Saturday, July 30, 2011

ஸ்வீட் கார்ன் சிக்க‌ன் சூப் - sweet corn chicken soup


//ஹோட்டல்களில் சென்றுதான் ஸ்விட் கார்ன் சிக்கன் சூப் குடிக்கனுமா, ஏன் நாமே செய்யலாமே இதை செய்து நீங்கள் பழகிவிட்டால் ஹோட்டலில் குடிக்கும் சூப் உங்களுக்கு பிடிக்காது. வீட்டிலேயே செய்ய‌ க‌த்து கொண்டால் பார்டிக‌ளில் அச‌த்த‌லாம்.
நோன்பு காலங்களில் தினம் கஞ்சி குடிப்பதற்கு பதில் இதை செய்து குடிக்கலாம். குளிர் காலங்களில் அடிக்கடி சளி பிடிக்கும் அதற்கும் இது ரொம்ப நல்லது.//



தேவையான பொருட்கள்

சிக்கன் = நான்கு பெரிய துண்டு எலும்புடன்
மேகி சிக்கன் கியுப் ‍= ஒன்றில் பாதி
கீரீம் ஆஃப் சிக்கன் சூப் பவுடர் = ஒரு பாக்கெட்
கீரீம் ஆஃப் ஸ்வீட் கார்ன் - ஒரு டின்
பட்டர் ‍ ஒரு = மேசைக்கரண்டி
கார்ன் பிளார் பவுடர் ‍ ஒரு குழி கரண்டி
உப்பு - தேவைக்கு
சோயா சாஸ் ‍= ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் ‍ = ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் ‍= ஒரு தேக்கரண்டி
முட்டை = ஒன்று









செய்முறை


1. முதலில் சிக்கனில் மேகி கியுப்,உப்பு ஒரு தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ் சிறிது, போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
2. வெந்ததும் வடிகட்டி சிக்கன் துண்டுகளை எலும்பில்லாமல் பிரித்தெடுக்கவும். சிக்கன் வடிகட்டிய தண்ணீரை கொதிக்க விடவும்.
3. தனியாக சிக்கன் சூப் பாக்கெட்டை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொதித்துக்கொண்டிருக்கும் சிக்க்ன் தண்ணீரில் ஊற்றவும்.
4. பிறகு கார்ன் டின்னை ஊற்றவும்.
5. பிறகு பிரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை உதிர்த்து போட்டு மீண்டும் கொதிக்கவிடவும்.
6. பிறகு கார்ன் பிளார் மாவை கால் டம்ளர் கரைத்து ஊற்றவும்.
7. கடைசியில் ஒரு முட்டையை நுரை பொங்க அடித்து ஒரு கையால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொண்டே கிளறவும். கிளறி அடுப்பை அனைக்கவும்.
8. பிறகு உப்பு , ஒரு தேக்கரண்டி பெப்பர் தூள்,ஒரு டிராப் சோயாசாஸ் , ஒரு மேசைகரண்டி பட்டர் ஊற்றி இரக்கவும்








குறிப்பு:


இதற்கு கட்லட் சூப்பர் காம்பினேஷன். மற்றபடி சிக்கன் பஜ்ஜி, பகோடா,பஜ்ஜி, வடை, சிக்கன் போன்டா வும் செய்யலாம் ரொம்ப கட்டியாகி விட்டால் பார்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பார்டிகளுக்கு செய்யலாம். நோன்பு காலங்களில் தினம் கஞ்சி குடிப்பதற்கு பதில் இதை செய்து குடிக்கலாம்.லைட்டாகவும் ஹெல்தியாகவும் இருக்கும். குளிர் காலங்களில் அடிக்கடி சளி பிடிக்கும் அதற்கும் இது ரொம்ப நல்லது.இதை வீட்டில் உள்ள‌ பொருட்க‌ளை வைத்து எளிதாக‌ வேறு முறையில் த‌யாரிக்க‌லாம்.



ரூ ஆப்ஷா கடல் பாசி Rooapsha agar agar

மசாலா சாய் Masala chay

ரோஸ் மில்க் |Rose milk

கேரட் ஜூஸ் Carrot juice

சிக்கன் ஸ்பிரிங் ரோல் Chicken Spring Roll

ஸ்பினாச் வடை Spinach Vadai

ஈத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி Eid Special Mutton Biriyani

சிக்கன் பிஸ்ஸா தோசை Chicken Pizza Dosai

I am sending all the recipe toUmm Mymoonah's Iftar moment event.


 Sweet corn chicken soup recipe  I am sending to reva's corn for dinner event.
பதிவுலக தோழ தோழியர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

புனித ரமளானே வருக - முத்தான துஆவுக்கு வாருங்கள்
நேரமின்மையால் பழைய பதிவுகள் தான் மீள் பதிவு முடிந்தால் புதுப்பதிவு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டிஸ்கி: நான் இவ்வளவு கழ்டபட்டு பதிவு போடுகிறேன் படிச்சிட்டு கண்டுக்காம போன எப்பூடி என் பதிவுகள் கண்டிப்பாக எல்லோருக்கும் பயனுள்ளது தான் நிறைய பேர் முக்கு சந்தில் கடை போட்டுள்ளது தெரியும். ஒரு வார்த்தை பின்னூட்டம் இடலாமே, இல்லை ஓட்டாவது போடலாமே.

22 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

ஆகா சூப்பர் சூப் ரெடி

Jaleela Kamal said...

வாங்க வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ
செய்து பாருங்கள் ஹோட்டலில் சாப்பிடுவது போலவே இருக்கும்

அதிரை அபூபக்கர் said...

ஆகா சூப்பர் சூப், அதற்கு காம்பினேசன் பஜ்ஜியும் கூட இன்னும் சூப்பர்...

Jaleela Kamal said...

அதிரை அபூபக்கர் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி,

அது கூட பஜ்ஜி இல்லை பகோடா.

Menaga Sathia said...

சூப்பர் சூப் ஜலிலாக்கா!!

Jaleela Kamal said...

நன்றி மேனகா

my kitchen said...

kids will like this very much,nice soup

Jaleela Kamal said...

ஆமாம் பிரியா குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தது, கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

இராஜராஜேஸ்வரி said...

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

அனைவருக்கும் பிடித்த சூப்.

ஜெய்லானி said...

ரீ போஸ்டா சூப்பர் :-)


அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

Vimitha Durai said...

Simple yet yummy soup... Nice one..

athira said...

ஜலீலாக்கா... உங்கட இக்குறிப்பு “அங்கு” பார்த்து, நான் செய்து சாப்பிட்டிருக்கிறோம் சூப்பர்.

ரமலான் ஆரம்பித்துவிட்டதோ? எப்போ? முடிவு எப்போ?.

ஜலீலாக்கா உங்களையும் 3 நொட்ஸ்:)(மூன்று முடிச்சு) தொடருக்கு அழைத்திருக்கிறேனே... முடிஞ்சால் தொடருங்கோ.

zumaras said...

ஸலாம் சகோதரி
அருமையான ரெசிப்பி
ரமழான் முபாரக்

'பரிவை' சே.குமார் said...

ஆகா... ஆகா...
சூப்பர் சூப்.

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நல்ல குறிப்பு தான்... தேவையான பொருள் பேரு தான் ரொம்ப கஷ்ட்டமா இருக்கு :)

ரமலான் வாழ்த்துக்கள் அக்கா

Reva said...

Super soup akka.... romba nalla irukku:) Ramalaan vaazhthukal:)
Reva

சாந்தி மாரியப்பன் said...

சூப்பர் சூப்.. :-)

Umm Mymoonah said...

Soup looks super, also thank you for sending all these delicious recipes to Iftar Moments :)

Jaleela Kamal said...

இராஜ ராஜேஸ்வரி உங்கள் ரமளான் வாழ்த்துக்கு மிக்க நன்றி

நன்றி ஸாதிகா அக்கா

நன்றி ஜெய்லானி

நன்றீ விமிதா

அதிரா தொடர் பதிவு மெதுவா தான் எழுதுவேன் இது மூளைய கசக்கி எழுதனும்..

சலாம் நன்றி ஜுமாராஸ்

Jaleela Kamal said...

தொடர் வருகைக்கு மிக்க நன்றீ சே.குமார்

வா அலைக்கும் சலாம் ஆமினா தேவையான் பொருட்கள் பெரிய பெரிய டிபாட்மெண்டல் ஸ்டோர்ஸில் கிடைக்கும் , இது இல்லாமல் சிம்பிளாகவும்செய்யாலாம் அதை கூடிய விரைவில் போடுகீறேன்.

Jaleela Kamal said...

உங்கள் ரமளான் வாழ்த்துக்கு மிக்க நன்றி ரேவா

நன்றி அமைதி சாரல்

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி உம்மு மைமூன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா