Saturday, August 3, 2013

மட்டன்கீமா (கொத்துக்கறி) ஹரீஸ் அரபிக் சூப்/கஞ்சி


HOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE MUTTON KHEEMA HAREES

மட்டன் கீமா (கொத்துக்கறி)  ஹரீஸ்  ( அரபிக் நோன்பு கஞ்சி /சூப்)

ஓவ்வொரு வருடமும் நோன்பு மாதங்களில் பல ஊர்களில் அவரவர் பாரம்பரிய உணவு வகைகளை மாலை நேரம் நோன்பு திறக்க தயார் செய்வோம்.
அதில் நோன்பு என்றாலே முதல் முதல் சமைக்கும் உணவு நோன்பு கஞ்சி தான்.
நம் ஊர்களில் அரிசியை உடைத்து அதில் சிறிதுகடலை பருப்பு,பாசிபருப்பு சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து , சில மசாலா வகைகளும் சேர்த்துநோன்பு கஞ்சி தயார் செய்வோம் . ஆனால் அரபு நாடுகளில் காரமிலாமல், மசாலா அதிகம் இல்லாமல் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகைகளில் கஞ்சி/ சூப்  ஹரீஸும் ஒன்றாகும். இது உடைத்த வெள்ளை கோதுமையுடன் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து செய்வார்கள்.இது குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். டயட் செய்பவர்களுக்கும் எண்ணை அதிகம் சேர்க்காத நோன்பு கஞ்சியாக குடிக்கலாம்.


ஏற்கனவே இங்கு சிக்கன் ஹரீஸ் ரெசிபி போட்டுள்ளேன். அதை இங்கு சென்று பார்க்கவும். 

 தேவையானவை

தாளிக்க 1

பட்டர்  - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 
பூண்டு - 3 பல்
மட்டன் கொத்தியது (கீமா)  - 150 கிராம்
உடைத்த வெள்ளை கோதுமை - 100 கிராம்
பட்டை தூள்  - கால் தேக்கரண்டி
சீரக தூள் - அரை  தேக்கரண்டி
தண்ணீர் - 600 மில்லி ( தேவைக்கு)

தாளிக்க 2

பட்டர்  - 2 தேக்கரண்டி
பட்டை தூள்  - கால் தேக்கரண்டி
சீரக தூள் - கால்  தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - கடைசியாக மேலே ஊற்ற



HOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE MUTTON KHEEMA HAREES
செய்முறை

1.கோதுமையை 8 லிருந்து 10 மணி நேரம் ஊறவைக்கவும்.

2.குக்கரில் சிறிது பட்டர், வெங்காயம், பூண்டு சேர்த்து தாளித்து மட்டன் கீமாவையும் சேர்த்து ஊறவைத்த கோதுமையையும் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.

3.மூன்று  டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சீரகத்தூள், பட்டை பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி மிதமான தீயின் நான்கு ஐந்து விசில் விட்டு , தீயின் தனலை குறைத்து வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.


4.குக்கர் ஆவி வெளியானதும் குக்கர் வெயிட்டை நிக்கிவிட்டு, நன்கு மசிக்கவும். ( பிளண்டரில் அல்லது மிக்சியில் முக்கால் பாகம் அரையும் வரை மசிக்கவும்) ரொம்ப கெட்டியாக இருந்தால் தேவைக்கு வெண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

5.பிறகு சிறிது பட்டரில் சீரகதூளும், பட்டை தூளும் சேர்த்து தாளித்து மசித்த ஹரீஸ் கஞ்சியில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பரிமாறும் பவுலில் ஊற்றி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வைக்கவும்.

 6.சுவையான அரபிக் கஞ்சி மட்டன் ஹரீஸ் தாயார்.


இந்த ரெசிபியில் முழு கோழி, கறி எலும்புடன் போட்டு வேக விட்டு நன்கு வேகவிட்டு கலக்குவார்கள். நான் எப்போதும் எலும்பில்லாததே சேர்த்து செய்வது இப்படி செய்வதால் ஈசியாக வேலை முடியும். ஓட்சில் செய்தால் ரொம்ப மசிக்கவோ மிக்சியில் அடிக்கவோ தேவையில்லை. நன்கு மசிந்து விடும்.இதில் சிறிது வித்தியாசமாக சிறிது பட்டை பொடி, சீரகத்தூள் சேர்த்து வேகவைத்துள்ளேன். வெந்ததும் மணம் ஊரையே கூட்டும்..

 இதற்கு பக்க உணவாக ஃப்லாபில், சிக்கன் நக்கெட்ஸ், ஃபில்லெட், வடை வகைகள் செய்யலாம்.

10 கருத்துகள்:

சாந்தி மாரியப்பன் said...

நல்லாருக்கு ஜலீலாக்கா..

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை செய்ததில்லை... செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

Priya Anandakumar said...

Super delicious kanchi Jaleela, love it will try it soon...

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை அக்கா...
வாழ்த்துக்கள்....

கோமதி அரசு said...

ஜலீலா, உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

அமைதிசாரல் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

தனபாலன் சார், செய்து பார்த்து சொல்லுங்கள்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ப்ரியா உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

சே குமார் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

கோமதி அக்கா பெருநாள் வாழ்த்துக்கு மிக்க ந்ன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா