பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பிரச்சனையே முடி உதிர்தல் தான் , யார் கிட்ட கேட்டாலும் இதை பற்றி புலம்பாதவர்கள் யாரும் கிடையாது.
கருவேப்பிலையை கூடுமானவரை அதிகமாக சேர்த்து கொண்டால் முடி அதிகமாக வளரவில்லை என்றாலும், இருப்பதை தக்க வைத்து கொள்ளலாம்.
கருவேப்பிலை பொடி ( முடி உதிர்தலுக்கு)
கருவேப்பிலையை கூடுமானவரை அதிகமாக சேர்த்து கொண்டால் முடி அதிகமாக வளரவில்லை என்றாலும், இருப்பதை தக்க வைத்து கொள்ளலாம்.
கருவேப்பிலை பொடி ( முடி உதிர்தலுக்கு)
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை – ஒரு கப்
வெந்தயம் – ஒரு
தேக்கரண்டி
கடலை பருப்பு – ஒரு
மேசை கரண்டி
முழு மிளகு - 1 தேக்கரண்டி
பூண்டு 2 ,3 பல் (அ) பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
செய்முறை
கருவேப்பிலையை கழுவி
வெரும் வானலியில் வறுத்து ஆரவைக்கவும்.
தனியாக ஒரு பேனில்
வெந்தயம், கடலை பருப்பு, முழு மிளகு, பூண்டு அல்லது பெருங்காயப்பொடி யை வதக்கி ஆரவைக்கவும்.
மிக்ஸியில்
எல்லாவற்றையும் கொர கொரப்பாக மூக்கால் பதத்துக்கு திரித்து எடுத்து மீண்டும்
ஆறவைத்து ஒரு காற்று புகாத கண்டெயினரில் போட்டு வைக்கவும்.
சாப்பிடும்
முறை:
சுடசுட பிளைன்
சாதத்தில் ஒரு தேக்கரண்டி அளவு கருவேப்பிலை பொடியை சேர்த்து நெய் அல்லது
நல்லெண்ணை கலந்து சாப்பிடவும்.
முடி உதிரும் தொல்லைக்கு
இந்த பொடியை செய்து தொடர்ந்து சாப்ப்பிட்டு வரலாம். பெண்களுக்கு ப்ரசவ நேரத்துக்கு
பிறகு இதை கொடுத்தால் வயிற்றில் உள்ள அழுக்குக்கள் நீக்கப்படும். 40 நாட்கள் வரை
இந்த பொடி செய்து வைத்து சாப்பிட்டால் நல்லது.
ஏற்கனவே இங்கு முடி வளர கொசுரு கருவேப்பிலை என்று போட்டுள்ளேன்
Recipe : 856/
Tweet | ||||||
6 கருத்துகள்:
அட சுலபமான மருத்துவமா இருக்கே
அருமையான குறிப்பை கொடுத்துள்ளீர்கள் சகோதரி... நன்றி...
புதுமாதிரி இருக்கிறது கருவேப்பிலை பொடி. செய்து பார்க்கிறேன் ஜலீலா.
நன்றி.
Useful and nice idea akka..
டிரையாக வறுத்து பொடி செய்ய ஆகையால இதில் எண்ணை ஊற்றீ வதக்க தேவையில்லை, தொக்கு செய்வதாக இருந்தால் எண்ணை ஊற்றி வதக்கலாம். அதை ஒரு 10 லிருந்து 15 நாட்கள் தான் பிரிட்ஜில் ஸ்டோர் செய்து சாப்பிட முடியும். பவுடர் செய்து கொண்டால் நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
தொக்கு ரெசிபியும் போட்டு இருக்கிறேன் பாருங்கள். லின்க் எடுத்து கிழே போகிறேன்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா