம், என்ன செய்யட்டும் , எல்லாம் இறைவன் செயல்.

@ நன்றி அமைதி சாரல்

@ Thanks for leave a comment umm.

Jaleela Kamal said...

வாரகன்
இப்ப எல்லோரும் விரும்புவது பாஸ்புட் தானே , கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல் பிளாஸ்டிக் பை சூடான உள்ளதை சாப்பிட கூடாது, கண்டிப்பாக டீ காபி சிலருக்கு பழகி போவதால் விட முடியாமல் இப்படி ஆகிவிடுகிறது.,
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

@ சே.குமார் மிக்க நன்றி
@ என்றென்றும் 16 உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, எனக்கு தெரிந்த்தை சிலருக்கும் உதவும் எண்ணத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
@ வாங்க கீதா ஆச்சல் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி/

@நன்றி அகிலா

@ நன்றி இளம் தூயவன்

Jaleela Kamal said...

வா அலைக்கும் ஸலாம் நஹாசி
இது ரொம்ப நாளா எல்லோருக்கும் சொல்ல நினைத்த தகவல், ஏற்கனவே பிளாக்கில் போட்டு சில பேர் தான் படித்தார்கள், இப்ப பத்திரிக்கை அனுப்பியதும் தான் எல்லோரின் பார்வைக்கும் போயிருக்கு.வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

@ வாங்க நீத்து ரொம்ப நாளா ஆளையே காணும், நான் கேள்வி பட்ட்து இல்லாமல் இதனால் பாதிக்கபட்டவர்களை நேரிலும் பார்த்து இருக்கேன்.
வருகைக்கும் மிக்க நன்றி நீத்து.
@ கோமதி அக்கா வருகைக்கும் கருத்து தெரிவித்த்தமைக்கும் மிக்க நன்றி

@ உங்கள் தொடர் வருகைக்கு நன்றி ஆசியா

@ வருகைக்கு மிக்க நன்றி அருனா
@ வாஙக் ஜி ஜி கருத்துக்கு மிக்க நன்றி.

@ நன்றி கோவை2தில்லி எல்லோருக்கும் பயன் பட்டால் மிகுந்த சந்தோஷம் எனக்கு

Jaleela Kamal said...

வாங்க மேக், உங்கள் பதிவையும் படித்து பார்க்கிறேன்,பொதுவா ரொம்ப நாளைக்கு பிளாஸ்டிக் பொருட்களை நாள்பட உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

Jaleela Kamal said...

வாங்க சுதாகர் சார், எப்படி இருக்கீங்க, நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கமெண்ட் , வந்தமைக்கு மிக்க நன்றீ + சந்தோஷம்

Jaleela Kamal said...

@ மிக்க நன்றி கோபி ராம்மூர்த்தி.

@ மிக்க நன்றி மலர் காந்தி

@ வா அலைக்கும் சலாம் அப்சாரா ஆமாம் இப்போது யாருக்கு யாருக்குன்னு தெரியாது, எல்லோருக்கு வருது , ஆனால் இதன் வலி மிக அதிகம், இதற்கான செலவும் மிக மிக அதிகம்.
கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி


@எம் அப்துல் காதர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் தாஜுதீன் ,
இந்த பதிவு அனைவரையும் சென்றடையனும் என்ற நோக்குடன் தான் நீங்கள் கேட்ட்தும் அனுமதி கொடுத்தேன்.இதை படிக்கும் சிலர் வருமுன் காப்போம் என்பது போல் அவரவரும் தங்களை காத்து கொண்டால் நல்லது,

jaleela

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா