சிறப்பு விருந்தினர் பதிவு - காயல் ஸ்பெஷல் தம்மடை- ஆயிஷா பஹ்ரைன்
என் பெயர் ஆயிஷா நான் பஹ்ரைனில் கணவருடன் வசிக்கிறேன் எனக்கு மூன்று குழந்தைகள்.
ஜலீலா அக்காவின் அவர்களின் சமையல் வகைகள் அனைத்தும் அருமை ...மிகவும் சுவையாக உள்ளது.ஆரோக்கிய சமையல் மிகவும் உபயோகமான சமையல் ....சமையல் தெரியாமல் இருந்த எனக்கு ஜலீலா அக்காவின் சமையல் ப்ளாக் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது இப்பொழுது ஓரளவு நன்றாக சமைப்பேன்.
அதில் ஜலீலாக்காவின் அவித்த
முட்டை புளி குழம்பு எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது,
இது ஆயிஷா செய்து அனுப்பிய
முட்டை புளி குழம்பு நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்,அல்லது போட்டோவுடன் முகநூலில் பகிரலாம்.
மிக்க நன்றி ஜலீலா அக்கா
என்றும் அன்புடன் சகோதரி
ஆய்ஷா
தேவையான பொருள்கள்;
ரவை - ஒரு ஆழாக்கு
தேங்காய் -ஒரு தேங்காயின் தலை பால் அதுவும் ஒரு ஆழாக்கு
முட்டை -2
ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை
சீனி-ஒரு ஆழாக்கு
பாதம் பிஸ்தா முந்திரி கலவை - கொர கொரப்பாக திரித்தது
நெய்- தேவைக்கு
செய்முறை
ரவை தேங்காய்ய பால் சீனி முட்டை ஏலக்காய் பொடி அனைத்தையும் கட்டி தட்டாமல்கலந்து தம்மடை ஊற்றும் கிண்ணியில் ஊற்றி உங்களுக்கு என்ன பருப்பு வகைகள் வேண்டுமோ அதை கொரகொரப்பாக திரித்து மேலே தூவி தம்மடை அச்சில் நெய் சிறிது தடவி வைத்து ஓவனில் ஐந்து நிமிடம் முன் சூடு படுத்தி இந்த தம்மடையை உள்ளே வைத்து எட்டு நிமிடங்கள் ஹை இல் வைத்து பிறகு வெளியே எடுத்து வெந்து விட்டது என்றால் திருப்பி தட்டினால் விழுந்து விடும்
ஆயிஷா மஹ்மூத்
பஹ்ரைன்
பாரம்பரியம் பாதுக்காக்கபடுகிறது இங்கே இதை பார்வையிடும் உங்களுக்கும் உங்கள் ஊர் பாரம்பரிய சமையலை பகிர ஆர்வம் இருந்தால் எனக்கு புகைப்படத்துடன் உங்கள் குறிப்பை என் மெயிலுக்கு அனுப்பபலாம். இல்லை முக நூல் மெசேஜ் பாக்ஸிலும் கொடுக்க்கலாம். feedbackjaleela@gmail.com cookbookjaleela@gmail.com Traditional Recipes with Special Guest Post/
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
10 கருத்துகள்:
பார்ப்பதற்கே இவ்வளவு அழகாக இருக்கிறது...!
//தம்மடை ஊற்றும் கிண்ணி//
இதுக்கு பதிலா, கேக் அல்லது கஸ்டர்ட் mouldகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்தானே அக்கா?
//ஓவனில் ஐந்து நிமிடம் முன் சூடு படுத்தி இந்த தம்மடையை உள்ளே வைத்து எட்டு நிமிடங்கள் ஹை இல்//
மைக்ரோ ஓவனா அல்லது எலக்ட்ரிக் ஓவனா அக்கா? என்ன டெம்பரேச்சர்?
சூப்பர் பகிர்வு.நான் இந்த தம்மடையை பேன் கேக் மாதிரி செய்து பார்த்திருக்கிறேன்.இது ஈசியாக தெரிகிறதே !
ஈசியாகவும் சூப்பராகவும் இருக்கே.. செய்திட வேண்டும்.. வாழ்த்துக்கள் ஆயிஷா.
முதல் வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்
ஹுஸைனாம்மா , இது சின்ன சின்ன கிண்ணி யில் இப்ப தான ஆயிஷா குறிப்பு மூலமாக தான் பார்க்கிறேன்/
நான் மொத்தமாக கேக் ட்ரேயில் தான் செய்வேன்.
நீங்க எதில் வேண்டுமானலும் ஊற்றி வைத்து செய்யலாம்.
இது ஆயிஷா "குக்கிங் ரேஞ்சில் " செய்து இருக்காங்க, 180 டிகிரியில் , 5 நிமிடம் முற்சூடு படுத்தி, 8 நிமிடங்களில் செய்து இருக்கிறார்கள்,
ஹுஸைன்னாம்மா நீங்க எலக்ரிக் ஓவனிலும் செய்யலாம்.
வருகைக்கு மிக்க நன்றி ஆசியா, கேக் மாதிரி ஊற்றி செய்தாலும் நல்ல இருக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி ஆசியா, கேக் மாதிரி ஊற்றி செய்தாலும் நல்ல இருக்கும்.
அதிரா செய்து பார்த்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா