ரெசிபி எடிட் செய்து படம் சேர்த்து டைப் பண்ணுவதை விட வீடியோ ஈசியா இருக்கு ஆனால் அதை எப்படி எடிட் பண்ணுவதுன்னு தெரியல. முன்று மாதமாக நிறைய வீடியோ எடுத்து . எதுவுமே சரி பட்டு வரல பாதி தான் சரியா வந்தது. சிலது என்னால் எடிட் பண்ண முடியல கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
சாலமன் பாப்பையாவும் இல்லை சல்மான் கானும் இல்லை
என் முயற்சியில் செய்த ஆரஞ்சு ப்லேவர் கிரில்ட் சால்மன்
உண்மையிலேயே சுவை ரொம்ப நல்ல இருந்தது.
இப்ப நம்முள் நிறைய பேருக்கு விட்டமின் ' D' சத்து குறைந்து இருப்பதாக ஆய்வில் தெரிந்துள்ளதுஎன்று கேள்வி பட்டேன்.
,
நிறைய சத்துள்ளதை சாப்பிட்டாலும் எல்லா சத்துக்களையும் அன்றாட உணவில் சாப்பிடுகிறோமான்னு நாம் கவனிப்பதில்லை.
இந்த சால்மன் மீனில் விட்டமின் டீ சத்து அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்த மீனை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த லின்கை கிளிக் செய்து பாருஙக்ள் .http://youtu.be/M9YVai1w-Tc
வீடியோ சமையல், ஆரஞ்சு ப்லேவர் கிரில்ட் சால்மன் மீன்.
தேவையான பொருட்கள்
ஆலிவ் ஆயில் - 3 மேசைகரண்டி
புதினா - ஒரு மேசைகரண்டி
தில் கீரை - இரண்டு மேசைகரண்டி
கருவேப்பிலை - சிறிது
கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
ஆரஞ்சு ஜூஸ் ( கமலா பழம்) - ஒரு பழம்
லெமன் ஜூஸ் - ஒரு மேசைகரண்டி
செய்முறை
சால்மன் மீனை சுத்தம் செய்து
நீளவாக்கில் தேவையான அளவு துண்டுகளாக போடவும்.
ஒரு பவுளில் ஆலிவ் ஆயில் ஊற்றி அதில் கருவேப்பிலை, கொத்துமல்லி , தில் கீரையை அரிந்து போட்டு மிளகு தூள் வகைகள், உப்பு, ஆரஞ்சு ஜுஸ், லெமன் ஜூஸ் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும் ( மேரினேட் செய்யவும்)
எலக்ட்ரிக் ஓவனை 200 டிகிரியில் செட் செய்து 20 நிமிடம் முற்சூடுபடுத்தி
மிடில் ட்ரேயில் வைத்து 10 , 10 நிமிடம் இருபுறமும் கிரில் செய்யவும். கடைசியாக மேல் ட்ரேயில் வைத்து 10 நிமிடம் கிரில் செய்து எடுக்கவும்.
லெமன் பிழிந்து குபூஸ் ஹமூஸ். உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
மொத்தம் 30 நிமிடம் ஆச்சு. இடையில் வாய்ஸ் ப்ரேக் ஆனதால் சரியாக வீடியோவை சரியாக மெர்ஜ் பண்ண முடியல.
கவனிக்க
இதை அரை மணி நேரத்துக்கு மேரினேட் செய்தால் இன்னும் நல்ல இருக்கும்.
நான் அடிக்கடி கூடுமானவரை லெமன் ஜூஸ் இலலி என்றால் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து செய்வேன்.
ஆரஞ்சு பழம் புளிப்பாக இருந்தால் இது போல் புளிப்பு சுவைக்கு சேர்த்து கொள்ளலாம், இதை பொரித்து அல்லது பார்பிகிவு செய்தும் சாப்பிடலாம்.
Tweet | ||||||
7 கருத்துகள்:
காணொளியும் நன்று... நன்றி...
அருமை...
காணொளி நன்று.
வாவ்வ்வ்வ் ஜல் அக்கா... சாலமன் பாப்பையா... ஹையோ எனக்கும் உங்களைப்போலவே டங்கு:) ஸ்லிப் ஆகுதே..:) சல்மன் மீன் வீடியோ சூப்பரோ சூப்பர்.
நல்ல தெளிவா இருக்கு. அது உங்களோட வொயிஸ்தானே? அவ்வ்வ்வ்வ்.. இன்றுதான் முதன் முதலா கேட்கிறேன்ன்:).
நானும் இங்கு அடிக்கடி செய்வேன். அவனில் வைக்காமல் bbq போல கிரிலில் செய்து பிரீஸ் பண்ணி விடுவேன், பின்பு தேவையின்போது எடுத்து பொரியல்போலவோ அல்லது குழம்பாகவோ செய்வேன்.
இன்னொரு விஷயம் நீங்க தோலுடன் செய்திருக்கிறீங்களே?.. நான் தோலை உரித்து விட்டுத்தான் செய்வேன். ய்ஹோலில் குட்டி குட்டியாக நிறைய செதில்கள் இருக்குமே.. அதை துப்பரவாக்குவது கஸ்டம். ஆனா தோல் உரிப்பது ஈசியாக பிரிந்து வந்திடும்.
I don't know Malayalam but wish you all the best ..:)
Blogger Shobha said...
I don't know Malayalam but wish you all the best ..:)////
Avvvvvvv that is not Malayalam:) that is Tamil:).
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா