Thursday, August 19, 2010

மட்டன் கொத்து கறி நோன்பு கஞ்சி - mutton keema kanjsi



இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் நோன்பு கால‌ங்க‌ளில் செய்யும் க‌ஞ்சியின் சுவைக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது. நோன்பு திற‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌வுள் முழுவ‌தும் குடித்தால் ந‌ல்ல‌ என‌ர்ஜி கிடைக்கும்.இதை ப‌ல‌ வ‌கையாக‌ செய்யலாம் அதில் இது குக்க‌ர் முறை, இதில் தாளிப்பு, எண்ணை எல்லாம் குறைத்து செய்தால் நோன்பு நேர‌த்திற்கு ந‌ல்ல‌து.இதில் பாசிப்பருப்பு சேருவதால் வயிற்றுக்கு மிகவும் நல்லது. பள்ளி வாசல் கஞ்டி என்றா அதில் கடலை பருப்பு சேர்த்து அதிக காரம் இல்லாமல் வெள்ளையாக இருக்கும்., நேரம் இருந்தால் அடுத்த குறிப்பில் போடுகிறேன்.



தேவையான பொருட்கள்.
சிக்கன் (அ மட்டன் கீமா – 100 கிராம்
பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் – முக்கால் டம்ளர்
பச்ச பருப்பு – இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது)
வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி – ஒன்று
தயிர் – ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
கேரட் – அரை துண்டு
பச்ச மிளகாய் – ஒன்று
மிள்காய் தூள் – அரை தேக்காண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணை – ஒரு தேக்கரண்டி
நெய் (அ) டால்டா – ஒரு தேக்கரண்டி
தேஙகாய் - இரண்டு பத்தை (அ) தேங்காய் பவுடர் இரண்டு தேக்கரண்டி
பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று ஒன்று
வெந்தயம் = கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது
புதினா – சிறிது





செய்முறை
1. வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.புதினா, கொத்துமல்லி , பச்ச மிளகாயை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவேண்டும். கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.கேரட்டை பூ போல் துருவி வைக்க வேண்டும்.அரிசி பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும்.
குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,ஏலத்தை போட்டு பொடிய விட வேண்டும்.
அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை)
இப்போது தக்காளி பச்சமிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு,மிள்காய் தூள், கொத்து மல்லி, புதினா,மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும்.


தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற் வேண்டும்.ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவேணும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும் பருபையும் தண்ணீரை வடித்து போடவேண்டும்.நல்ல கிளறி கிளறி விட்டு கொதிக்க விட வேண்டும்.
குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து முன்று விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விடவேண்டும்.
ஆவி அடங்கிய‌தும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொத்திக்க விட்டு கொத்து மல்லி தழை தூவை இரக்கி சாப்பிடவும்.
சுவையான நோன்பு கஞ்சி தயார்.
இதற்கு தொட்டு கொள்ள பகோடா, பஜ்ஜி,உளுந்து வடை, மற்றும் புதினா துவையல் நல்ல காம்பினேஷன்.


குறிப்பு.
குக்கரில் செய்வதால் கஞ்சியை சூட்டோரு வைக்க அப்படியே குக்கரில் வைக்க கூடாது செய்து முடித்ததும் கிளறி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும்.கஞ்சியை வெளியிலேயே வேக விட்டும் செய்யலாம்.

கையில் பச்ச குழந்தைவைத்திருப்பவரகள், வேலைக்கு போகிறவர்களுக்கு இந்த முறை ஈசியாக இருக்கும்.வெயிட் போட்டதும் தீயை குறைத்து வைக்கனும். இல்லை என்றால் தெரிக்கும்.

கீமா அதிகமா தேவை படுகிறவர்கள் கூட கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.

இதை ம‌ட்ட‌ன் கீமா,வெஜ் டேபுள்ஸ் ம‌ட்டும் போட்டு கூட‌ செய்ய‌லாம்.

நொய் என்பது பாதியாக பொடித்த அரிசி.
இது நோன்பு காலத்திற்கு என்று ஒரு கிலோ முக்கால் பதத்திற்கு பொடித்து அதில் பாசி பருப்பு கால் கிலோ, வெந்தயம் சேர்த்து கலந்து ஒரு கண்டெயினரில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.


பர்கல் இருந்தால் அதுவும் கால் கப் கலந்து வைத்து கொள்ளலாம். தேவைக்கு தினம் ஒரு டம்ளர் அளவிற்கு செய்து குடிக்கலாம், ஒரு டம்ளர் போட்டு செய்தால் நான்கு பேர் தாரளமாக குடிக்கலாம்.

தினம் பிரஷாக கஞ்சி செய்வதா இருந்தால், கொத்துக்கறி அரை கிலோ அளவிற்கு தாளித்து வைத்து கொண்டு, அதில் இருந்து தினம் 100 கிராம் அளவு தாளித்த மசாலா எடுத்து நொய் ஊறபோட்டு குக்கரில் தண்ணீர் அளந்து விட்டு வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு கொள்ளலாம்.
டயட்டில் இருப்பவர்கள் , சுகர் பிரஷர் உள்ளவர்கள் மட்டன் அவ்வளவா சாப்பிடமாட்டார்கள் அவர்கள் மட்டனுக்கு பதில் சிக்கனும், அரிசிக்கு பதில் ஓட்ஸ் மற்றும் பர்கல் சேர்த்து இந்த முறையில் கஞ்சி செய்து கொள்ளலாம்.
(இந்த வருடம் அவ்வளவா எந்த போட்டோவும் எடுக்க முடியல எடுக்கும் போது சேர்க்கிறேன்.)

24 கருத்துகள்:

Chitra said...

:-) Thank you.

நட்புடன் ஜமால் said...

நல்ல விளக்கமா சொல்லியிருக்கீங்க

நன்றிங்கோ ...

Jaleela Kamal said...

நன்றி சித்ரா

Jaleela Kamal said...

சகோ ஜமால், முன்பு போட்டதோடு இன்னும் சில விளக்கங்கள் சொல்லி இருக்கேன்.
புது படங்கள் எடுக்க தான் நேரமில்லை

வேலன். said...

அருமையான விளக்கம் சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

தூயவனின் அடிமை said...

மட்டன் கஞ்சி,செய்முறை நன்றாக உள்ளது.

Asiya Omar said...

அருமையாக இருக்கு.

சசிகுமார் said...

super

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...

மனோ சாமிநாதன் said...

நோன்புக் கஞ்சி அருமையாக இருக்கிறது ஜலீலா! புகைப்படமும் அழகு!

ஜெய்லானி said...

நமக்கு ஒரு பவுல் எல்லாம் சரியாகாதுங்கோ..ரெண்டா குடிச்சாதான் திருப்தி..

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்,
மட்டன் கொத்துகறி நோன்பு
கஞ்சி அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். நோன்பு நேரத்தில்
பயன் உள்ளதாக இருக்கும். .நான் புதிதாக வலைபூ தொடங்கி
உள்ளேன்.என் வலைபூ முகவரி
iniyavasantham.blogspot.com

ஸாதிகா said...

காலத்திற்கேற்ற உணவுவகைகளைப்போட்டு அனைவருக்கு பயனளிக்கும் ஜலிக்கு வாழ்த்துக்கள்

கைப்புள்ள said...

வணக்கம் மேடம்,

நோன்பு நாட்களில் ஹைதராபாத்தில் "ஹலீம்" என்ற ஒரு கஞ்சி வகை கிடைக்கும் என்று சொல்கிறார்களே...அதுவும் நீங்கள் சொல்வதும் ஒன்று தானா?

Unknown said...

அக்கா தெளிவான விளக்கம்.. இங்கு கஞ்சி வீட்டில் போடுற வேலையே இல்லை. ப்ள்ளிவாசலில் இருந்து வருகிறது

prabhadamu said...

இந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.

http://cookeryindexer.blogspot.com/

Jaleela Kamal said...

வேலன் சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க ந்னறி

நன்றி இளம் தூயவன்
நன்றி ஆசியா
நன்றி சசி தம்பி
நன்றி கீதா ஆச்சல்
உங்கள் பாராட்டுகு மிக்க நன்றி மனோ அக்கா

Jaleela Kamal said...

பாயிஜா பள்ளி வாசல் கஞ்சி மொத்தத்தில் செய்வதால் ரொம்ப அருமையாக இருக்குமே.

Jaleela Kamal said...

நன்றி ஜெய்லாணி வேண்டுமானால் பத்து பவுள் அனுப்பட்டுமா?

Jaleela Kamal said...

ஆயிஷா அபுல் உங்கல் முதல் வருகைக்கு மிக்க நன்றி

நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன்.

Jaleela Kamal said...

வாங்க கை புள்ள ஹலீம் இப்ப செய்யல, அப்படியே செய்தாலும் போட்டோ எடுக்க நேரம் இல்லை.

மற்றொரு தளத்தில் கொடுத்துள்ளேன் வேண்டுமானல் லின்க் தருகிறேன்.

Jaleela Kamal said...

நன்றி பிரபா

Jaleela Kamal said...

கைப்புள்ள ஹலீம் வேற நோன்பு கஞ்சி வேற

culinary tours worldwide said...

dear frd how are u
ur update s v nice
hospitality industry is not only a profession, but real passion – living a dynamic, interesting and challenging life, improving oneself every day, meeting different people from all over the world, trying always to be immaculate in one’s appearance and attitude, aiming at gaining more and more knowledge and diversify one’s abilities – this is my understanding of an appealing and challenging profession

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா