Monday, August 31, 2009

பிரியாணி கஞ்சி, நோன்பு கஞ்சி 3வெளிநாடுக‌ளில் பேச்சுல‌ர்க‌ள் செய்யும் போது நிறைய‌ பேருக்கு செய்வார்க‌ள். அப்போது குக்க‌ரில் செய்ய‌ முடியாது.
சிறிய பேமிலி என்றால் குக்கரில் செய்யலாம் ஆனால் நிறைய பேருக்கு என்கிற போது கறி கீமாவை தனியாக தாளிக்கனும், அரிசியை தனியாக வேகவிடனும்.இது டபுள் மசாலா கொடுத்து பிரியாணி போல் தாளித்து செய்வது.

தேவையான பொருட்கள்

மட்டன் கீமா = 300 கிராம்
அரிசி நொய் = 3 டம்ளர்
பச்ச பருப்பு = அரை டம்ளர்
வெங்காயம் = நான்கு
தக்காளி = முன்று
பச்ச மிளகாய் = முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = முன்று மேசை கரண்டி
கேரட் = இரண்டு
கொத்து மல்லி = அரை கைபிடி
புதினா கால் கைபிடி
தயிர் = இரண்டு மேசை கரண்டி
மிளகாய் தூள் = இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
எண்ணை முன்று மேசை க‌ர‌ண்டி
டால்டா = ஒரு தேக்க‌ர‌ன்டி
ப‌ட்டை = ஒரு அங்குல‌ம் அள‌வு
கிராம்பு = முன்று
ஏல‌ம் = ஒன்று
தேங்காய பால் = அரை மூடி


செய்முறை

1. அரிசி நொய் (நொய் மிக்சியில் பொடிக்க முடியவில்லை என்றால் அரிசியை ஊறவைத்து கையால் பினைந்து உடைத்து விடவும்) மற்றும் பாசி பருப்பு (வருத்தது) அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஒரு பெரிய வயகன்ற சட்டியில் ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீரை கொதிக்க விட்டு ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு குழைய வேக விடவும்.

3. கீமாவை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும், வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும். புதினா, கொத்து மல்லியை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வடித்து வைக்கவும்.தேங்காயை பாலெடுத்து வைக்கவும்.

4. இப்போது கீமாவை தனியாக தாளிக்கனும்.சட்டியை காயவைத்து எண்ணை + டால்டாவை ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயத்தை அரிந்து சேர்த்து வதக்கி, வெங்காயம் மடங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு வாடை போனதும் கொத்து மல்லி புதினா, தக்காளி, பச்ச மிளகாயை போட்டு வதக்கி சிறிது நேரம் தீயை சிம்மில் வைத்து வேகவிடவும்.

5. கேரட்டை பொடியாக அரிந்து சேர்த்து, கீமா, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிடவும்.பாதி வேகும் போடு தயிரை சேர்க்கவும்.கூட்டு ந‌ல்ல‌ வெந்து கிரிப்பாகி எண்ணை தெளிந்து வ‌ரும் போது இர‌க்கி விட‌வும்.
6. வெந்து கொண்டிருக்கும் அரிசியில் இந்த‌ க‌ல‌வையை சேர்த்து தேங்காய் பாலும் சேர்த்து அடி பிடிக்காம‌ல் ந‌ன்கு கிள‌றி கொதிக்க‌ விட்டு க‌டைசியாக‌ கொத்து ம‌ல்லி புதினா தூவி இர‌க்க‌வும்.

குறிப்பு:

இதே போல் சிக்க‌ன் கீமாவிலும் செய்ய‌லாம் இல்லை சிக்க‌ன் (அ) ம‌ட்ட‌னை பொடியாக‌ அரிந்து போட்டும் செய்ய‌லாம் அரிந்து போட்டு செய்யும் போது 400 கிராம் அள‌வு எடுத்து கொள்ள‌வும். க‌றி அதிக‌மா விரும்பாத‌வ‌ர்க‌ள் இதே அள‌வே போதும்.

பேச்சுல‌ர்க‌ள் பிரியாணி க‌ஞ்சி என்றில்லை சாதா க‌ஞ்சியையும் ம‌சாலா க‌ம்மியாக‌ போட்டு இதே போல் செய்ய‌லாம்.

வெஜிடேரியன்கள்வெஜ் க‌ஞ்சியும் இதே முறையில் க‌றி, சிக்க‌னுக்கு ப‌தில் (முட்டை கோஸ், கேர‌ட், பீன்ஸ், முழுபாசிப‌ருப்பு சிறிது சேர்த்து செய்ய‌லாம்)
ப‌ச்ச‌ ப‌ருப்புக்கு ப‌தில் க‌ட‌லை ப‌ருப்பும் போட‌லாம்.
இதே போல் லைட் ம‌சாலாவில் ப‌ச்ச‌மிளகாய் ம‌ட்டும் சேர்த்து ப‌ள்ளி வாச‌ல் க‌ஞ்சி போல் த‌யாரிக்க‌லாம்.

18 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

விதம் விதமா நிறைய டிஷ் போட்டு அசத்துறீங்க. சூப்பர்

Mrs.Faizakader said...

நவாஸ் அண்ணன் அவங்க சமையல் ராணி .சமையல் ராணி மட்டும் இல்லை அவங்களுக்கு தெரியாத விஷயமே இல்லை. இந்த ப்ளாகை பார்த்த பின்பு உங்களுக்கே தெரிந்திருக்குமே (allinalljaleela)
ஜலீலாக்கா இன்னுக்கு நானும் வீட்டில் பிரியாணிகஞ்சி தான் போட்டேன் ஆனால் போட்டோ எடுக்கல.

Ameena said...

ஹலோ ஜலீலாக்க,
என் பேர் ஆமினா.சவுதியில் இருக்கிறேன்.
உங்க டிப்ஸ் ரொம்ப சூப்பர். இன்னைக்கு நான் இதை ட்ரை பண்றேன்.

இப்படிக்கு,
ஆமினா

Ghani said...

நல்ல முயற்ச்சி நமது சமுதாயத்தில் இது போன்ற உணவு விசத்தில் காட்டும் அக்கரை கல்வி விசயத்திலும் வளர வேண்டும் உங்களின் இந்த வலைதளம் வளர வல்ல இறைவன் கருனை புரிவானாக‌


உதயகவி
இராமநாதபுரம்

Jaleela said...

//ஹலோ ஜலீலாக்க,
என் பேர் ஆமினா.சவுதியில் இருக்கிறேன்.
உங்க டிப்ஸ் ரொம்ப சூப்பர். இன்னைக்கு நான் இதை ட்ரை பண்றேன்.

இப்படிக்கு,
ஆமினா//
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும், மிக்க நன்றி.

டியர் ஆமினா மீன் டிப்ஸ், இடியாப்பம் வதக்கல் கொஞ்ச்ம வேலையா இருக்கு, முடிந்தால் இன்று (அ) நாளைக்குள் எல்லாத்துக்கும் பதில் தரேன்.

seemangani said...

ரெசிபி வாசிக்கும்போதே...
சாப்டனுபோல இருக்கு....
ஆனால் எனக்கு இது ரெம்ப டைம் வேணும் போல...
நன்றி அக்கா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்க வளமுடன்!!

Jaleela said...

நன்றி நவாஸ் , சிலருக்கு இந்த பிரியாணி கஞ்சி ரொம்ப பிடிக்கும் அதான் இதை போட்டேன், வெளிநாடுகலில் பேச்சுலர்ஸ் 20 பேருக்கு செய்வார்கள் இது ஒரு 18 பேர் சாப்பிடலாம். குறிப்பில்குறிப்பிட மறந்து விட்டேன்.பாயிஜா ஏதோ எனக்கு தெரிந்ததை போடுகிறேன், ரொம்ப பராட்டுகிறீர்கள்,நன்றி

சகோதரர் கனி வருகைக்கு மிக்க நன்றிசீமான் கனி இது மறுபடி வாசித்து பாருங்கள் ஈசியாக இருக்கும். உங்களுக்காக அடுத்த கஞ்சி இன்னும் ஈசியா பேச்சுலர் கஞ்சி போடுகிறேன்,


ராஜ் நன்றிங்கோ

நட்புடன் ஜமால் said...

ரொம்ப எளிதாகத்தான் தெரியுது


செய்ய நேரம் இன்னும் கிடைக்கயில்லை ...

seemangani said...

nandri akka.....

சப்ராஸ் அபூ பக்கர் said...

ரொம்ப நல்லா இருக்கும் போல என நினைக்கிறேன் அக்கா....

ஆனால் இலங்கை சென்றால் தான் அம்மாவின் கையால் செய்து சாப்பிடுவேன்.

வாழ்த்துக்கள்....

Several tips said...

மிகவும் அருமையான ரெசிப்பி

Jaleela said...

/மிகவும் அருமையான ரெசிப்பி/

several tips

வருகைக்கு மிக்க நன்றி .

மாதேவி said...

உங்கள் நோன்புக் கஞ்சி நன்றாய் உள்ளது.

கஞ்சியில் சத்துக்களும் அதிகம் இருக்கிறதுதானே.

Jaleela said...

மாதேவி தங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
இந்த பிரியாணி கஞ்சி ஒரு ரிச் உணவு + சத்தும் கூட.

மேரிஜோசப் said...

நானும் சாப்பிட்டிருக்கேன் ரொம்ப சுவையா இருக்கும்

Priya said...

சூப்பர்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

halal foodie said...

looks delicious, thanks for sending it to my event

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா