நெத்திலி மீன் நிஹாரி
நெத்திலி மீன் வெண்டைக்காய் நிஹாரி / Anchovies Bhindi Nihari
நிஹரி கறி என்றால் பாக்கிஸ்தானியர்கள் பாக்கிஸ்தானி உணவகங்களில் மிகவும் பிரபலம்
இது இங்கு துபாயில்பாக்கிஸ்தானி உணவகங்களில் பேச்சுலர்கள் இதை பெரிய தந்தூரி ரொட்டியிடன் வாங்கி சாப்பிடுவார்கள்.
மசாலாக்கள், வெங்காயம் , எலலாம் அரைத்து ஊற்றி இருக்கும் வெறும் கட்டியான கிரேவியுடன் மட்டன் சேர்த்து சமைத்து கோதுமை மாவு கரைத்து ஊற்றி செய்வது தான் நிஹாரி மட்டன். இருப்பார்கள்.
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் கால் கிலோ
வெங்காயம் 200 கிராம்
தக்காளி இரண்டு
பச்ச மிளகாய் 1 பொடியாக அரிந்தது
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
பட்டை சிறியது 1
எண்ணை 2 மேசைகரண்டி
சிவப்பு மிளகாய் தூள் முக்கால் தேக்கரண்டி
ஷான் நிஹாரி மசாலா ஒரு மேசைகரண்டி
உப்பு தேவைக்கு
செய்முறை
நெத்திலி மீனை மண் போக நன்கு அலசி தலையோடு சேர்த்து நடுவில் உள்ள முள்ளையும் சேர்த்து பிரித்து எடுக்கவும்.சைடில் சிறிது முள் இருக்கும் அதையும் பிரித்தால் வந்து விடும்.
பிரித்து எடுத்தால் போன்லெஸ் நெத்தில் ரெடி. ( முள் எடுத்து விட்டால் குழந்தைகளுக்கும் தாராளமாக கொடுக்கலாம்.
வாயகன்ற வானலியை சூடு படுத்தி எண்ணையை காயவைத்து பட்டையை வெடிக்கவிட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சிறிது உப்பு தூவி மூடி போட்டு வெங்காயத்தை நன்கு மடங்க விடவும்.
வெங்காயம் மடங்கியதும் நிஹாரி மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிறட்டி தக்காளிய பொடியாக அரிந்து சேர்த்து குழைய வேகவிடவும்.
பச்சமிளகாய் மற்றும் கழுவி வைத்துள்ள நெத்திலிமீனை சேர்த்து லேசாக உடையாமல் பிரட்டி விட்டு தீயின் தனலை சிறிதாக வைத்து நன்கு மீனை வேகவிடடும். 10 நிமிடத்துக்குள் வெந்துவிடும். நன்கு வெந்து சிறிது எண்ணை மேலே வர ஆரப்பிக்கும் போது அடுப்பை ஆஃப் செய்யவும்.
இதில் சேர்த்துள்ள நிஹாரி மசாலா கிடைகக் வில்லை என்றால் ஆச்சி மட்டன் மசாலா, வேறு எந்த பிராண்ட் கிடைக்குதோ அந்த பிராண்டில் வாங்கி அதை சேர்த்து கொள்ளலாம்.
==========
கோதுமைமாவா என்று நினைக்கவேண்டாம் நான் இதை கறி தக்குடியில் கூட செய்து இருக்கேன், அதாவாது கோதுமைமாவு கரைத்து ஊற்றி இந்த மசாலாவில் ரொம்ப அருமையாக இருந்தது
நான் ஊரிலிருந்து வரும் போது ஆச்சி மசாலா வாங்கி வருவேன், அது இல்லை என்றால் இங்குவந்ததில் இருந்து ஷான் பிராண்ட் தான் வாங்குவது, ஈஸ்டன் பிராண்டும் நல்ல இருக்கும்.
=================================
கொஞ்சம் நாட்களாக என் மகன் மீன் சாப்பிடுவதில் எப்போதும் மீன் செய்யும் மீன் சமையல் போல் இருக்க்கூடாது என்று இந்த டைப்பில் செய்து அவனுக்கு எடுத்து வைக்கும் டிபன் பாக்ஸில் போட்டு வைத்து விட்டு ஆபிஸ் கிளம்பிவிட்டேன்.
அவன் பள்ளியில் இருந்து சாப்பிட்டு முடித்து விட்டான், நான் இரவு வந்து மதியம் என்ன சாப்பிட்ட என்றேன் அதான் நீங்க வைத்து விட்டு போன மிளகு ரசமும் பொரிச்ச கறியும் என்றான், இந்த மீனில் முள்ளும் இல்லாமல், இந்த பக்குவத்தில் செய்ததால், பொரிச்சகறி
என்று நினைத்து சாப்பிட்டு இருக்கிறான்.
நான் எப்படி உன்னை மீன் சாப்பிட வைத்தேன் பாரு என்றேன், என்ன அது மமீனா ந்னு ?? அசடு வழிந்தான்..
நெத்திலி மீன் தொக்கு
நெத்திலிமீன் கழுவும் விதம்
பெரிய அலுமினியம் கண் வடிகட்டி எடுத்துக்க்கொள்ளுங்கள்.மீனை ஒரு சட்டியில் தண்ணீரில் போட்டு லேசாக அரிசி களைவது போல் கலந்து வடுகட்டியில் போடவும்.
சிங்கில் டேபுக்கு நேரக வடிகட்டியை பிடித்து கொண்டு இரண்டு மூன்று தடவை கையால் உலசி கழுவவும்.
இப்போது அழுக்கு மண் எல்லாம் போய் சுத்தமாகி விடும்.
மீனி தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விறலால் கீறி தலையோடு சேர்த்து முள்ளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும்.
அதே மாதிரி எல்லா மீனையும் செய்யவும்.
இப்போது மீனில் சுத்தமாக முள் இருக்காது மீண்டும் ஒரு முறை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
இப்போது போன்லெஸ் நெத்திலி மீன் ரெடி அப்பரம் என்ன குழம்பு வைத்து சாப்பிடவேண்டது தான்.
பிள்ளைகளுக்கும் அப்படியே பிசைந்து ஊட்டி விடலாம். இதே கிளங்கா மீனிலும் எடுக்கலாம்.
Tweet | ||||||
10 கருத்துகள்:
புதிய வகை செய்முறை...
முயற்சித்துப் பார்க்கலாம் அக்கா.
வித்தியாசமான முறையில் செய்து உள்ளீர்கள்...
Yum yum and lipsmacking nethili with okra.... Jodi super
Yum yum and lipsmacking nethili with okra.... Jodi super
Yum yum and lipsmacking nethili with okra.... Jodi super
ஆஹா பார்க்கவே ஆசையாக இருக்கு. புது முறையாக இருக்கு, செய்து பார்த்திடோணும்.
வாங்க சே.குமார் ஆம் இது என் புதிய முறை, கண்டிப்பாக நல்ல வரும் செய்து பாருங்கள்.
தனபாலன் மிக்க நன்றி
பரீன் , கமென்ட்டை உங்கள் சினிமா ஸ்டைல்லயே கொடுத்து இருக்கீங்கள்.
அதிரா பூஸாரே வந்தது ரொம்ப சந்தோஷம்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா