Tuesday, August 14, 2018

நுங்கு புட்டிங் -- Nungku Agar Agar

.



நுங்கு புட்டிங்

தேவையான பொருட்கள்

அகர் அகர் (கடல் பாசி) – 10 கிராம்
சர்க்கரை  - 50 கிராம்
கண்டெஸ்ட் மில்க்
தண்ணீர் – 2 டம்ளர்
பால் – 2 டம்ளர்
நுங்கு – 4
பொடியாக நறுக்கிய பிஸ்தா  – தேவைப்பட்டால்



செய்முறை

அகர் அகர் என்னும் கடல் பாசியை தண்ணீரில் ஊறவைத்து வடிக்கடி
 அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து  நன்கு கரைய கொதிக்க விடவும்.
பிறகு பால் சேர்த்து கொதிக்க விடவும்.
நுங்கை மேல் தோல் எடுத்து விட்டு பொடிப்பொடியாக அரிந்து  சிறிது பால் சேர்த்து ஒன்றும் பாதியுமாய் அரைக்கவும். சர்க்கரை + ஸ்வீட்டன் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

ஒரு பெரிய தாம்பாள தட்டில் அகர் அகர் கலவையை ஊற்றி ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்கவும்.மேலே பிஸ்தால் அல்லது உங்களுக்கு விருப்பட்ட நட்ஸ் தூவி விடவும். .இரண்டு மணி நேரம் குளிர வைத்தால் போதுமானது, வேண்டிய வடிவில் கட் செய்து பரிமாறவும்.
( நுங்கு சீசன் டைமில் தான் கிடைக்கும் அதை இது போல கடல் பாசியாக செய்து சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்

#Summer Recipes&agar Agar,China Grass,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா