Wednesday, January 14, 2015

நெத்திலி மீன் மாங்காய் சால்னா/Anchovies Raw Mango Salna







நெத்திலி மீன் தொக்கு என்றாலே அனைவருக்கும் நாவை சப்புகொட்டவைக்கும், அதில் மாங்காய் சேர்த்தால் சுவையோ சுவை தான் போங்க / கர்பிணி பெண்களுக்கு ஏற்ற உணவு இது முயற்சித்து பாருங்கள் உங்கள் கருத்தை வந்து பகிருங்கள். என் ரெசிபி செய்து பார்த்தால் படத்துடன் என் மெயிலுக்கு feedbackjaleela@gmail.com அனுப்புங்கள். 
தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கு

தாளிக்க 
எண்ணை 3 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பூண்டு - 3 தட்டியது
கருவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி தழை

மாங்காய் - 1 பொடியாக அரிந்தது




செய்முறை

  1. நெத்திலி மீனை ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
  2. ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
  3. பிறகு வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , தனியாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து தீயின் தனலை குறைவாக வைத்து கூட்டு பத்ததுக்கு வரும் வரை வேகவிடவும்.
  4. கடைசியாக மீனையும் மாங்காயை யும் சேர்த்து 7 நிமிடத்த்துக்கு மிதமான தீயில் வைத்து கொதிக்கவிட்டு மீன் வெந்ததும் இரக்கவும்.
  5. கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும்.






மீன் தாளி
ப்ளையின் சாதம்
நெத்திலி மீன் மாங்காய் சால்னா
நெல்லிக்காய் ஊறுகாய்
அப்பளம்





நெத்திலி மீன் தொக்கு

நெத்திலிமீன் கழுவும் விதம்


பெரிய அலுமினியம் கண் வடிகட்டி எடுத்துக்க்கொள்ளுங்கள்.மீனை ஒரு சட்டியில் தண்ணீரில் போட்டு லேசாக அரிசி களைவது போல் கலந்து வடுகட்டியில் போடவும்.
சிங்கில் டேபுக்கு நேரக வடிகட்டியை பிடித்து கொண்டு இரண்டு மூன்று தடவை கையால் உலசி கழுவவும்.
இப்போது அழுக்கு மண் எல்லாம் போய் சுத்தமாகி விடும்.
மீனி தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விறலால் கீறி தலையோடு சேர்த்து முள்ளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும்.
அதே மாதிரி எல்லா மீனையும் செய்யவும்.
இப்போது மீனில் சுத்தமாக முள் இருக்காது மீண்டும் ஒரு முறை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
இப்போது போன்லெஸ் நெத்திலி மீன் ரெடி அப்ப‌ர‌ம் என்ன‌ குழ‌ம்பு வைத்து சாப்பிட‌வேண்டது தான்.
பிள்ளைக‌ளுக்கும் அப்ப‌டியே பிசைந்து ஊட்டி விட‌லாம். இதே கிள‌ங்கா மீனிலும் எடுக்க‌லாம்
.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்பு...
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்...!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா