Wednesday, March 24, 2010

துபாயில் பேச்சுலர்களின் வாழ்க்கை. - 1பேச்சுலர்ஸ் வாழ்க்கை மிக கொடுமையானது,மிகவும் சுமையானது, ஆங்காங்கே பிலிப்பைனி பிகருங்க இருப்பதால் கொஞ்சம் சுவையாக இருக்கு.
பிள்ளைகள் படித்து முடித்து விட்டு அடுத்த கட்டம் வேலை தேடல் அதுவும் புதுசா வெளியூர் வந்து வேலை தேடுவது போல் ஒரு கஷ்டம் வேறெதுவும் இல்லை.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் பேச்சுலர்கள் பற்றி எழுதனும் என்றால் அதற்கு ஒரு பதிவு போதாதாது.
ஊரிலிந்து தாய் தந்தையர்கள், உறவுகள் எல்லாத்தையும் விட்டுவிட்டு தனியே இங்கு வந்து வேலை பார்க்க வருகிறார்கள்.

வந்ததும் முதலில் நல்ல ரூம் கிடைக்கனும், சாப்பாடு,நல்ல நண்பர் கிடைக்கனும். இதுவரை அம்மா கையால் சாப்பிட்டு விட்டு இங்கு ஓவ்வொன்றிற்கும் நாமா தேடி போய் சாப்பிடனும்.மனதளவில் பெரும் சோகம்.
இப்ப தான் தோனும் ஆகா அம்மா கையில் வைத்து கொண்டு தாங்கினார்களே. என்ன ஆட்டம் போட்டோம். அப்படி எல்லாம் நினைக்க தோனும்.

இங்கு வரும் பேச்சுலர்களுக்கு முதலில் ஏற்படுவது அல்சர் தான் உணவு ஒத்துக்கொள்ளாமல்.ச‌மைக்க‌ தெரியாத‌வ‌ர்க‌ள் ஹோட்ட‌லில் சாப்பிடுப‌வ‌ர்க‌ளுக்கு தான் முத‌லில் இந்த‌ பிராப்ள‌ம் வ‌ரும்.

நல்ல சமைக்க தெரிந்தவர்களுக்கு கவலை இல்லை. 
 அதுவும் ரூமில் எட்டு பத்து பேர் அதில் ஒரு சமையல் ராஜா இருந்தால் அவர்க்க்கு கொண்டாட்டம் தான் ஒன்லி குக்கிங் , மற்றவர்கள் ரெடியா வைப்பார்கள் இவர் ஒரு கறி மட்டும் செய்து விட்டு போவார்.

அதோடு மீதி பேர் எல்லாம் வேலைய பிரித்து காய்கறி , மார்கெட் போக ஒருவர், கட்டிங்க்ஸ் புட்டிங்க்ஸ் ஒருவர், அலிச்சாட்டம் செய்து போட்ட கிச்சன கிளீன் செய்து சாமான் கழுவ ஒருவர் என்று பிரித்து கொள்வார்கள்.
அப்படியே வயசு வாரி பெரியாப்பா,மாமா, மச்சான், தம்பி, மாப்ளே, மருமவன் என்று அவர்களுக்குள்ளே உறவுவாக இருப்பார்கள். வெவ்வேறு ஊரிலிருந்து வந்து ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள்.

இதுக்கு தான் பெண்குழந்தைகளுக்கு சமையல பழக்குவதை விட ஆண்குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது நல்லது போல.
காலையில் எழுந்ததும் பாத்ரூமுக்கு கியு.. ஓவ்வொருத்தருக்கும் ஓவ்வோரு டைம் வேலைக்கு போகும் நேரத்தை பொருத்து போகனும்.
இப்பவாவது பரவாயில்லை 20 வருடங்களுக்கு முன் எல்லாம் போனில் தொடர்பு கொள்வது, கடிதம் வரவு எதிர் பார்ப்பு எல்லாம் உண்டு. போன் பேச பூத்துக்கு செல்லனும். கடிதம் போட்டாலும் ஊரிலிருந்து வரவும் எப்படியும் சவுதி என்றால் 10 , 15 நாட்கள் ஆகும், துபாய் என்றால் ஒரு வாரம் ஆகும்.
இப்ப நல்ல வசதிகள் ஈமெயில், சாட்டிங், செல் போன் என்று மணிகனக்கா பேசினாலும், பத்த மாட்டுங்கிறது. ஆனால் சம்பாதிக்கும் காசை போனில் தான் நிறைய பேச்சுலர்கள் செலவிடுகின்றனர்.

துபாயில் மட்டும் இல்லை உலகத்தில் எல்லா இடங்களிலும் வெளியில் தங்கி படிக்கும் அனைத்து பேச்சுலர் ,வேலை பார்க்கும் பேச்சுலர்கள் லைஃபும் இப்படி தான்.

அதான் பாட்டிலேயே பாடினார்களே'' புறா கூண்டு போல 30 ரூமு.'' என்று பாட்டும் உண்டு.வெளி நாட்டு வாழ்வில் நொந்தவர்கள் எழுதிய கவிதையை படிங்க ,இது என் கவிதை இல்லை, எனக்கு கரண்டிய தவிர ஒன்னும் தெரியாது

இது நான் எழுதிய கவிதை கிடையாது, யார் எழுதியதுன்னு தெரியலஒட்டுமொத்த உறவுகளையும்
சுருக்கி நினைவுகளாக இதயத்தில்
சுமந்து பாலைவனத்திற்கு வந்துவிட்டேன்
சிறைவா சியாக!
இறுக்கிப் பிடித்த
இதயம் மட்டும்
இரவினில் கொப்பளிக்கும் உறவுகளை எண்ணி!!
தனிமையில்
தல ையணை மட்டுமே துணையாக!
ஈரம் காத்துக் கொண்டிருக்கும் கண்கள்
தூரத்தில் உள்ள உறவுகளை எண்ணி!!
ஆறுதலாக என்
அழுகை சப்தம் மட்டும்
சப்தமே இல்லாமல்!!
குரல்களில ் மட்டுமே
குடும்பம் நடத்தும் கொடுமை!!
கட்டிய மனைவியும்
தொட்டிலில் குழந்தையும்!
நடக்க ஆரம்பித்துவிட்டான் என்பதையே
நடுவில் ஒருவர் கூற;
நனைந்த கண்களை துடைத்துவிட்டு
சிரிக ்க மட்டுமே முடிந்தது!!


மெல்லிய உதடுகளை
ஈரம் கொண்டிருக்கும் எச்சிலின் உதறலோடு
தட்டிய கைகளோடு ஒரு முறை சொன்னான் Daddy என்று! அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!!!


(தொடரும்)

74 கருத்துகள்:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஜலீலா, உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான கவிதை.

உண்மையை சொன்னீங்க.

ஜெய்லானி said...

என்னத்த சொல்ல , எல்லாத்தையும் தான் நீங்களே சொல்லிட்டீங்களே !! ( போற போக்குல மனோதத்துவ டாக்டரா ஆயிடூவீங்க போலிருக்கு .டாக்டர் ஜலீலா --அட நல்லாதான் இருக்கு))

athira said...

ஜலீலாக்கா... கவிதை அருமை... இதயத்தை என்னவோ செய்கிறது. இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கலாம் சட்டென முடிந்துவிட்டது உங்கள் பதிவு.

முன்பு விசு அவர்களின் அரட்டைஅரங்கம் என நினைக்கிறேன் டுபாயில் நடந்த தொடரொன்று பார்த்து, அதில் அவர்கள் அங்கு படும்(தனியேஇருந்து) சோகக்கதைகளைக் கேட்டு கண்கலங்கியிருக்கிறேன்... என்ன செய்வது பணம்தானே அனைத்துக்கும் காரணம். பணம் இருந்தால் குடும்பத்தைப் பிரிவார்களோ?

டாக்டர் ஜலீலா அக்கா!!! --அட நல்லாதான் இருக்கு))

ஸாதிகா said...

உண்மைதான் ஜலி.இருப்பினும் நன்கு படித்துவிட்டு,மிக நல்ல வேலையில் இருப்பவர்கள் வாழ்க்கையின் உச்சாணியில் சகல சவுகரியங்களையும் அனுபவித்துக்கொண்டு இருப்பதையும் பார்த்து வியந்து கொண்டுஇருக்கிறேன்.

seemangani said...

நிஜம்தான் அக்கா...நல்ல வேலை நான் புறாகூண்டில் மாட்டவில்லை....
நல்ல பகிர்வு அக்கா...

Viki's Kitchen said...

Romba urukkamana kavithai. Manasai pisaiyuthu. Jaleela, some days before i saw a website called Arusuvai and there is a person in your name. Are you both same? If not pls forgive me...if so I am happy too.Pls answer me ....I am very eager.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

Really Nice

சுல்தான் said...

//எழுதியிருக்கும் கவிதையை படிங்க, இது என் கவிதை இல்லை, எனக்கு கரண்டிய தவிர ஒன்னும் தெரியாது//
கரண்டி தெரிவதோடு, நல்ல கவிதையை படிக்கவும், ரசிக்கவும், அதை மற்றவர்களும் அறிய அவா கொள்வதும், அதை அழகாக உழுது பிளாக்குவதும், ....
ஒண்ணுந்தெரியாதா!!!!!!!!!!!!!!!!!

thenammailakshmanan said...

உண்மைதான் ஸாதிகா சொன்ந்து போல் குடும்பத்தோடு நல்ல சம்பளத்தில் இருப்பவர்கள் அருமையாக இருக்காங்க,..
மற்றவங்க பாடு கஷ்டம்தான் ஜலீலா

சைவகொத்துப்பரோட்டா said...

உருக்கமாக இருக்கிறது கவிதை.

நட்புடன் ஜமால் said...

கரண்டி மட்டும் தான் தெரியுமுன்னு சொல்லிட்டு நல்லதொரு கவிதையை பகிர்ந்து இருக்கீங்க - நன்றி.

பேச்சிலார் வாழ்க்கையில் சமையல் நெம்ப கஷ்ட்டம் தேன்.

3 மாதம் நான் மெயின் குக்கா இருந்தேன் பேச்சிலார்களுக்கிடையில், எதையோ சமையல் என்ற பெயரில் செய்து வைத்து விடுவேன் அது மட்டும் தான் வேலையே

தொடரும்-ஆ - இண்ட்ரஸ்ட்டிங் தான் தொடருங்க

துலாபாரம் said...

பாச்சுலர் வாழ்கையே போர்க்களம் ,அதையும் நாங்கள் சிங்கப்பூர் லும் , மலேசியாவிலும் ,அரபு நாடுகளிலும் வாழ்ந்துதான் பார்க்கிறோம்.
வீட்டில் இருக்கும்போது காலைஇல் பெட் காபி ......
சுகமான நினைவுகள் அவை .....

வடுவூர் குமார் said...

அதுவும் துபாயில் பேச்சிலர் வாழ்கை...நானும் கொஞ்ச நாள் அனுபவித்திருக்கேன்.சாப்பாடு பிரச்சனை என்றவுடன்,காலை பிரட் மதியம் அலுவலக ஓவனில் அரிசி சாதம், அதை ரெடிமிக்ஸுடன் கலந்து சாப்பிட்டு கூடவே தயிர் சாதம்.இரவு மட்டும் ஹோட்டலில் அதுவும் வேகவைக்கும் சமாச்சாரமாக சாப்பிட்டு கழித்தேன்.உடல் நலம் கெடாமல் இருக்க கொஞ்சம் பழம் தினமும் அதோடு Exercise என்று இருக்கலாம்.
சமையல் ஒன்றும் கஷ்டம் இல்லை.உப்பு /புளிப்பு/உரைப்பு இதை ஒரு விகிதாசாரத்தில் கொண்டுவந்துவிட்டால் அது தான் பிடித்த சுவை அப்படி வராவிட்டால் வந்தது தான் என்று வைத்துக்கொள்ளவேண்டும். :-))

ஹுஸைனம்மா said...

//இதுக்கு தான் பெண்குழந்தைகளுக்கு சமையல பழக்குவதை விட ஆண்குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது நல்லது போல. //

எக்காவ், நைஸா பெண் சுதந்திரம், பெண்ணீயமெல்லாம் பேச ஆரம்பிக்கிறீங்கோ??!! ஆம்பளைங்கள சமைக்கப் படிக்கச் சொல்றீங்கோ??!!

சொன்னமாதிரி, இந்த ஃபோன்ல இவங்க தொலைக்கிற காசுதான் வய்த்தெரிச்சல். அதுவும் இந்த கல்யாணம் ஆகப்போறவங்க, 24 மணிநேரமும் ஃபோனும், சாட்டிங்கும்தான்!!

athira said...

ஜலிலாக்கா!!! இங்கே ”சுல்தான்” என்ற பெயரில் வந்திருப்பவர், எங்கட பழைய சுல்தான் அங்கிளோ? இல்லையெனில் மன்னிக்கவும் என்னை.

Jaleela said...

//ஜலிலாக்கா!!! இங்கே ”சுல்தான்” என்ற பெயரில் வந்திருப்பவர், எங்கட பழைய சுல்தான் அங்கிளோ? இல்லையெனில் மன்னிக்கவும் என்னை.//


//தெரிய வில்லை அதிரா அது அவரா சொன்னாதான் நமக்கு தெரியும்.//

Jaleela said...

அதிரா இப்ப தான் போய் பார்த்தேன் பிளாக்கை. அந்த சுல்தான் அங்கிள் இவரில்லை

அன்புடன் மலிக்கா said...

பேச்சிளர்சுகளின் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள் ஏராளம்தான். அதையெல்லாம்பொருத்துக்கொண்டி நம்மை தாங்கும் தாய்யுள்ளம் பொருந்திய அவர்களுக்கு ஒரு சபாஷ்.

பணம் படுத்தும்பாடு அது அங்கிருந்தா இங்கேயேன் அவர்களுக்கு இந்த கஷ்டம்.

கண்ணா.. said...

எங்களுக்காக குரல் கொடுத்த உங்களுக்கு நன்றி....

ஸ்டார்ட்டிங் நல்லா ஆரம்பிச்சு... சமையல், போன் அப்பிடின்னு ஃபினிஷிங்கில் வாரி விட்டீங்களே.....

இதுல தொடரும் வேறயா....

ஷாகுல் said...

//அங்க அங்க பிலிப்பைனி பிகருங்க இருப்பதால் கொஞ்சம் சுவையாக இருக்கு//

அதே தான்.

மனோ சாமிநாதன் said...

அன்பு ஜலீலா!

துபாய் வாழ்க்கையின் முக்கியமான பகுதியை ஆரம்பித்து விட்டீர்கள். மிக நன்றாகவும் எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
நானுமே இதைப்பற்றி விரிவாக எழுத நினைத்திருக்கிறேன். ஒரு பதிவு இதற்குப் போதாது. தொடருங்கள்!
36 வருடங்களாக இங்கு வாழ்ந்து வரும் நான் எத்தனை பேருடைய துன்பங்கள், சோகங்கள், சுமைகளைப் பார்த்திருக்கிறேன்! இது தொடர்கதை தானே தவிர முற்றும் போட என்றுமே முடியாது.

அதிரா!

விசுவின் அரட்டை அரங்கத்தை நீங்கள் நினைவு வைத்திருப்பதில் எனக்கு ஒரு பெருமை இருக்கிறது! அது எங்கள் ஸ்பான்ஸர்ஷிப்பில்தான் நடந்தது. மேடையில் நடுவராக என் கணவரும் அமர்ந்து பேசினார்கள். துபாய் வாழ்க்கைதான் தலைப்பு என்பதால் அரங்கம் நிறைந்த கூட்டம். அனைவருமே உணர்ச்சிவசப்பட்டு அமர்ந்திருந்தார்கள். ஏனென்றால் இங்கு ஒவ்வொருத்தரும் அனுபவிப்பது இந்த வாழ்க்கையைத்தான்.

asiya omar said...

ஜலீ,அருமையான தொடர்,கரண்டி மட்டும் பிடிக்க தெரிந்த தாங்களா? இப்படி எல்லாம் கலக்குவது.அடக்கம் ஆன்ற பெருமை தரும்.

athira said...

ஜலீலாக்கா மிக்க நன்றி. பெயர் பார்த்ததும் பழைய பாசம் பொந்துக்கொண்டு வந்துவிட்டது எனக்கு அதுதான் கேட்டேன். கொஞ்ச நாட்கள் பழகினாலும், மிகவும் அன்பாகப் பழகியவர்களில் அவரும் ஒருவர்.

ஓ.. மனோ அக்கா.. எனக்கு அப்போது தெரியாமல் போச்சே... இப்போ முகங்கள் எதுவும் நினைவிலில்லை, ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் மிகவும் அருமையாக உண்மையான உணர்வோடு பேசியவை மட்டும் அப்படியே மனதில் உள்ளது, மறக்க முடியாதது.

Ammu Madhu said...

உங்களுக்கு ஓர் விருது என் ப்ளாக்கில் உள்ளது கீழே உள்ள லிங்க்கை பார்க்கவும்.


http://ammus-recipes.blogspot.com/2010/03/blog-post_25.html

ஹைஷ்126 said...

சூப்பர் கவிதை.

ஹைஷ்126 said...

உண்மைதான் அதனால்தான் இந்த 5 வருடங்களில் அடுத்தவருக்கு உதவியாக மாறிவிட்டேன்.

வாழ்க வளமுடன்

Jaleela said...

ஸ்டார்ஜன் வலை சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதில் ரொம்ப சந்தோஷம்.நன்றி

Jaleela said...

ஜெய்லானி நான் தான் முன்பே சொல்லிட்டேனே நான் சாதாரண பெண், நேரில் பார்க்கும் சம்பவஙக்ளை தான் எழுது கிறேன். எவ்வளவு பட்ட்ம் தான் கொடுப்பீர்கள்,

Jaleela said...

அதிரா இதை பற்றி விளக்கமாக எழுத ஒரு பதிவு போதாது,அது ஒரு தொடர் எழுத நிறைய இருக்கு, பரவாயில்லையே விசுவின் அறட்டை அரஙக்மும் நினைவு வைத்து இருக்கீங்க‌

Jaleela said...

ஸாதிகா அக்கா நீங்கள் சொல்வது சரிதான் நல்ல வேலை உயர் பதவியில் இருப்பவர்கள் வாழ்க்கையை இன்பமாய் உச்சாணீயில் அமர்ந்து அனுபவிக்கிறார்கள்.

நான் நடுத்தர வர்கத்தினரை பற்றி பேசுகிறேன்.

Jaleela said...

ஆமாம் சீமான் கனி இதா நிஜம் இதான்நடக்கிரது
புறா கூண்டில் மாட்ட்ட வில்லை யா? ரொம்ப நல்லது

Jaleela said...

விக்கி இரண்டு ஜலீலாவும் நான் தான் உங்களுக்கு தான் தமிழ் எழுத்துதவி லின்க் அதில் இருந்து தானே கொடுத்தேன்.

Jaleela said...

பனித்துளி சங்கர் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி, பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வருகை தந்தது மிக சந்தோஷம்

Jaleela said...

சுல்தான் அங்கிள் வரகைக்கு ரொம்ப சந்தோஷம். ம்னதில் பட்டதை எழுதி இருக்கேன்.அவ்வளவு தான். பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வருஅகை தந்தது ரொம்ப சந்தோஷம். கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela said...

ஆமாம் தேனக்கா? இதில் சாதாரனா வேலையில் இருக்கும பல பேர் உடைய கழ்ட்டங்கள், வருகைக்கு மிக்க நன்றி

Jaleela said...

சைவ கொத்து பரோட்டா மிக்க நன்றி

Jaleela said...

சகோ.ஜமாலும் ஒரு பெரிய ஹெட் குக்கா, ஆத்தி இத்தனை நாள் தெரியாம போச்சே.. இனி உஷாரா சமைக்கனும்.

Jaleela said...

துலாபரம் வாங்க உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி,

ஆமாம் முகம் தெரியாத புது இடத்தில் மாட்டி கொன்டு எத்தனை பேச்சுலர்ஸ் அவஸதை படுகிறார்கள்;

Jaleela said...

வடுவூர் குமார் உங்கள் முதல் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
ஆமாம் கொஞ்சமாவது சமைக்க தெரிந்திருந்தால் ஓரளவிற்கு சமாளித்து கொள்ளலாம்.

Jaleela said...

ஹுசைன்னாம்மா நல்லா போய்ட்டு இருக்கு நீங்க எடுத்து கொடுத்துட்டீங்களா ஹா ஹ , ஆமாம் போனில் தான் அதிகமாக சம்பளம் முழுவதும் போகுது.

Jaleela said...

கண்ணா வருகைக்கு மிக்க நன்றி,

எல்லாத்தையும் தானே எழுதனும்,இபப் பேச்சுலர்கள் தான் 25 பேருக்கு என்றாலும் சலைக்காமல் ஆக்கி கலக்குறாங்க.

Jaleela said...

மலிக்கா அவர்களுக்கு, அன்கும் நெருக்கடி, இங்கும் நெருக்கடி, பேச்சுலர்கலுக்கு ரெஸ்பான்ஸிபுல் அதிகம்,அவர்களை நம்பி வந்தவர்களை காப்பாத்தானும் இது போல் பொருபபுகள் அதிகம்/

Jaleela said...

ஷாகுல் இந்த பிலிப்பனைங்க தான் எங்க பார்த்தாலும் இளசுகலை களைத்து கொண்டு இருக்கிறார்கள். வருகைக்கு மிக்க நன்றி

Jaleela said...

மனோ அக்கா வாங்க இதை நீங்கள் எழுதினால் இன்னும் நல்ல இருக்கும்.

Jaleela said...

ஆசியா என் பதிவு களை தவறாமல் ஊக்குவிக்கு தோழி நன்றி

Jaleela said...

அம்மு எப்படி இருக்கீங்க நேரமின்மையால் சரியாக பிளாக் பக்கம் வரமுடியல.

எனக்கு விருதா மிக்க நன்றி + சந்தோஷம்.

Jaleela said...

சகோ.ஹைஷ் வெகு நாட்களாக ஆளை கானும் வருகை தந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, அபப் நீங்களும் ஒரு கிரேட் குக் இல்லையா?

Jaleela said...

அதிரா நானும் அப்ப்டி தான் நினைத்தேன்

சுல்தான் said...

//ஜலிலாக்கா!!! இங்கே 'சுல்தான்' என்ற பெயரில் வந்திருப்பவர், எங்கட பழைய சுல்தான் அங்கிளோ? இல்லையெனில் மன்னிக்கவும் என்னை.//

நான் அவனில்லை சே.... அவரில்லை.
அட இதுக்ககெல்லாமா மன்னிப்பு?

சசிகுமார் said...

ரெண்டு நாள் அக்கா பக்கம் வரல அதுக்குள்ள அக்கா டாபிக்கையே மாதிடாங்களே, இருந்தாலும் நன்றாக இருக்கிறது அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

ஹலோ , எப்பபாத்தாலும் எனக்கு கரண்டி தான் புடிக்க தெரியும் வேற எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டு அப்பப்ப பின்னி பெடலேடுகுரிங்க , கவிதா (சே.... தூ.......)
டங்கு சிளிபாயிடுச்சு , கவிதை மட்டும் தானே காபி , மத்த மேட்டார் எல்லாம் உங்கது தானே , இனிமே இனக்கு கரண்டி மட்டும் தான் புடிக்க தெரியும்னு சொன்னிங்க , அப்புறம் நானே சொந்தமா ஒரு டீ போட்டு பார்சல்ல அனுப்புவேன் பாத்துகுன்ங்க .

பித்தனின் வாக்கு said...

.டாக்டர் ஜலீலா --அட நல்லாதான் இருக்கு))

முன்னாடி போலின்னு போட்றலாமா ஜெய்லானி.

பித்தனின் வாக்கு said...

நல்லா சொல்லியிருக்கீங்க. பிலிப்பைனேஸ் இல்லாத இடமே இல்லையா?. கூட்டாஞ்சோறு கதை மிகவும் அருமை. காதல்,சோகம்,துக்கம் எல்லாம் சக நண்பர்களுக்கு இடையில். இதுவும் ஒரு வாழ்க்கைதான். நன்றி.

Chitra said...

அசத்தல்!

அக்கா, நீங்க கை வைக்காத டாபிக் ஒண்ணு சொல்லுங்க.

Vijis Kitchen said...

ஜலீ சுப்பர பதிவு. நான் இதை எழுதனும் என்று நினைத்திருந்தேன். நிங்க எழுதிட்டிங்க. மேலும் தொடருங்க. இங்கும் அதே கதை தான். என்ன ஒன்று இங்கு சுதந்திரம் உண்டு. மற்றவை எல்லாம் அதே.

மங்குனி அமைச்சர் said...

// Chitra said...

அசத்தல்!

அக்கா, நீங்க கை வைக்காத டாபிக் ஒண்ணு சொல்லுங்க.//

அட நீங்க வேற நாள்ல ஏத்தி விடுங்க மேடம், ஏற்கனவே துபாய்ல இருக்கா எல்லா "மால்"லையும் கை வச்சாச்சு, அவுக வூட்டு காரு இப்போ பர்ஸ கூட பேங்க் லாகர்ல தான் வைக்குராராம் , அவுக புள்ளிக கூட உண்டியல அவுக தாத்தா, பாட்டிட்ட குடுத்து வச்ருக்காகலாம் , இது பத்தாதுன்னு இன்னும் கை வைக்க சொல்ரிக்க

மங்குனி அமைச்சர் said...

//பித்தனின் வாக்கு said...

.டாக்டர் ஜலீலா --அட நல்லாதான் இருக்கு))

முன்னாடி போலின்னு போட்றலாமா ஜெய்லானி.//

என்னா சார் வுட்டா ரொம்பதான் நக்கல் பன்னுரீக , டாக்டர் என்னா சார் பெரிய டாக்டர் நாங்க அவுங்களுக்கு டபுள்டாக்டர் , டைரடக்கர் , இஞ்சினியர் , கேசியர் , கொரியர் ,........ அப்படீன்னு ஏகப்பட்ட பட்டம் குடுத்து வச்சுருக்கோம் , மேடம் எல்லா பட்டதையும் ஸ்கேன் பண்ணி நம்ம பித்தன் சாருக்கு அனுப்பி வைங்க

Jaleela said...

சசி குமார் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela said...

//அப்புறம் நானே சொந்தமா ஒரு டீ போட்டு பார்சல்ல அனுப்புவேன் பாத்துகுன்ங்க ./

டீயா கண்டிப்பா பார்சல் அனுப்புங்க

Jaleela said...

ஆஹா பித்தனும், அமைச்சரும் சேர்ந்துட்டாங்க பா கும்முவதற்கு..

Jaleela said...

/அட நீங்க வேற நாள்ல ஏத்தி விடுங்க மேடம், ஏற்கனவே துபாய்ல இருக்கா எல்லா "மால்"லையும் கை வச்சாச்சு, அவுக வூட்டு காரு இப்போ பர்ஸ கூட பேங்க் லாகர்ல தான் வைக்குராராம் , அவுக புள்ளிக கூட உண்டியல அவுக தாத்தா, பாட்டிட்ட குடுத்து வச்ருக்காகலாம் , இது பத்தாதுன்னு இன்னும் கை வைக்க சொல்ரிக்க//

அமைச்சருக்கு தான் இப்படி எடக்கு மடக்கா யோசிக்கவும் கேள்வி கேட்கவும் தோனும்... சித்ரா சொன்ன ஒரு வார்த்தய வச்சி என்னாமா மாத்தி மாத்தி பின்னுறீக..
அட உங்களுக்கு எப்படி தெரியும் பேங்க் லாக்காருல கை வச்சதேல்லாம் அடுத்ததா அபுதாபி ஷேக் வீட்டல கை வைக்கப்பிளான் பன்றோம்....

Jaleela said...

விஜி ஆம எல்லா ஊரிலும் இப்படிதான் வீட்டுக்கு வீடு வாசப்படி.... என்பது போல்

Jaleela said...

என்ன தொப்பையானாந்த என்ன போலி டாக்டரா/ சந்தடி சாக்குல மசல ரொம்ப நாளா சொல்ல வந்தத சொல்லிட்டீங்க.

Jaleela said...

சித்ரா நீங்க சொன்ன ஒரு வார்த்தைய பிடிச்சிக்கிட்டு மங்குவும், தொப்பையானாந்தாவும் பேசர பேச்ச பாருங்க.

ஜெய்லானி said...

யோவ் மங்கு ,எங்கையாவது போனா சொல்லிட்டு போய்யா? கும்மி அடிக்கிற எடம் இது இல்ல!!

ஜெய்லானி said...

மங்குவை ஆசியாஉமர் பிளாக்கில் அரெஸ்ட் பண்ணியாச்சு அவங்க பப்ளிஷ் பன்னும்போது பாருங்க.ஆடு மாட்டிகிச்சு. எனக்கு தலை உங்களுக்கு வேண்டியதை ஆர்டர் குடுங்க!!

R.Gopi said...

ஜலீலா மேடம்...

சமையல் மட்டுமல்ல... எழுதும் எந்த விஷயத்திலும் நீங்கள் கலக்குகிறீர்கள்...

அதற்கு இந்த பதிவு இன்னொரு சான்று... பேச்சலர்ஸ் வாழ்க்கையின் நிதர்சனத்தை புட்டு புட்டு வைத்துள்ளீர்கள்... கூடவே பொருத்தமாக அந்த கவிதை...

எனக்கு அந்த சமையல் பாக்கியம் கிடைக்கவில்லை... கிடைத்திருந்தால், உங்கள் ரெசிப்பி செய்து பார்த்திருக்கலாம்...

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதாகவே வாழ்க்கை ஓடுகிறது...

பொருள் தேடும் பொழுதில், வாழ்வின் எத்தனையோ விஷயங்களை இழக்கும் கோடானு கோடி பேச்சலர்ஸில் நானும் ஒரு துளி.

Jaleela said...

அப்பாடா மங்குக்கு சரிசமமா பேச ஜெய்லானியால் தான் முடியும், ஆசியா அரெஸ்ட் பண்ணிட்ட்டாங்கலா?

அப்ப எந்த சிறை..23 ஆம் புலிகேசியா?

Jaleela said...

கோபி நீங்கள் சொல்வது சரி தான் உங்களை போல் பல பேச்சுலர்களை மனதில் கொண்டு தான் இதை எழுதினேன், எழுத இன்னும் நிறைய இருக்கு.
என்ன செய்வது, வாழ்க்கை என்னும் ஓடம் ஓடனுமே.

நாஞ்சில் பிரதாப் said...

அடடா ஜலீலாக்கா எப்படி இந்தபதிவுகள் என் கண்ணுலேருந்து தப்பிப்போகுது...

கவிதை சூப்பர்...இது நீங்க எழுதுனதுன்னு ஒத்துக்கோங்க...ஏன் கூச்சப்படறீங்க...

நாஞ்சில் பிரதாப் said...

துபாய்ல பேச்சலர் வாழ்க்கையை அப்படியே சொல்லிட்டீங்க...எப்படி எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுருக்கீங்க-???

அது ஏன் இடைல பிலிப்பைனி பிகரு பத்தி சொல்லிருக்கீங்க...இதுல ஏதும் உள் குத்து இல்லயே-???

நான் சமைக்கிறது இல்லை ஜலீலாக்கா... ஒருதடவை முயற்சி பண்ணேன் சாம்பார் வச்சா ரசமாயிடுச்சு.. நான் சமைச்சு நானே சாப்படற அளவுக்கு தைரியம் இல்ல...எதுக்கு ரிஸ்க்கு ஓட்டல் ஜிந்தாபாத்

Jaleela said...

நாஞ்சிலாரே நீங்க மெட்டை மாடியில நின்னு பிகர பார்த்து கொண்டு இருந்தா இதெல்லாம் கண்ணில் படுமா?

ஏன் ஹோட்டல் ஜிந்தாபாத், நிறைய பிலாக்கர்கள் ஈசியான குறிப்பு போடுகிறார்கள் செய்து பார்க்கலாமே?

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

எழுதியது அத்தனையும் எங்கள் அறையில் நடப்பது போன்ற உணர்வு.

//ஆங்காங்கே பிலிப்பைனி பிகருங்க இருப்பதால் கொஞ்சம் சுவையாக இருக்கு. //

மேலே இருப்பத தவிர.

கவிதை நன்றாக இருக்கு சகோ.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா