.Curry Leaves Pepper kuz(l)ambu
கீதாவின்
மிளகு குழம்பு.-
ஆண், பெண் அனைவருக்கும் இருப்பது முடி பிரச்சனை தான், நானும் என் சமையலில் கூடுமான வரை கருவேப்பிலையை அரைத்து தான் சேர்ப்பேன். கிழே உள்ளது என் தோழி கீதா சொன்ன கருவேப்பிலை மிளகு குழம்பு.
கருவேப்பிலை 1 பாக்கெட்
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
உளுந்து ஒரு மேசைகரண்டி
புளி ஒரு எலுமிச்சை அளவு.
உப்பு - ஒரு தேக்கரண்டி
நெய் ஒரு மேசைகரண்டி
தண்ணீர் முன்று டம்ளர்
செய்முறை
நெய்யை சூடாக்கி தண்ணீர் தவிர மற்ற பொருட்களை மிக்சியில் அரைத்து தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்
இதை சுட சுட ப்ளைன் சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
அழகுகுறிப்பு: கரு கருன்னு நன்கு முடி வளர ,வாரத்தில் இரண்டு நாட்கள் இரவு தேங்காய் எண்ணையை தலையில் நன்கு தேய்த்து காலையில் தலைக்கு குளித்து விடவேண்டும்.இபப்டி செய்வதால் முடிவளரும் ( ஆனால் முடி எல்லாருக்கும் கொட்ட தான் செய்யும் , அது காய்ந்து போகாமல் இப்படி வாரம் இரு முறை செய்தால் முடி வளரும். இது என் அனுபவத்தில் கண்டது, கருவேப்பிலையை அதிக அளவில் சேர்த்து கொண்டால் நன்றாக முடிவளறும். வத்த குழம்பு , மிளகு குழம்பு செய்யும் போது ஒரு கப் கருவேப்பிலையையும் சேர்த்து வதக்கி செய்து சாப்பிடவேண்டும்
Tweet | ||||||
4 கருத்துகள்:
பயனுள்ள குறிப்பு .நானும் செய்யணும்
சூப்பர் குறிப்பு.. கீதாவுக்கு என் வாழ்த்துக்கள். நானும் கருகப்பிலை கிடைத்தால் இப்படி செய்வேன்ன் ஆனா தேங்காப்பூவும் சேர்ப்பேன்.
பயனுள்ள குறிப்பு...
நான் கருவேற்பிலை அதிகம் சாப்பிடுவேன் அக்கா...
கருவேப்பிலை குழம்பும் குறிப்பும் அருமை. இனிமே இன்னொரு பாக்கெட் கருவேப்பில்லை அதிகமா வாங்க போறேன் :)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா