Wednesday, May 11, 2011

பூண்டு முட்டை சாதம் (கர்பிணி பெண்களுக்கு) - garlic egg riceஇது கர்பிணி பெண்களுக்கு 9 மாதம் ஆரம்பித்ததும்  தினம் இந்த சாதத்தை செய்து குழந்தை பெறும் வரை செய்து கொடுத்தால் வயிற்றில் உள்ள வாயு வெளியேறி சுகப்பிரசம் ஆகும்.தேவையானவை

சாதம் - ஒரு கோப்பை
--முட்டை - இரண்டு
-- பூண்டு - 8 பல் (பெரியது)
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிது
சின்ன வெங்காயம் - 5
நல்லெண்ணை  - ஒரு குழிகரண்டி


செய்முறை

1.முட்டையை நன்கு அடித்து அதில் மிளகு தூள் பொடித்து உப்பு ,பாதி சீரகம் சேர்த்து அடித்து வைக்கவும்.
.2..நல்லெண்ணையை காயவைத்து அதில் சீரகம் சேர்த்து (ஒன்றும் பாதியுமாய் பொடித்தது) பூண்டை பொடியாக அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
3..சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4.. வதங்கிய வெங்காயத்தில் கலக்கி வைத்துள்ள முட்டையை பரவலாக ஊற்றி சமப்படுத்தவும்.
5. முட்டையை தோசை போல் சுட்டெடுக்கவும்
6 . வெந்ததும் எடுத்து வைத்திருந்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.
சுவையான பூண்டு முட்டை சாதம் ரெடி

குறிப்பு

( இது கர்பிணி பெண்களுக்கு 9 மாதம் சுகப்பிரசம் ஆக தினம் குழந்தை பெறும் வரை செய்து கொடுக்க்கும் சாதம். மற்றவர்கள் சாப்பிடுவதாக இருந்தால் இதில் பச்சமிளகாய், மிளகாய் தூள்,நல்லெண்ணைக்கு பதில் சாதா எண்ணை சேர்த்து அவசர லன்ச் பாக்ஸுக்கு ஈசியாக எடுத்து செல்லலாம், குழந்தைகளுக்கு பச்ச மிளகாய் சேர்க்க வேண்டாம்  பட்டர் ( அ) நெய்யில் செய்து கொடுக்கலாம்.)


54 கருத்துகள்:

Anonymous said...

மற்றவர்களுக்கும் நல்லெண்ணெயிலேயே செய்து கொடுத்தால் நல்லது தானே.சுத்தமான நல்லெண்ணெயில் செய்த உணவு சீக்கிரம் கெட்டுப்போகாதாமே.

Anonymous said...

ஹை. வட எனக்கே

எல் கே said...

முட்டை சேர்த்தது இல்லை. ஆனால் பூண்டு சேர்த்து உணவு வகைகள் செஞ்சு தந்திருக்கேன்

S.Menaga said...

நல்லாயிருக்கு...பகிர்வுக்கு நன்றி!!

சசிகுமார் said...

பகிர்வுக்கு நன்றி அக்கா. இன்ட்லியில இணைக்க வில்லையா

Reva said...

Arumai akka... romba nalla recipe... Poodu saadham sapittu irukkein , aanaa muttai seithathu inlai... seithu parkanum:)
Reva

Nandini said...

Wow! It looks very delicious and yummy! Nice dish!

அன்புடன் மலிக்கா said...

பூண்டுசாதம் உம்மம்மா செய்து தந்திருக்கு. நல்லதொரு சத்தான ஆரோக்கியமான உணவுக்கா இது.

சிநேகிதி said...

ஆரோக்கியமான உணவு..

Premalatha Aravindhan said...

Healthy version of rice,luks delicious...

MANO நாஞ்சில் மனோ said...

பயனுள்ள பதிவு...
உங்களுக்கு தாயுள்ளம்...

MANO நாஞ்சில் மனோ said...

// அனாமிகா துவாரகன் said...
ஹை. வட எனக்கே//

நானே வடை கிடைக்காத கடுப்புல இருக்கேன், நீங்க வேறயா...

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைப்பு குடுத்து வையுங்களேன்...

Anonymous said...

இதோ பாருங்க மனோ சார். வெயில் காலத்தில் சும்மா சும்மா கடுப்பாக கூடாது. வேணும்ன்னு கேட்டா பாதி தருவேன். ஆனால், அடப்பாவின்னு ஒருத்தரோட புளொக்ல அவர விடாம டென்ஷன் பண்ணுவதற்கு சம்மதிக்கனும். சரியா. நாங்க ஒரு குரூப்பா அவங்களுக்கு எதிரா ஒரு சங்கம் அமைக்கறோம். ஆட்ச்சேர்ப்பு செய்ய வேண்டிய டிப்பாட்மென்ட் என்னுது. அது தான் இந்த சீப்பான டீல். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

கார்த்தி சார்,
நீங்க சமைச்சு எல்லாம் கொடுக்கற அளவு நல்லவரா? கண்ணில ஆனந்த கண்ணீர். ஹி ஹி. கிடிங்.

ஹுஸைனம்மா said...

பூண்டு தினம் சாப்பிடுவது வாய்வுக்கு நல்லது. அதுவும் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிடணும்.
ஆனா, முட்டை தினம் சாப்பிட்டா, சூடு+வாய்வு இல்லியா அக்கா?

Jaleela Kamal said...

அட அடா ,
அனா( சுனா) மிகா பெயரை சரியா எழுதிட்டேனா
நாஞ்சில் மனோ , இரண்டு பேரும் சண்ட போட கூடாது, உட்காருங்க ஆளுக்கு ஒரு வா உருண்டை பிடிச்சி தாரேன்..

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா
பிள்ளை பெறும் நேரத்தில் தெம்புக்கு முட்டை கொடுப்பார்கள், அதோடு பூண்டு , மிளகு சீரகம் சேருவதால் ஒன்றும் ஆகாது, இது 9 மாதத்தில் கொடுக்க ஆரம்பித்தால் முதல் வார கடைசியிலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ குழந்தை பிறந்துவிடும். அதை வைத்து தான் அந்த காலத்து பாட்டி மார்கள் சொல்லி இருககஙக்
தினம் சாப்பிட ஒத்துகொள்ளவில்லை என்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடலாம்.

வாயு என்பது கேஸ் ட்ரபுள் இருப்பவர்களுக்க்கும் முட்டை உணவு ஒத்து கொள்ளாதவர்களுக்கும் தான் , அவர்கள் பார்த்து சாப்பிட்னும்.

இது மிளகு பூண்டு சீரக மணத்தோடு அருமையாக் இருக்கும்.

Anonymous said...

ஏங்க்கா? ஏன்.. அவருக்கு பாதி வடை கொடுத்து அப்பாவி பக்கம் கூட்டிட்டு வரலாம்னு பார்த்தா நீங்க இடையில் இப்படி சொல்றீங்க. நான் தான் வளரும் கொழந்தை. சோ இரண்டு வாய் சோறும் எனக்கு மட்டும் தான். மனோ சாருக்கு வேணாம். ஹி ஹி.

Anonymous said...

அப்புறம் பெயரைச் சரியாத் தான் எழுதி இருக்கீங்க. ஹி ஹி.

Jaleela Kamal said...

பாவம் பா புதுசா ஆஹா பூண்டு மணத்தோடு தட்டில் சாதம் பார்த்ததும் உள்ளே நுழைந்துட்டார், வந்த வரை சும்மா அனுப்பலா. கொஞ்சூண்டு கொடுக்கலாமே

Anonymous said...

சரி. பரவாயில்லை கொடுக்கலாம். அப்புறம் அது என்ன கறிக்கா. எங்கம்மா செய்கிற பகோடா-தயிர் கறி (அதுக்கு என்ன பெயருன்னு அவங்களுக்கே தெரியாது. பகோடாவ பொரிச்சுட்டு, தயிரில எதை எல்லாமோ போடு அரைச்சு கறி செய்வாங்க.) மாதிரி இருக்கு. சாப்பிட்டு மாசக்கணக்காச்சு.

Jaleela Kamal said...

மோர் குழம்பு சொல்றீங்க

Jaleela Kamal said...

மோர் குழம்ப யா சொல்றிங்க
இதில் இந்த சாதத்துடன் வைத்துள்ளது, சிகக்ன் கொஃப்தா கிரேவி.

Anonymous said...

மோர் மாதிரி அது தண்ணீத்தன்மையா இருக்காது. தயிர் டேஸ்ட்ல திக்காக இருக்கும். பெரும்பாலும் இப்படி மஞ்சள் கலரில செய்வாங்க. சிலவேளைகளில் செத்தல் மிளகாயும் தயிர்/மோர் உம் போட்டு மிக்சியில அரைச்சு செய்வாங்க. ஐ லக் கோப்த்தா கிரேவி.நான் சிக்கன் சாப்பிடுவதில்லை. மீனும் முட்டையும் தான் சாப்பிடுவேன். அம்மா கிழங்கில் செய்வாங்க. கிழங்கில் செய்து, பசளைக்கீரையில கிரேவி செய்வாங்க.

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2009/08/blog-post_30.html

இந்த லின்கில் மோர் குழ்ம்பு இருக்கு , இதில் சில நேரம் வெண்டைக்காய் வதக்கியும் சேர்ப்பேன்.

///அம்மா கிழங்கில் செய்வாங்க. கிழங்கில் செய்து, பசளைக்கீரையில கிரேவி செய்வாங்க.’//

இது தெரியல

ஆனால் உருளை கிழங்கு கீரை சேர்த்து செய்வோம்

Chitra said...

Healthy recipe. :-)

Vijiskitchencreations said...

jalee சூப்பர் ரெசிப்பி. எங்க அம்மா கூட இது தான் செய்து தருவாங்க. ஆனல் முட்டை சேர்க்காமல் தான். எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சாதம்.

angelin said...

//உட்காருங்க ஆளுக்கு ஒரு வா உருண்டை பிடிச்சி தாரேன்..//
உண்மையில உங்களுக்கு தாயுள்ளம் ஜலீலா .
அருமையான குறிப்பு .

ChitraKrishna said...

சூப்பரா இருக்கு அக்கா. என்னால பச்சைமிளகாய் சேர்க்காம சாப்பிட முடியாதுப்பா!

athira said...

ஜலீலாக்கா!!! வடை போச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... எவ்ளோ ஸ்பீட்டா வந்து முட்டி மோதப்பார்த்து, தப்பி வந்தால் வடை டிஷ் காலி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

அருமையான சாதம்... கலக்கிட்டீங்க.

GEETHA ACHAL said...

romba romba nalla irukku...Superb rice...Akshata Loves this rice...

Priya said...

Supera rice, yummy..feel like having for my lunch..

Divya Vikram said...

Different version of egg rice. Try pannitu solren. Unga mother's day post um romba super! very touching :)

Jaleela Kamal said...

`நன்றி எல்.கே
ஓ நீங்களே உங்கள் மனைவிக்கு பிரசவத்தின் போது செய்துகொடுத்ட்தீங்களா> வெரி குட்

Jaleela Kamal said...

நன்றி மேனகா

சசி இது போஸ்ட் ஆப்ஷன் நாளைக்கு போட்டுவைத்தது தெரியாம பப்லிஷ் ஆகிவிட்டது, முடிந்த போது வந்து தான் தமிழ்மனம், இண்ட்லியில் இனைப்பேன்.
தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க ரேவா இது எங்க இஸ்லாமிய இல்ல வீடுகளில் அந்த காலம் முதல் கொண்டு கர்பிணி பெண்களுக்கு கொடுப்பது.

Jaleela Kamal said...

ஆமாம் மலிக்கா நம் பாட்டிமார்கள் செய்வது, வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நந்தினி வாங்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க ந்னறி

Jaleela Kamal said...

நன்றி சித்ரா

வாங்க விஜி நீங்க வெஜ் ஆச்சே அதான் முட்டை சேர்க்காமல் சாப்பிடுவீங்க இல்ல

Jaleela Kamal said...

ஆமாம் ஏஞ்சலின் இது என் அம்மாவின் குணம் அது அப்படியே எனக்கும்
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி பாயிஜா ஆமாம் சத்தான சாதம்

Jaleela Kamal said...

சித்ரா கிருஷனன் ,
இது கர்பினி பெண்கலுக்குஆகையால் பச்சமிளகா தேவையில்லை

நார்மலா வெங்காய முட்டை செய்வதா இருந்தால் பச்சமிளகாய குருவலாஅரிந்துசேர்த்து தான் செய்வேன்

Jaleela Kamal said...

நன்றி பிரேமலதா ,

அதிரா அடுத்த முறை தினம் வடை கிடக்காது, இஷ்டம் போல பதிவுகள் போட்டு ஆட்டோ பப்லிஷ் போட்டு வைத்து இருக்கேன், ஆகையால் எனக்கு முடிந்த் போது வந்து பார்ப்பேன்.

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ

அக்‌ஷயாவுக்கு செய்து கொடுங்கள்

Jaleela Kamal said...

திவ்யா கண்டிப்பா செய்து பாருஙக்ள், உஙக்ள் கருத்துக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

பிரியா சாப்பிடனும் போல் இருககா நீங்க தான் செம்ம பாஸ்டாச்சே உடடே செய்து சாப்பிடுங்க

சிநேகிதன் அக்பர் said...

சத்துள்ள உணவு.

Sarah Naveen said...

Looks delicious..I m sure it would be so flavorful with garlic..

மனோ சாமிநாதன் said...

நல்லதொரு சத்தான உணவு , முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு! நல்லதொரு பகிர்வு ஜலீலா!

Lecker and Yummy Recipes said...

Poondum Muttaiyum.....combination pramaatham. Romba nalla recipe Jaleela. Healthy Morsels'irku thodarnthu garbini pengalukkaana recipes anuppiyatharku mikka nanri :)

schmetterlingwords said...

Salaams Jaleelakka...

Arumaiyaana bayanulla recipe... Enakku muttai allergy.. adhanaal muttai illamal dhaan seydhu paarkanum..

Healthy Morsels ku indha arumaiyaana recipe yai anuppiyadharku mikka nanri Jaleelakka.. Konjam engal event link-ai mattum post il pottu vidungalen... chumma publicity ku dhaan.. he hee heee :)

asiyao said...

ஜலீலா சூப்பரான குறிப்பு.செய்து சாப்பிட தூண்டுது.பாரம்பரிய சமையலே தனிதான்.

Saras said...

Useful recipe and healthy too.

Saras
Dish In 30 minutes ~ Rice Recipes with Giveaway

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா