எடுத்துக்கங்க இந்த பிரெட் ஹல்வாவை.ஏன்ன்னு கேட்கிறீங்களா?
இதன் செய்முறையை பிறகு போடுகிறேன்.
இது என் 400 வது பதிவு. இது வரை ஆதரவு த்ந்துபதிவுகளுக்கு தவறாமல் பதில் அளித்து ஓட்டு போட்டு ஊக்கமளித்து கொண்டு இருக்கும் அனைத்து பதிவாளர்களுக்கும் மிக்க நன்றி, இன்னும் எனக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்.
துபாயில் பேச்சுலர்களின் வாழ்க்கை பாகம் - 2
பேச்சுலர் வாழ்க்கைய பற்றி ஏற்கனவே பாகம் - 1 எழுதி இருந்தேன்.அதை இங்கு சென்று படித்து கொள்ளலாம்.
ஒரு ரூமில் எட்டு பத்து பேர் தங்கி இருக்கும் அறையில் எல்லோருக்கும் பெட்ட்டு போட இடம் இருக்காது, ஆகையா பங்க் பெட்டு போட்டு கொள்வார்கள், பங்க் பெட் என்றால் இரண்டு அடுக்கு இருப்பது போல் பெட். அப்படி பங்க் பெட்டில் கீழே படுப்பவகளுக்கு பிரச்சனை இல்லை மேலே படுப்பவர்கள் தான் பிரச்சனை, ரொம்ப ஜாக்கிரதையாக படுக்கனும், தூக்கத்தில் இரவில் டாய்லெட் போக இரங்கும் போது பார்த்து இரங்கனும். தூக்க கலக்கத்தில் கவனிக்காமல் எழுந்து மேலே பேன் ஓடி கொண்டிருக்கும். தெரியமகைய, தலைய நீட்டிடாதீங்க இப்படி தான் ஒருவருக்கு தலையில் பேன் அடித்து 8 தையல் சமீபத்தில் போட்டு இருக்கிறார்.
Executive பேச்சுலர்களுக்கு பிரச்சனை இல்லை ஒரு அறையில் இரண்டு பேர் தான் தங்குவார்கள். வசதிகளும் அதிகமாக இருக்கும்.
அனைத்து பேச்சுலர்களும் வாரம் ஒரு முறை கிடைக்கும் லீவில் டேரா பஜாரில் , பர்துபாய் , கராமா ஏரியாக்களில் வியாழன் இரவும், வெள்ளியும் பேச்சுலர்கள் கூட்டம் கூட்டமாய் நின்று சொந்தங்களை சந்திப்பதும், கடிதஙக்ளை பகிர்ந்து கொள்வதும், மனைவி , பிள்ளைகள், உம்மா , அக்கா தங்கைகளுக்கு துணிமனிகள் வாங்குவதற்காகவும் பஜாரில் கூடுவார்கள், தப்பி தவறி பேமிலியுடன் போய் விட்டால் ஒரு சந்துக்கூட ஃபிரியாக இருக்காது ஜே ஜேன்னு இருக்கும்.
ஊருக்கு போக சாமான்கள் வாங்க எல்லாம் ஒன்று கூடி போவதும்.
பிரண்டு வாங்கினானேன்னு கூட போனவர்களும் சேர்ந்து பர்சேஸ், பர்ஸ் காலி.
ஒரு நபருக்கு 30 கிலோ தான் எடுத்து செல்ல அனுமதி, கையில் 7 கிலோ
ஷாப்பிங் பண்ணி கொடுக்கிற பிரண்டுமார்களும் அவர் வாங்குவது போல வே வாங்கி செல்பவர் தலையில் கட்டுவார்கள். இப்படி ஒரு ஆள் என்றால் பரவாயில்லை, ஊர்கார்கள், ஆளுக்கொன்று, அவஙக் அவங்க பிள்லைகளுக்கு டய்ஸ், மனைவிக்கு புடவை, நன்பர்களுக்கு செண்ட், மொபைல் என்று , போய் ரூமுக்கு போய் பேக்கிங் ஆரம்பிப்பார், வைகக் வைக்க பெட்டியில் மற்றவர்கள் பொருளே நிறைந்துவிடும், தன் பொருளை வைக்க முடியாமல் பேந்த பேந்த முழித்து கொண்டு பேக்கிங்கை மாற்றி மாற்றி கட்டி இவர்கள் சாமனை பாதி பிரித்து எடுத்து காசு கொடுத்து பார்சலில் போடுவார்கள்.
சரி பேக் பண்ணியாச்சேன்னு நிம்மதியா இருந்தால், அப்ப தான் கிள்ம்பும் போது மச்சான் எப்படியாவது இந்த் பார்சல உள்ள வச்சுக்கோன்னு ஒரு அரை கிலோ வரும், அடுத்து வழி அனுப்ப வரும் நபர் மாப்ளே டூட்டி ஃபிரியில சாமான் வாங்கும் போது எனக்கு ஒரு அரை கிலோ பாதம், என் பிரெண்டுக்கு ஒரு சிக்ரேட் பாக்கெட் வாங்கிட்டு போய்விடு என்று சொல்வார்கள்.
ஊருக்கு போய் சாமான்களை நண்பர்கள் வீட்டுக்கு போய் கொடுக்க சென்றால் உடனே எப்ப கிளம்புவீங்க. போன ஆள் டென்ஷன் ஆகிடுவார் இப்ப தாஙக் வந்து இருக்கேன். இல்ல்லங்க திருப்பி இங்கிருந்து சாமான் கொடுத்தனுப்ப தான் கேட்கிறேன் என்பார்கள்.
கஷ்டபட்டு சம்பாதித்து ஊருக்கும் போய் வருவது நண்பர்களுக்க்காவே போல் இருக்கும், உதவி செய்யும் நண்பனுக்கு செய்ய வேண்டியது தான் . அதுக்குன்னு ஓவரா ஒருத்தரை போட்டு தாளிப்பது சரியில்லை.
அதிலும் சில பேர் ரொம்ப உஷாரு, ஏற்போட்டில் நின்று கொண்டு மச்சான் இப்ப தான் திடீருன்னு முடிவெடுத்தேன் ஊருக்கு போறேன் மச்சான் என்பார்கள்.இப்படி சொல்லி பிழைத்துக்கொள்பவர்களும் உண்டு.
இது போல் இதுவரை கொடுத்திருந்தால் இனிமேலாவது, கொஞ்சம் அதை மாற்றி கொள்ளுங்கள். மீதியை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்
பேச்சுலர் சமையலும் ஊருக்கு போதலும்
இதையும் படிங்க. (கண்ணாவின் இடுகை)
இன்னும் பல பகிர்வுகள் நேரம் கிடைக்கும் போது போடுகிறேன். பேச்சுலர்கள் படங்கள் கூகிலில் இருந்து எடுத்தது. இப்ப பதிவு போட நேரம் இல்லை, இந்த பதிவு முன்பே எழுதிவைத்தது.
எல்லோருக்கும் மீண்டும் நன்றி.
http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp
போன மாதம் நான் போட்ட பதிவு பருவமே 16 குட்பிளாக்கில் வ்ந்துள்ளது, இரண்டு நாள் முன் தேனக்கா பதிவுக்கு பின்னூட்டம் போடும் போது குட் பிளாக்கில் அவஙக் கவிதை வந்துள்ளதை பார்க்கும் போது தான் தெரிந்தது.
400 வது பதிவு,யுத் ஃபுல் விகடனுக்கு நன்றி.
Tweet | ||||||
66 கருத்துகள்:
400 - க்கு வாழ்த்துக்கள்.
எனக்கு வாரத்துக்கு ஒரு போஸ்ட் போடுறதுக்கே
முடியல........மண்டை காயுது...........
எப்புடி 400.... அவ்வ்..............
சை.கொ.ப முதல் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
இங்கேயும் மண்டை காய ஆரம்பித்து விட்டது, இனி பதிவுகள் மெதுவா தா வரும்.
இந்த மங்குனி தான் கொசு முட்டை கண்ண போட்டுட்டாரு போல.
400 - க்கு வாழ்த்துக்கள்.
Congratulations!!! WOW! super milestone!
வாழ்த்துகள்...400வது பதிவுனா சும்மாவா என்ன...எப்படி தான் உங்களுக்கு இவ்வளவு பொறுமையே...எனக்கு வாரத்திற்கு 2 பதிவு போடுவதே கஷ்டமாக இருக்கின்றது...உங்களின் சுறுசுறுப்பு தெரிகின்றது...வாழ்த்துகள்...
இன்னும் பல பதிவுகள் போட வாழ்த்துகள்...சீக்கிரமாக அரை சதம் ஆயிரம் அடித்துவிடுங்க...
400 - க்கு வாழ்த்துக்கள் Jaleela.
400 - க்கு வாழ்த்துக்கள் 400 - க்கு வாழ்த்துக்கள் 400 - க்கு வாழ்த்துக்கள் 400 - க்கு வாழ்த்துக்கள் 400 - க்கு வாழ்த்துக்கள் 400 - க்கு வாழ்த்துக்கள் 400 - க்கு வாழ்த்துக்கள் 400 - க்கு வாழ்த்துக்கள்.
அப்பாடா எப்புடிக்கா உங்கிட்ட கத்துக்கோன்னும் நிறைய. இன்னும் இன்னும் முன்னேரி 4000 யிரத்துக்கும்மேல் வர வாழ்த்துக்கள்..
400 க்கு வாழ்த்துக்கள் ஜலீலா!
பேச்சிலர்களோட நிலைமையை விலாவாரியா சொல்லியிருக்கீங்க. அதிலயும் ஊருக்குப்போறப்ப ஏற்படும் டென்ஷன், பாவம்தான் அவங்க.
நன்றி சித்ரா உங்களின் தொடர் வருகையும் ஊக்கமும் கூட எனக்கு பூஸ்ட் தான்.
Mமாஷா அல்லாஹ்.. வாழ்த்துக்கள் சகோதரி..
இந்த பார்சல் குடுக்குற விஷயம் நூத்துக்கு நூறு சரி!
கீதா ஆச்சல் உங்கள் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி.
இறைவன் நாடினால், நீங்கள் சொல்லியபடி ஆயிரம் குறிப்புகள் கொடுப்பேன்.
மிக்க நன்றி காஞ்சனா//
வாழ்த்துக்கள்.
சுந்தரா வாங்க வருகைக்கும் மிக்க நன்றி
ஊருக்கு போகும் போது அவர்களுக்கு கொஞ்சம் நஞ்சம் டெட்ஷன் கிடையாது, ரொம்ப வே, ஆனால் பல முறை பொய் பழகியவர்கள்.
சரியாக ஸ்கெச் போட்டு நடப்பவர்கள் ரூட் க்ளியர் தான்
ந்ன்றி கேபுள் சங்கர், உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி + சந்தோஷம்
நாஸியா ஆமாம் இன்னும் நிறைய இருக்கு எனக்கு நேரம் இல்லை எழுத, படங்களும் எடுத்து வைத்திருந்தேன் பதிவுக்கு தோதுவா போட முடியாமல் போய் விட்டது.
தொடர் வருகைக்கு மிகக் நன்றீ
தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்
இன்னும் பக்கத்துல ரெண்டு சைபர் வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
//அதிலும் சில பேர் ரொம்ப உஷாரு, ஏற்போட்டில் நின்று கொண்டு மச்சான் இப்ப தான் திடீருன்னு முடிவெடுத்தேன் ஊருக்கு போறேன் மச்சான் என்பார்கள்.இப்படி சொல்லி பிழைத்துக்கொள்பவர்களும் உண்டு.//
என் ரகசியம் எப்படி தெரிஞ்சிச்சி உங்களுக்கு
400 பதிவா?????????????????
அடேங்கப்பா எப்டி சிஸ்டர் உங்களால இவ்ளோ எழுத முடிஞ்சது....ரொம்ப சந்தோசம் மற்றும் வாழ்த்துக்கள்....இப்போ போய் உங்க பதிவ படிச்சிட்டு வர்றேன்
//மேலே படுப்பவர்கள் தான் பிரச்சனை, ரொம்ப ஜாக்கிரதையாக படுக்கனும்,//
தூக்கத்துல உருள்ற பழக்கம் உள்ள ஆளை மேல படுக்க வைக்கனும். உருள்ற வியாதி சீக்கிரமா சரியா போய்டும். ஹி...ஹி..
அக்கா, நீங்க பசங்க நெறைய பொருள் குடுக்கிறதா சொன்னிங்க...ரைட்டு தான்...ஆனா அதக் கொண்டு போய் அவங்க வீட்ல குடுத்துப் பாருங்க, இன்னும் கொஞ்சம் கூட வாங்கி வந்திருக்கலாமூன்னு தோணும், அவுங்க படுற சந்தோசம், நம்மள கவனிக்கிற விதம் (வேணும்னா வெற்றிக் கொடி கட்டு படத்தில பார்த்திபன் முரளி வீட்டுக்கு போற சீன பாருங்க....) ...எங்க பொழப்பு நாறப் பொழப்பு அக்க..
கூட இருந்த மாதிரி எல்லாத்தையும் எழுதி இருக்கீங்க...நல்லா இருந்தது
வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்.......................................... எத்தனை வாழ்த்துக்கள் உண்டோ அத்தனை வாழ்த்துகள்.
ஹைய்யா எங்கக்கா ஜலீலாக்கா 400 பதிவு போட்டிருக்காங்க.. வாழ்த்துகள் ஜலீக்கா.
சேட்டை கரான் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துகள் ஜலீலா. இந்த கட்டபொம்மனின் அன்பார்ந்த வாழ்த்துகள். அதுக்காக பரிசில் எதுவும் கேட்டுவிடக் கூடாது; ஏன்னா மன்னரோட பாடே பெரும்பாடா இருக்கு..
//இன்னும் பக்கத்துல ரெண்டு சைபர் வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//
அல்லாஹு அக்பர்
//என் ரகசியம் எப்படி தெரிஞ்சிச்சி உங்களுக்கு//
இப்படி எழுத போய் தான் சிலர் ரகசியங்கள் (மூடிவைக்காமல் ) வெளி வருகிறது.
பருப்பு (மோஹன்) உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றீ
///அக்கா, நீங்க பசங்க நெறைய பொருள் குடுக்கிறதா சொன்னிங்க...ரைட்டு தான்...ஆனா அதக் கொண்டு போய் அவங்க வீட்ல குடுத்துப் பாருங்க, இன்னும் கொஞ்சம் கூட வாங்கி வந்திருக்கலாமூன்னு தோணும், அவுங்க படுற சந்தோசம், நம்மள கவனிக்கிற விதம் (வேணும்னா வெற்றிக் கொடி கட்டு படத்தில பார்த்திபன் முரளி வீட்டுக்கு போற சீன பாருங்க....) ...எங்க பொழப்பு நாறப் பொழப்பு அக்க..
கூட இருந்த மாதிரி எல்லாத்தையும் எழுதி இருக்கீங்க...நல்லா இருந்தது///
நீங்கள் சொல்வது சரி தான் இல்லன்னு சொல்லல.
ஆனால் கொண்டு செல்வதற்கும் ஒரு அளவு வேண்டும் இல்லையா?
கடைசியில் சிலர் அவர்கள் போட்டுகொள்ளும் துணி கூட கொண்டு போக முடியாமல் ஊரில் போய் வாங்கி கொள்வார்கல்.
இபப் நீங்க உங்கள் அண்ணன் பையனுக்கு ஒரு பெரிய டாய் கார் வாங்கினால் , அதே போல் இன்னொரு டாய் காரு உங்கள் நன்பனும் வாங்கி கொடுத்தா இரண்டையும் வைத்தாலே பெட்டி நிறைந்துடும். அத தான் சொல்லவரேன்.
கொடுத்து விடுவதற்கும் ஒரு அள்வு உண்டு .
நன்றீ ஸ்டார்ஜன் இத்தனை வாழ்த்துக்களா,
ரொமப் சந்தோசஹ்ம் துஆ செய்யுஙக்ள்
உங்கள் அன்பான வாழ்த்துக்கலுக்குரொம்ப நன்றீ மின்மினி
கட்டபொம்ம்ன் வாங்க் உங்கள் வருக்கைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
அட இப்ப விற்கிற விலை வாசியில் அரசவையில் உள்ள கஜானாவும் காலியா?
என்ன கொடுமை சார்
ஜலீலா!
உங்களின் 400-ஆவது பதிவிற்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
உங்களுடைய சுறுசுறுப்பைப் பார்த்தால் விரைவிலேயே 1000-த்தைத் தொட்டு விடுவீர்கள் என்று நினைக்கிறேன்.
அடுத்த வாரம் விமான டிக்கட் எடுத்தவங்க யாராவது இருக்குறாங்களா?எனக்கு ஒரு பார்சல் அனுப்பனுமே?
அழகாக சொல்லி உள்ளீர்கள் எங்கள்
வாழ்க்கையை எல்லோர் சார்பிலும் உங்களுக்கு நன்றி!
சீக்கிரம் 1000 தொட வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
Congratulations on ur 4th century and wishing u many more success :-)
உங்கள எப்டியாவது மடக்கி கேள்வி கேக்கலாம்னு பார்த்தா....முடியாது போலையே...
நெக்ஸ்ட் மீட் பண்றேன்!
400 வது பதிவுக்கும்,தங்கள் பதிவு விகடனில் வந்ததற்க்கும் வாழ்த்துக்கள் அக்கா!!
மேலும் பல நூறு சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்!!
அக்கா, இந்த பேச்சிலர்கள் ஒரு பாவப்பட்ட ஜென்மம்தான். இப்பல்லாம், மூணு அடுக்கு வச்ச (ட்ரெயின் மாதிரி) பங்க் பெட்டும் வருதுக்கா.
அதேமாதிரிதான், ஊருக்குப் போகும்போதும். இதுல பேச்சிலர், ஃபேமிலி எல்லாருக்கும் அதே கஷ்டம். அதனாலத்தான் நாங்க, “No give, No take" பாலிசி ஃபாலோ பண்றோம்!!
400- எல்லாம் சாதாரணம் அக்கா உங்களுக்கு; அறுசுவையில் குறுகிய காலத்துலயே 500 அடிச்சவங்களாச்சே நீங்க!!
Vazhthukkal..looking forward for many more wonderful recipes from you..Bread Halwa looks too tempting..waiting for the recipe..
ஜலீலா உங்களோட நானூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.இந்த இடுகை நிறைய பேரோட ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாய் உள்ளது.அருமை.விகடன் குட் ப்ளாகில் உங்கள் இடுகை வந்ததிற்கு வாழ்த்துக்கள்.
400 - க்கு வாழ்த்துக்கள்.
எப்படிங்க.....?
400 வாழ்த்துக்கள் போடலாம்னு பார்தேன்...அனா போடல்ல....
400ஆ, அருமை
வாழ்த்துகள், கலவையான பதிவுகள், நிறைய டிப்ஸ், சமையலோ சமையல்
வாழ்த்துகள்!
400 - க்கு வாழ்த்துக்கள்
congratulations jaleela
500 க்கு இப்போதே வாழ்த்துகிறேன்
r.v.saravanan
kudanthaiyur.blogspot.com
//Jaleela said...
இந்த மங்குனி தான் கொசு முட்டை கண்ண போட்டுட்டாரு போல.///
இதென்னா அநியாயமா இருக்கு , நான் பாட்டுக்கு சிவனேன்னு கேரளா மாந்தரீகம் தான் செஞ்சேன் , என்னயபோய் கண்ணு போட்டேன்னு அநியாயமா சொல்ரிகளே (பரவால்ல மங்கு கேரளா மாந்தரீகம் நல்லா வேலைசெய்யுது )
400 க்கு வாழ்த்துக்கள்
4000000000000 wishes
@@@மங்குனி அமைச்சர்--//இதென்னா அநியாயமா இருக்கு , நான் பாட்டுக்கு சிவனேன்னு கேரளா மாந்தரீகம் தான் செஞ்சேன் , என்னயபோய் கண்ணு போட்டேன்னு அநியாயமா சொல்ரிகளே (பரவால்ல மங்கு கேரளா மாந்தரீகம் நல்லா வேலைசெய்யுது )//
பிளீஸ்..பிளீஸ் மங்கு மந்திரத்தில ஒரு பேரிக்கா வாங்கி தாயேன்.(( இப்ப சீசன் இல்லயே!! தக்காளி ,இன்னும் ஆறு மாசத்துக்கு நீ எஸ்கேப்தான் ))
400 க்கும், இன்னும் நிறைய நிறைய.... எழுதிடவும் வாழ்த்துக்கள்!
ஹை..நானூஊஊஊறா?ரொம்ப மகிழ்ச்சி ஜலி.இன்னும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்."துபையில் பேச்சுலர்ஸ் வாழ்க்கை"படிக்க,படிக்க சங்கடமாகத்தான் இருக்கு.குடும்பத்திற்காக உருகும் மெழுகுவத்திகள் அவர்கள்.
ஜலீலாக்கா 400 ஆஆஆ..? வாழ்த்துக்கள். வாழ்த்துச் சொல்ல கொஞ்சம் லேட்டாகி விட்டது, கோபிக்காதீங்கோ.... பஜ்ஜுலேர்ஸ் வாழ்க்கைப் படங்கள் பார்க்க என்னவோ செய்கிறதே.... அங்கு மட்டும் இல்லை ஏனைய நாடுகளிலும் இப்படி இருக்கிறார்கள் என்றுதான் அறிந்தேன்.... பல காரணங்களுக்காக. எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள் என நினைக்க வேதனையாகத்தான் இருக்கு. எல்லோரும் நல்லா இருக்கட்டும்.
ஆஹா மேடம், அம்புட்டு கண்ணும் உங்க மேல தான். மறக்காம சுற்றிபோட சொல்லுங்க, ஆமா சொல்லிட்டேன் சொல்லிட்டேன். என்றாலும், வாழ்த்துக்கள் சொல்லாமல் போனால் நல்லவ இருக்கும். அதையும் சொல்லிடுறேன். வாழ்த்துக்கள்!!!
நல்ல பதிவு ஜலீலா. நெறைய அனுபவம் உண்டு இது போல் எனக்கும்
400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். சீக்கரம் அந்த பிரட் அல்வா போடுங்களேன்... பாக்கவே அழகா இருக்கு
மனோ அக்கா உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி.
// ராஜ நடராஜன் said...
அடுத்த வாரம் விமான டிக்கட் எடுத்தவங்க யாராவது இருக்குறாங்களா?எனக்கு ஒரு பார்சல் அனுப்பனுமே?//
உங்கள் முதல் வருகைக்கு மிகக் ந்ன்றி, தேடி பாருஙள், யாராவது இளிச்ச வாய்கள் கிடைப்பார்கள்.
மஹா ராஜன் உங்கல் முதல் வருகைக்கு மிக்க நன்றி, நிறைய வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றீ, தொடர்ந்து வந்து கருத்துக்களை தெரிவிக்கவும்.
அருனா உங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகக் நன்றி.
பருப்பு என்னை எங்கும் மடக்க முடியாது.
நன்றி மேனகா, உங்கள் வாழ்த்துக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி மேனகா/
நன்றி ஹுஸைனாம்மா//
நாங்களூம் யாரிடமும் கொடுப்பதும் கிடையாது வாங்கிகொள்வதும் கிடையாது , ஒரு சில பேரை தவிர.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
நீத்து பாலா உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி, பிரெட் ஹல்வா வந்து கொண்டே இருக்கு.
ஆசியா உங்கள் உற்சாகமான பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
malar said...
400 - க்கு வாழ்த்துக்கள்.
எப்படிங்க.....?
400 வாழ்த்துக்கள் போடலாம்னு பார்தேன்...அனா போடல்ல//
எப்படிங்க அது அப்படி தாங்கோ.
400 வாழ்த்தா ஆ பக்கம் தாங்குமா?
//400ஆ, அருமை
வாழ்த்துகள், கலவையான பதிவுகள், நிறைய டிப்ஸ், சமையலோ சமையல்
வாழ்த்துகள்//
சகோ.ஜமால், சரியாக ஞாபகப்படுத்திட்டீஙக்.
முதல் முதல் நான் ஆரம்பித்த பிளாக் பெயரை, (சமையலோ சமையல்)
ட்
தொடர் வருகை தந்து தவறாமல் பின்னூட்டம் அளீப்பதற்கு மிக்க நன்றி
ஆர்.வி, சரவனன், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றீ,
முடிந்த போது உங்கள் பக்கம் வருகிறேன்.
அமைச்சரே சும்மா ஒரு லுலுலாய்க்கு தான் சொன்னேன்.
சரவன குமார் வாழ்த்துக்கு மிக்க நன்றீ
,
ஸாதிகா அக்கா தவறாமல் வந்து பின்னூட்ட்டமிட்டு உற்சாகப்படுத்துவதற்கு மிக்க நன்றீ நன்றி நன்றி,,
( பேச்சுலர்கள் குடுமப்த்துக்காக மெழுகைபோல் உருகுகிறார்கள் என்று சரியாக சொன்னீர்கள்
நன்றி பிரியா
அதிரா லேட்டா வந்தா கோபிக்க மாட்டேன்.
நீங்கள் வந்ததே ரொமப் சந்தோஷம்.
ஆமாம் எல்லா நாட்டிலும் இந்த பேச்சுலரின் வாழ்க்க்கை இப்படி தான் . நான் நேரில் பார்க்கும் சம்பவன்களை வைத்து சும்மா பொதுவாக தான் எழுது கிறேன்/
உங்கள் வாழ்த்துககளுக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி
என் அப்துல்லா ஓஹோ அப்ப கண்ணு போட்டது நீங்கள் தானா?
வீனாக அமைச்சர சொல்லி புட்டேனே.
(உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி, தொடர் வருகைகும் ரொம்ப சந்தோஷம்)
அப்பாவி தங்கமணி, உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றீ, வாழ்த்துக்கும் நன்றி, பிரெட் ஹல்வா இதோ போட்டுடுரேன்.
ஊருக்கு செல்லும் நண்பர்களுக்கும், மாட்டிய நண்பனிடம் பொருட்களை முடிந்தளவு கொடுக்கும் நபர்களுக்கும் ஏத்த அறிவுரை கூறியிருக்கிறீர்கள்.
சூப்பர் சகோ.
400 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
ஊருக்கு வரும்போது நண்பர்கள் வீடுகளுக்கு அவர்கள் கொடுத்து அனுப்பும் பார்சலை கொடுப்பது, நண்பர்களின் வீடுகளில் நண்பர்களுக்கு கொடுக்கும் பார்சலை வாங்கி வருவது எல்லாம் படிக்க கேட்க நல்லாஇருக்கு ஆனால் அதை பெட்டியில் வைத்து கொண்டு வரும் சிரமம் அவர்களுக்கு தான் தெரியும் இதை அழகாய் கூறினீர்கள்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா