Sunday, April 8, 2012

துபாயில் பேச்சுலர்கள் வாழ்க்கை (மசாலா மிக்ஸ்) பாகம் - 4



இங்கு பார்க்கும் பல பேர்களை மையமாக வைத்து எழுதுகிறேன். இதை படிப்பவரக்ள் கொஞ்சம் உஷாராகலாம்.

முன்பு பதிவுகளை படிக்க இங்கே சொடுகவும்






பேச்சுலர் வாழ்க்கை என்பது சரியான படிப்பினை தான். பெற்றோர்களுடன் இருக்கிறவரை கவலை இல்லை எல்லாம் அம்மா அப்பா பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால் மேற்படிப்பு, வேலை என போகும் போது குடும்பத்தை விட்டு தனியாக வாழும் நிலையில் எல்லா ஆண்களும் இருக்கின்றனர். முதலில் தன் வேலைகள் அனைத்தையும் தானே பொறுப்பாக செய்ய கற்று கொள்ளவேண்டும். வீட்டை போல் வசதி எங்குமே எதிர்பார்க்க முடியாது.
எங்க வீட்டில் கிளீன் பண்ணது கிடையாது. குடித்த டம்பளர கழுவினதில்ல, துணி துவைக்க தெரியாது என பெருமை பேசி திரியக்கூடாது. சிலருக்கு தான் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். நல்ல படிச்சி வேற வழி இல்லாம வேலை தேடி அலுத்து போய் விசா முடியும் தருனத்தில் ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்று படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாத வேலையும் சிலர் பார்க்கின்றனர். படிப்புகோ வேலைக்கோ , ஹாஸ்டலிலோ அல்லது மற்ற நாடுகளிலோ கிடைத்த இடம் , ரூம் மெட்களுடன் அட்ஜஸ்ட் செய்து  வாழ கற்று கொள்ளனும். சின்ன சின்ன எளிமையான சமையல் வேலைகளை கற்று கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும்.




சகவாசம் – இங்கு துபாயில் பல நாடுகளில் உள்ள மக்கள் வசிக்கின்றனர். (மற்ற வெளிநாடுகளிலும் அப்படி தான் என நினைக்கிறேன்) இந்தியர், பங்களாதேசி, பாக்கிஸ்தானி, நேபாளி , பிலிப்பைனி என பல நாட்டவர்கள் இருக்கின்றனர். ரூம் தேர்ந்தெடுக்கும் போதும்  நல்ல நண்பர்களாக பார்த்து தேர்ந்தெடுக்கனும் அவரத்துக்கு கிடைத்த ரூமில் போய் தங்கி இருந்தாலும் நடைமுறையில் நல்ல தெரிந்தவர்களுடன் தங்குவது நல்லது. தப்பி தவறி பிலிப்பைனிகளோடு போய் தங்கிடாதீங்க  அவர்கள் ஹலால் புட் சாப்பிடுவதில்லை. பூனை,பாம்பு, போர்க் போன்றவைதான் சமைப்பார்கள். அப்படி தான் 15 வருடம் முன் ஒருவர் இங்கு பெரிய கம்பேனியில் வேலைக்கு சேர்ந்து கூட வேலைபார்க்கும் பிலிப்பைனி பேச்சுலர்களுடன் வேற வழி இல்லாமல் தங்கி இருந்தார். கிச்சனில் நுழைய முடியாதாம் நாற்றம் கொடல பெறட்டிடுமாம். இரண்டு மாதம் கூட வேலை பார்க்கல ஊருக்கே ஓடி விட்டார். நல்ல சகவாசம் தேடி தங்கி இருப்ப்து நல்லது.











திருட்டு – கண்டிப்பாக பேச்சுலர்கள் தங்கும் அறையில் அவரவர் பொருட்களை பாஸ்போட், பணம் ஊருக்கு போக அம்மா, மனைவி, தங்கைமார்களுக்கு வாங்கி வைத்துள்ள நகைகள், துணிமணிகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. ஹே தினம் கூட இருக்கும் ஆட்கள் தானே யார் எடுக்க போகிறார்கள் என்று அலட்சிமாக இருக்காதீர்கள்.

 குடும்பத்தை பிரிந்து சம்பாதிக்கும் ஓவ்வொரு காசும் உங்கள் உழைப்பு. அதிலும் விழிப்புணர்வு தேவை. அப்படி தான் ஒருவர் வருட கண்க்காக சேர்ந்து வைத்திருந்த  2000 திர்ஹம் திடீரென கான போய்விட்ட்து. ஒன்றும் புரியல அவருக்கு போலிஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்தால் கடைசியில் விசாரனை செய்த்தில் பண நெருக்கடியில் ரூமில் உள்ளவர்களே திருடி இருக்கிறார்கள். இங்கு போலிஸ் விசாரனை ஏதாவது கம்ப்லெயின்ட் என்றால் நேராக ஒன்றும் கேட்கமாட்டார்கள் மொத்த ரூமில் உள்ள ஆட்களை ஒன்னா கொண்டு போய் உள்ளே வைத்துடுவாங்க. ( கவல படவேண்டாம் முட்டிக்கு முட்டி தட்டமாட்டாங்க) நல்ல பிரியாணி சோறு போட்டு ப்ரியா தங்கிட்டுவரலாம். பணவிஷியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் வையுங்கள். யாரையும் நம்மாதீர்கள்.

இப்ப இருக்கிற சூழ்நிலையில் எங்க பார்த்தாலும் திருட்டு ரொம்ப அதிகம். மற்றநாடுகளிலும் காலேஜில் ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்கள் மொபைல், பாஸ்போர்ட், லேட்டாப் எல்லாம் வைத்திருப்பவர்கள், கவனமாக வைத்திருக்கவேண்டும்.



எச்சரிக்கை – வெளிநாடுகளில் இரண்டு ரும் பிலாட்டுகளில் நடுத்தர பேச்சுலர்கள் மொத்தமாக 20 பேச்சுலர்கள் தங்கி இருப்பார்கள். சாப்பாடு இரண்டு முன்று பேச்சுலர்கள் மாற்றி மாற்றி சமைப்பார்கள். கொஞ்சம் பேருக்காக இருந்தால் ரைஸ் குக்கரிலோ , அல்லது ஈசியாக வடித்தோ சாப்பிடலாம். ஒரு  ரூமில் 10 பேர் , மற்றொரு ரூமில் 1பேர் இருப்பார்கள். எல்லாம் மொத்தமாக சேர்ந்து மெஸ் ஆரம்பித்து சமைத்து சாப்பிடுவார்கள் .  மதிய சாப்பாட்டிற்கு காலையிலோ அல்லது இரவோ வடித்து வைக்க்கனும், ஒரு பேச்சுலர் ரூமில் மதிய சாப்பாட்டிற்கு சாதம்  வடிக்கும் போது சரியாக பிடிமானம் இல்லாத்தால் சோறு வடிக்கும் போது மேலே வயிற்றிலேயெ கொஞ்சம் கொட்டி விட்டதாம். சமைக்கும் போது கண்டிப்பாக நிதானம் தேவை. பெரிய சட்டியில் சாதம் வடிப்பதாக இருந்தால் அதற்கு ஏற்றார்போல கையில் இருந்து  வழுக்காத நல்லகாட்டன் துணியாக இரண்டு சின்ன துண்டுகளாக பிடித்து தூக்கினால் ஈசியாக இருக்கும். அதே நேரம் கேஸ் அடுப்பில் முன்னாடி வைத்து சமைக்கும் போது சரியான பிடிமானம் இல்லாமல் தவறி விழவும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் சமைக்கும் பேச்சுலர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் எச்சரிக்கையாக சமைப்பது நல்லது.




இழப்பு   ஒரு இடத்தில் புட் பாயிசன் என முன்று பேர் மருத்துவ மனை சேர்க்கப்பட்டு அதில் ஒருவர் இறந்து விட்டார். இரண்டு பேர் சிகிச்சை பெற்று நல்ல ஆகிவிட்டனர்.
இது சிலர் ஊரிலிருந்து பலகாரம் கொண்டு வந்த்தால் என்று சொன்னார்கள்.இல்ல ஊரில் இருந்து சிக்கன் கொண்டு வந்தார் அதானால் தான் என்றார்கள், ஆனால் இரண்டுமே இல்லை. இங்கு நம்ம ஊரை விட சிறிய கரப்பான் பூச்சியும், மூட்டை பூச்சியும், எலியும் அதிகம். எல்லாபேச்சுலர்களும் சலவைக்கு துணியை போடுவதால் அதன் மூலம் கண்டிப்பாக வரும். இல்லை டேக்சி, சினிமா தேட்டர்களில் இருந்து அழகாக கொண்டு வந்துடுவாங்க. அப்படி இருக்கும் போது எல்லா இட்த்திலும் பெஸ்ட் கன்ரோல் அடிப்பார்கள். அப்படி அடிக்கும் போது எல்லோரும் அலுவலகம் சென்றதும் அடித்தால் மாலை வரை எல்லா மூட்டை பூச்சி, கரப்பான் எல்லாம் செத்து கிடக்கும். இது தெரியாமல் மதியம் டுட்டி முடிச்சி வந்தவர் அப்படியே தூங்கிட்டார் அதானால் மூச்சு திணறிவிட்ட்து என்றார்கள்.அதனால் தான் இறந்துவிட்டார் என்றார்கள், இங்கு போலிஸில்ஒரு கேஸ் மாட்டினா அவ்வளவு தான் அதை டீல் பண்ணி முடிக்க ஒரு மாதம் ஆகும். ஆபிஸில் இருந்து வந்ததும் இருக்கும் டயர்டில் அப்படியே படுக்காமல். எல்லாத்தையும் செக் பண்ணிட்டு படுக்கலாம்.
சாப்பாட்டு பொருட்கள் மற்றவர்களுக்கு வாங்கி வருவதாக இருந்தால்எண்ணை சிக்கு ஸ்மெல் உள்ள மைசூர் பாக்கு, பீலிச்சிங் தண்ணி வாசனை வர ஸ்வீட் அயிட்டம் இது போது கண்ணை மூடி கொண்டு வாங்கி வராதீங்க, இங்கு வந்து மற்றவர்களுக்கு ஏதும் ஆச்சு ந்னா மாட்டுவது நீங்க தான். அப்படியே ஊரிலிருந்து ரெடி மேட் ஃபுட் அயிட்டங்கள், காரம் இனிப்பு வாங்கி வருவதாக இருந்தால் சீக்கிரம் கெட்டு போகாத பொருளா, எக்ஸ்பேரி டேட் செக் செய்து வாங்கி வரவும்

பயணம்: ஊருக்கு வரும் போதும் சரி கிளம்பும் போதும் சரி விமான நிலையத்தில் சரியாக எவ்வள்வு எடை கொண்டு போக அனுமதிக்கிறார்கள் என்பதை சரியாக தெரிந்து கொண்டு பேக் பண்ணுங்கள் அன்பு தொல்லையால் எல்லாரும் கொடுக்கிற அதிரசம் ஹல்வா, முறுக்கு சீடை ,ஊறுகாய் ,நெய் அவ்வளத்தையும் அடைத்து கொண்டு வந்தால் கஸ்டம்ஸில் வெயிட் அதிகமானால் பயண டென்ஷனில் ஏற்போர்டில் அவ்வளத்தையும் பிரித்து போட்டு கொண்டு தலய பிச்சிக்க வேண்டியதாக இருக்கும்.
அதுவும் இல்லாமல்  துணிமணி , சர்டிபிகேட் வைத்திருக்கும் அதே பெட்டியில் மேற்கொண்ட உணவு பொருட்களை திணித்து  கொண்டு வருவதால் அவ்வளவும் எண்ணை கறையாகிடும்.
கண்டிப்பாக பேச்சுலர்கள் ஓவ்வொரு விஷியத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தொடரும்... 

ஆக்கம் 
ஜலீலாகமால்




17 கருத்துகள்:

Asiya Omar said...

நல்ல பகிர்வு.சில விஷயங்கள் பொதுவாக அனைவருக்கும் உபயோகமாக இருக்கிறது.மொத்தமாக சாதம் வடிக்கும் பொழுது கிளிப் போட்டு வடிக்கலாம்.நான் அப்படி தான் செய்வேன்.தொடர்ந்து எழுதுங்க..

Priya Sreeram said...

nice post jaleela; keep sharing such info

Riyas said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலிலாக்கா..

பேச்சுலர்களுக்கு தேவையான நல்ல விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்..

நீங்கள் சொன்னவை யாவும் இங்கு நடப்பவைதான்..

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள பகிர்வு.....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு ! நன்றி சகோதரி !

Admin said...

//நல்ல படிச்சி வேற வழி இல்லாம வேலை தேடி அலுத்து போய் விசா முடியும் தருனத்தில் ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்று படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாத வேலையும் சிலர் பார்க்கின்றனர்.//

உண்மை தான் சகோ.!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

பேச்சுலர் வாழ்க்கையின் நிலைமையை புட்டு புட்டு வைக்கிறீர்கள் சகோ.

சோகமாக வாழும் பேச்சுலர்களும் உண்டு, சுகமாக வாழும் பேசுலர்களும் உண்டு.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் அக்கா...இங்கு வந்து ஐந்தாண்டுகளில் பல விஷயங்களில் தட்டித் தேரியாச்சு....

நீங்க சொன்ன அந்த புட் பாய்சன் நபர் எங்க கம்பெனி ஆளாகத்தான் இருக்கனும் என நினைக்கிறேன்.. சமீபத்தில் நடந்தது....

சாப்பாடு வடிக்கும் போது...சொல்ல வேண்டியது தான்..சரியா சொல்லிருக்கீங்க.. அது நடக்கத்தான் செய்து அக்கா..

பயனுள்ள பகிர்வு...

அன்புடன்
ரஜின்

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா நிறைய பேர் அவசரத்தில் கையில் காலில் ஊற்றி கொள்வாரக்ள்

ஒரு சின்ன் டிப்ஸ் தான் ஆனால் சமயத்துக்கு எல்லாத்துக்கும் பயன் படும்.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி பிரியா ஸ்ரீராம்

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் வாங்க ரியாஸ் வெகு நாட்கள் கழித்து வந்து இருக்கீங்க

ஆம் பேச்சுலர் விழிப்புணர்வுக்காக எழுதியத்து தான்

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி வெங்க்டநாகராஜ்

Jaleela Kamal said...

தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Jaleela Kamal said...

வாஙக் பாஸித் ஆமாம் நிறைய பேச்சுலர்கள் ப்டிப்புக்கு ஏற்ற வேலை பார்ப்பதில்லை

Jaleela Kamal said...

ராஜ கிரி ஹாஜா மைதீன் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சலாம் ரஜின் ஆமாம் உங்கள் கம்பேனி ஆள் தான்..

கம்பேனி பெயரை சொல்லவேண்டாம் என்றுதான் பொதுவா எழுதினேன்.


சாப்பாடு வடிக்கும் போது கண்டிப்பாக கவனம் வேண்டும்.

Anonymous said...

Useful tips n post akka

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா