இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலங்களில் செய்யபடும் கஞ்சியின் ருசியே தனி தான், அதை விதவிதமாக செய்யலாம். சிக்கன் , மட்டன் , பீஃப், காய்கறி கஞ்சி என்று. எல்லாருக்குமே இதை சுவைத்து பார்க்கனும் என்று ஆசை தான். இனி அசைவம் சாப்பிடாதவர்களும் சுவைத்து மகிழலாம். இதற்கு சூப்பர் காம்பினேஷன் பருப்பு வடை தான் , இங்கு உள்ள பருப்பு வடை கடலை பருப்பை மிஷினில் கொடுத்து ஒன்றும் பாதியுமாய் உடைத்து வாங்கி செய்தது,
ரமலான் ஸ்பெஷல் சைவ நோன்பு கஞ்சி
நொய் - அரை டம்ளர் ( 100 கிராம்)
இரண்டு மேசை கரண்டி - பாசி பருப்பு
ஒரு மேசை கரண்டி - கடலை பருப்பு
ஒரு மேசை கரண்டி - பர்கல் (தேவைப்பட்டால்)
ஒரு மேசை கரண்டி - ஜவ்வரிசி
அரை தேக்கரண்டி - வெந்தயம்
மேலே குறிப்பிட்டவைகளை கஞ்சி செய்ய ஆரம்பிக்கும்முன் களைந்து ஊறவைத்து விடுங்கள்.
தாளித்து வேக வைக்க
எண்ணை - முன்று தேக்கரண்டி
கேரட்
பட்டாணி
முட்டை கோஸ்
பீன்ஸ்
சின்ன வெங்காயம் - 10 எண்ணிக்கை
பெரிய வெங்காய்ம் - 1
பூண்டு - 10 எண்ணிக்கை
தக்காளி - 1
பச்ச மிளகாய் - 2
பட்டை லவங்கம் ஏலம் - தலா 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கடைசியாக தாளிக்க
எண்ணை + நெய் - இரண்டு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஆறு எண்ணிக்கை
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு சின்ன கொத்து
கொத்து மல்லி தழை - கைக்கு ஒரு கொத்து
கேரட்டையும் முட்டை கோசையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
தக்காளி வெங்காயத்தையும் அரிந்து வைத்து கொள்ளவும்
ஒரு பெரிய சட்டியை அடிப்பில் வைத்து எண்ணை ஊற்றி காயவைத்து பட்டை கிராம்பு ஏலம் போட்டு பொடிய விடவும், கருவேப்பிலை பூண்டு சேர்த்து தாளிக்கவும்
பிறகு சின்ன வெங்காயம் , பெரிய வெங்காய்ம், சேர்த்து நன்கு வதக்கவும்,
அரிசி பருப்புவகைகள் எல்லாம் சேர்த்து ஒன்னறை கப்இருக்கும்
அதுக்குமுன்று மடங்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
நன்கு கொதி வந்ததும் ஊறவைத்த அரிசி பருப்புகளை சேர்த்து நன்குகிளறவும்
அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விட்டு கொள்ளவும், சிறிது கொத்து மல்லி தழை சேர்த்து கொதிக்க விட்டு அரிசி பருப்பு வகைகளை வேக விடவும்.
கடைசியாக எண்ணை + நெய் விட்டு சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கொத்துமல்லி கருவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சி யில் கொட்டி மீண்டும்கொதிக்க விட்டு இரக்கவும்.
சுவையான சைவ நோன்புகஞ்சி ரெடி
இதில் காய் கறிகள் உங்கள் விருப்பப்படி புரோக்கோலி, உருளை,காலிபிளவர் இது போல் சேர்த்து கொள்ளலாம்.
மஷ்ரூம் சேர்த்தும் செய்யலாம்.
How to make Veg nonbu kanjsi
How to make Rice with veg Soup
Step By Step Veg Soup
ரமலான் ஸ்பெஷல் சைவ நோன்பு கஞ்சி
நான் நோன்பு காலங்களில் இடை இடையில் இப்படி சைவ நோன்பு கஞ்சியும் தயாரிப்பேன்.
கீழே பல வகை நோன்பு கஞ்சி யின் லிங்க் இருக்கிறது சுட்டிகளை சொடுகிபார்க்கவும்
http://samaiyalattakaasam.
டயட் நோன்பு கஞ்சி
ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
Tweet | ||||||
21 கருத்துகள்:
அட்டகாசமான செய்முறை படங்களுடன்... நன்றி சகோதரி...
அட்டகாசமான செய்முறை படங்களுடன்... நன்றி சகோதரி...
ஜலீலாக்கா, கஞ்சி சூப்பர்! காய்களை அழகா நறுக்கி வைச்சிருக்கீங்க..அதிலும் முட்டைக்கோஸ் நூல் போல நறுக்கிருக்கீங்க..எப்படி? எப்படி? எப்படி?? :))
இது ப்ரெஷ்ஷர் குக்கர்ல செய்யலாம்தானே..அரிசி நொய்க்கு பதில் புழுங்கலரிசி சேர்த்து செய்யலாம்தானே? செய்வதற்கு ஆசைப்பட்டு கேள்வில்லாம் பலமா கேட்கிறேன். செய்ய வாய்ப்பு கிடைக்குமான்னு என் பொண்ணுகிட்டத்தான் கேட்கணும்! ஹிஹி..! ;) :) ரெசிப்பிக்கு நன்றி!
என் அன்பு ஜலிலா. மனம் நிறைந்த நன்றிகள். பார்க்கவே ருசியாக இருக்கிறதுமா. எத்தனை பொருட்கள் சேர்க்கிறீர்கள். வெறுங்கஞ்சியாகச் சாப்பிடு வந்தவளுக்கு இது ஒரு சாப்பாடாகவே அமையும் போல. அதுவும் இங்கே ப்ரௌன் ரைஸ் குறுணையே கிடைக்கிறது. கண்டிப்பாகச் செய்து மகளுக்கும் கொடுக்கிறேன். இறைவனுக்கு நன்றி. உங்கள் நோம்பு சிறக்கவும் வாழ்த்துகள்.
வாவ்! ரொம்பநாள் ஆசை நாளைக்கு நிறைவேறப்போகுது! கஞ்சி செய்து குடிச்சுட்டு, வந்து சொல்றேன்!
இனிய நோம்புகாலத்திற்கான வாழ்த்து(க்)கள் ஜலீலா.
பர்கல் என்றால் என்ன ஜலி?
கடலை பருப்பை மெஷினில் கொடுத்தா திரிப்பீர்கள்?ஊற வைத்து கொரகொரப்பாக அரைக்கலாமே?
நான் இங்கு வடைக்கு பட்டாணி பருப்பு உபயோகப் படுத்துவேன்.
ரெஸிப்பி அருமை.நானும் அசைவம் சாப்பிடாத நட்புக்களுக்காக அவ்வப்பொழுது சைவ நோன்புகஞ்சி தயாரிப்பது உண்டு.
Very nice.
நோன்புக் கஞ்சி அருமை... படங்களுடன் விளக்கம் சூப்பர்...
..நான் இங்கு வடைக்கு பட்டாணி பருப்பு//
aam niingka arusuvaiyil sonnathil iruwthu naanum pattaani paruppu thaan vaangkukiRen
sila neeram kadalai paruppau
avasaraththukku kadalai paruppu podithththathu..
சுவையான கஞ்சி. செய்து பார்க்கிறேன். நோன்பு சிறக்க வாழ்த்துகள்.
தனபாலன் சார் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
மகி நான் கிரேட்டரில் தான் கிரேட் செய்தேன்.
ஆமாம் பிரஷர் குக்கரில் செய்யலாம்.
அரிசி நொய்யிக்கு பதில்
புழங்கலரிசி நொய்யும் போடலாம்.
வாய்ப்பு கிடைத்தால் செய்து பாருங்கள்.
அதன் சுவையை இங்கு வந்து பகிருங்கள்.
வருகைக்கு மிக்க நன்றி மகி
வல்லி அம்மா, இத்தனை பொருட்கள், நாள் முழுவதும் நோன்பு இருந்து மாலை சாப்பிடும் போது இந்த கஞ்சி யை ஒரு பவுள் சாப்பிட்டால் எல்லா களைப்பும் பறந்துடும்.
//உங்கள் நோம்பு சிறக்கவும் வாழ்த்துகள்./
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. வல்லி அம்மா
வாங்க துளசி அக்கா, நோன்பு கஞ்சி என்றாலே அது சுவை அலாதி, இது நான்வெஜ்ஜில் இருப்பதால் வெஜ் சாப்பிடுபவர்களுக்கு செய்ய வாய்ப்பில்லாமல் போகிறது, மட்டன் சிக்கன் சேர்த்து தான் செய்யனும் என்றில்லை, இதை சுவையாக பல வகை வெஜிடேரியன் வகைகளிலும் செய்யலாம்.
//இனிய நோம்புகாலத்திற்கான வாழ்த்து(க்)கள் ஜலீலா.//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி துளசி அக்கா
ஸாதிகா அக்கா பர்கல் என்பது ப்ரவுன் அரிசி இங்கு குருனை போல் கிடைக்கிறது, அதன் சுவை நம்மூரில் சத்துனவு கூடங்களில் போடும் அரிசியின் போல் இருக்கும்,
கடலை பருப்பு ஒரு அவசரத்துக்கு கொர கொரப்பாக திரித்து வைத்து கொள்வேன், அதாவது, கஞ்சிக்கு அரிசி நொய் செய்வது போல். இது நினைச்சதும் , உடனே கடலை பருப்புவேண்டும் என்றால் திரித்த பருப்பை வென்னிரில் ஊறவைத்து அரை மணி நேரத்திற்குள் மற்ற தேவையான பொருட்களை சேர்த்து பிசறி வடை சுட்டு விடலாம்.
ஆமாம் ஸாதிகா அக்கா நீங்க அறுசுவையில் பட்டாணி பருப்புன்னு சொன்னதில் இருந்து சில சமயம் பட்டாணி பருப்பிலும் வடை செய்கிறேன்.
பர்ஹானா வருகைக்கு மிக்க நன்றி
சே குமார் உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி
ஆதி வெங்கட் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..
அருமை ஜலீலா. விழாக்கால வாழ்த்துகள்!
அருமை ஜலீலா. விழாக்கால வாழ்த்துகள்!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா