இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த அயிட்டம் இதன் பெயர் வெல்லம் உருண்டை சோறு, பாச்சோறு என்று கூட சொல்வார்கள்.நொய்யை உடைத்து செய்வார்கள், இதை பாசுமதி அரிசி ஊறவைத்து நன்கு கையால் உடைத்து செய்துள்ளேன். இதுவும் நான் அன்றாட டிபனில் ஒன்று.
தேவையானவை
பாசுமதி அரிசி = ஒரு டம்ளர்
வெல்லம் = முக்கால் டம்ளர்
தேங்காய் துருவல் = உருண்டை உருட்ட தேவையான அளவு
ஏலக்காய் = இரண்டு
உப்பு = இரண்டு சிட்டிக்கை
செய்முறை
வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும்.
குக்கரில் களைந்த அரிசியை போட்டு அரிசி ஒரு டம்ளருக்கு இரண்டு டம்ளர் + கால் டம்ளர் ஊற்றவும். வெல்லம் தண்ணீர் ஒரு டம்ளர் + ஒன்னேகால் டம்ளர்.
அதில் இரண்டு ஏலக்காய், ஒரு ஸ்பூன் நெய் விட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து முக்கால் பாகம் தண்ணீர் வற்றி கொதிக்கும் போது குக்கரை மூடி முன்றாவது விசிலில் அடுப்பை அனைத்து உடனே குக்கரை இரக்கவும்.
ஆவி அடங்கியதும் வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி ஒரு தட்டில், உள்ளங்கையில் தண்ணீரை நனைத்து உருண்டைகளாக உருட்டவும்.
தட்டில் உருண்டைகள் மேலே தேங்காய் துருவல் போடு சர்குலர் மூமெண்டில் சுழற்றவும் இப்போது எல்லா உருண்டைகளிலும் தேங்காய் துருவல் கோட் ஆகிவிடும்.
எப்படியும் 17 (அ) 18 உருண்டைகள் வரும்
காரத்துக்கு ஏதாவது சுண்டல் வகைகளை செய்து கொள்ளலாம்.
குழந்தைகள் போட்டி போட்டு கொண்டு சாப்பிடுவார்கள்
கவனிக்க:
Tweet | ||||||
31 கருத்துகள்:
ஜலீலா அக்கா நெய் உருண்டை நல்லா இருக்கு என்னமா அசத்துறீங்க்க நீங்க எல்லாம் நோட் பண்ணிகிட்டே வரேன் அக்கா நானும் உங்க அளவுக்கு கொஞ்சம் சமைக்க்னும் ஆசையா இருக்கு அதான் உங்க்ள் பின்னாடியே வரேன் அக்கா எப்படி அக்கா உங்க்ளால் மட்டும் இவ்ளோ அழகா சமைக்க முடியுது அக்கா என் மேல கோபமா என்ன பாகிஸ்தான் பரோட்டா கீமா வில் என் கருத்துக்கு பதில் தரவே இல்லை அக்கா நீங்க கவ்னிக்கலையா எனக்கு கஷ்ட்டமா இருதிச்சி தினமும் பார்ப்பேன் நீங்க் பதில் அனுப்பி இருக்கிறீர்களான்னு அதுல இல்லை ஏன் ?
ஷீரின் நேரமில்லாததால் பதிவே போடல இன்று தான் பார்த்தேன்.
கார்டு வந்தது ரொம்ப சந்தோஷம்.
வாங்க கண்டிப்பா என் சமையலை பார்த்து சமைத்தீர்கள் என்றால் உங்களுக்கு உங்கள் வீட்டில் பாராட்டு மழை தான்
சென்ற இடமெல்லாம் சிறப்புத்தான் போல... வாழ்த்துக்கள்...
இப்பதான் அக்கா எனக்கு நிம்மதியா இருக்கு நீங்க் சொல்லிட்டீங்க்களே கண்டிப்பா எனக்கு பாராட்டு ம்ழை கிடைக்கும் எல்லாம் உங்க்ள் வாழ்த்துக்கள் ஆசீர்வாதம்தான் என் குரு நீங்க்தானே அக்கா குரு சொன்னால் எனக்கு நிச்சயம் வெற்றிதான் அக்கா
Sister,
Aatu kudal kari cleaning matrum samaipathu patri konjam sollungalen..
-Raj
பொங்கல் நேரத்தில் ஏற்ற இனிப்பு சொல்லி இருக்கிறீங்க. செய்து பார்க்கிறேன்.
இம்ம்ம்...அக்கா..அப்படியே ஒரு பார்சல் அனுப்புனா நல்ல இருக்கும்...படம் பார்த்ததும்...இப்பவே சாப்டனும் போல இருக்கு...உண்மை தான்...
பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது.....
ரெசிப்பி படு சூப்பர்... செய்து பார்த்து விட்டு, எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன்....
நன்றி ஜலீலா மேடம்.....
//சென்ற இடமெல்லாம் சிறப்புத்தான் போல... வாழ்த்துக்கள்...//இந்த வாழ்த்த கேட்க காதுக்கு ரொம்ப இனிமையா இருக்கு
அண்ணாமலையான் நன்றி,
ராஜ் வருகைக்கு மிக்க நன்றி, கண்டிப்பா ஆட்டு கால் பற்றி போடுகிறேன். ஏற்கனவே ஆட்டுகால் பாயா ரெசிபி போட்டு விட்டேன் பாருங்கள்.
லிங்க் எடுத்து தருகீறேன்.
சித்ரா அது சர்க்கரை பொங்கல் வேறப்பா, அதுவும் செய்து வைத்துள்ளேன் போடுகீறேன்.
இது வெரும் வெல்லஞ்சோறு தான்.
சீமான் கனி பாராட்டுக்கு நன்றி, பார்சல் தானே உடனே அனுப்புறேன் ஆனால் அதுவரை கெடாமல் இருக்கனும்
கோபி வாங்க பாராட்டுக்கு நன்றி. செய்து சாப்பிட்டு பார்த்து எப்படி இருந்தது என்று வந்து சொல்லனும்.
பேரே புதுசா இருக்கே. ஹோம்வொர்க் நிறைய பாக்கி இருக்கு. எல்லாம் வீட்டுக்கு போய்தான் முடிக்கனும்.
பாச்சோறு ரொம்ப பிடிக்கும்
எனக்கும்/தந்தைக்கும் மட்டும் சக்கரை போடாமல் உப்பு போட்டு தருவாங்க
தேங்காப்பால் சோறுன்னு(ம்) சொல்வோம் ...
அஸ்ஸலாம் அலைக்கும். தங்களின் ப்ளாக்கில் நிறைய குறிப்புகள் உள்ளன. எனக்கு சமைக்க தெரியாது. உங்களின் குறிப்புகளை பார்த்து செய்து பழகிக் கொண்டு இருக்கிறேன். நான் வேலைக்கு செல்வதால் நேரம் கிடைக்கும் போது மட்டுமே செய்து பார்ப்பேன். கண்டிப்பாக அனைவரும் பாராட்டுவார்கள். சமையல் மட்டுமல்லாமல் தங்களிடம் துஆக்கள், மற்ற விஷயங்கள் பற்றியும் சந்தேகங்கள் கேட்க வேண்டும், உதவி செய்வீர்களா???????? தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்
akka super!!!
ஜலீலா இது நம்ம பாச்சோறு தானே,புது மாப்பிள்ளை பொண்ணுக்கு எங்க சைட் திருமணம் முடிந்த பின்பு ஊட்டுவோம்.எனக்கு ரொம்ப பிடிக்கும்,தண்ணீர் அளவு கொஞ்சம் தெளிவாக சொல்லமுடியுமா?
இது வரை நான் கேள்வி பட்டதே இல்லையே, செய்து பார்க்கணுமே.
எப்பவும் போல இடுகை நல்லா இருக்கு ஜலீலா.
ஆனா இதுமாதிரி ஹும்ம்ம் நல்ல சாப்பாடு எல்லாம் பதியும் போது, கொஞ்சம் பார்சல் அனுப்புங்க :-)
ஆமா எத்தனை தடவைதான் உங்க பதிவுகளில் உள்ள படங்களை பார்த்துக் கொண்டே நமக்கு இங்கு கிடைக்கிற சாப்பாட்ட சாப்பிடுறது :-(
என் புது இடுகையை படித்து விட்டு ஒன்னுமே சொல்லவில்லையே?
ஆசியா தண்ணீர் அளவு கொடுத்துள்ளேனே.
ஒன்றிக்கு இரண்டு + கால் டம்ளர் ஏன்னா, வெல்லம் தண்ணீரில் அரிசியை நல்ல கொதிக்க விட்டு, பிரியாணி தம் போடுவது போல் முக்கால் பாகம் தண்ணீர் வற்றும் போது குக்கரை மூடி மீடியமான தீயில் முன்றாவது விசில் வந்த்ததும் அடுப்பை அனைக்கவும். ஆவி அடங்கியதும் வேறு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு கையில் தண்ணீர் தொட்டு கொண்டு சூட்டோடு பிடிக்கனும் உருண்டையை, பிறகு தேங்காய் துருவல் தூவி சுழற்றனும்.
//குக்கரில் களைந்த அரிசியை போட்டு அரிசி ஒரு டம்ளருக்கு இரண்டு டம்ளர் + கால் டம்ளர் ஊற்றவும். வெல்லம் தண்ணீர் ஒரு டம்ளர் + ஒன்னேகால் டம்ளர்.//
ஆமாம் நவாஸ் புதுசுதான் .ஆனால் நாங்க அடிக்கடி செய்வது தான் இதை செய்தால் பிள்ளைகளை சாப்பிட ஓட்டவே தேவையில்லை ஒரு பவுளில் போட்டு வைத்தால் தானா காலியாகிடும். .
நட்புடன் ஜமால் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
எல்லோரும் செய்வது தான் ஊருக்கு ஊர் சிறிது வித்தியாசப்படும்
ksgarden உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
என் சமையல் பார்த்து செய்து பாராட்டுகள் பெற்றது குறித்தும் ரொம்ப சந்தோஷம்.
துஆக்கள் என் துஆ தளத்தில் இருக்கு எல்லாம் உம்மா, பெத்துமாக்கள் சொல்லி கொடுத்தது தான் சிலது துஆக்களின் களஞ்சியத்த்தில் இருந்து தேவையானதை எடுத்து போட்டு வைத்து இருக்கிறேன்.
டவுட் என்னால் கிளியர் பண்ண முடியாது. அது இஸ்லாமிக் சைட் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மற்றது எதுவா இருந்தாலும் கேட்கலாம் தெரிந்தால் கண்டிப்பா பதில் போடுவேன். இது தவிர டிப்ஸ், குழந்தை வளர்பும் போட்டுள்ளேன் பார்த்து பயனடைந்து கொள்ளுங்கள்.
சுவையான சுவை நன்றி/
Thanks a lot for leaving a comment on my blog...Very encouraging...:)
U have a very interesting blog... I'm bookmarking it... keep going...
Different recipe,Must try once
ஜலீலா அக்கா நெய் உருண்டை நல்லா இருக்கு !!!!
தாய் வாங்க வருகைக்கு மிக்க நன்றி.
மை கிச்சன் ஆமாம் இது ரொம்ப நல்ல இருக்கும், ஒரு வித்தியசமான ரெசிபி
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சுவையான சுவை
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா