Wednesday, April 8, 2009

பிலாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர்

1 பிலாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் தரமான பிலஸ்டிக்காக பார்த்து வாங்குங்கள்.



2. பிலாஸ்டி பாட்டில் மற்றும் கண்டெயினர் அடியில் ஒரு முக்கோண வடிவில் ஒரு சீல் இருக்கும். அதனுள் நம்பர் இருக்கும், அதில் நம்பர் 1 என்று இருந்தால் நல்ல பிலாஸ்டிக், அப்படி நம்பர் 2, 3,4,5 என்றேல்லாம் இருந்தால் அதை ரொம்ப நாளைக்கு பயன் படுத்தகூடாது.


3. குழந்தைகளின் பால் பாட்டில் நம்பர் 5 யில் தயாரிக்கிறார்கள்.ஆகையால் அதிக நாட்கள் பயன் படுத்த வேண்டாம்.



4. இனி ரொம்ப நாள் பயன் படுத்திய டப்பாக்களை கண்ணை மூடிக்கொண்டு தூக்கி போடுங்கள்.


5. விலை உயர்ந்த பிலாஸ்டிக் கண்டெயினர் வாங்கும் போது இனி பார்த்து வாங்குங்கள்.

Tuesday, April 7, 2009

கோடை கால டிப்ஸ்

1. தண்ணீர் நிறைய குடிக்கனும்.

2.தண்ணீர் என்றில்லை சூப், ஜூஸ்,மோர் என்று கூட எடுத்து கொள்ளலாம்.

3.உடல் சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய், பழங்கள் அதிகமாக சாப்பிடலாம்.முக்கியமாக தர்பூஸ், தக்காளி, எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.


4.வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம்.

5.வெயிலில் போகு முன் சன்ஸ் கீரிம் லோஷன் அரை மணி நேரம் முன்பாக தடவி செல்லுங்கள், கிளம்பும் நேரம் தடவி சென்றால் அது பயனளிக்காது.இது ஸ்கின் டாக்டர் சொன்னது.

6.கண்டிப்பாக கை பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்து கொள்ளுங்க‌ள்.

7.கையில் எந்நேர‌மும் குடை (அ) கூளிங் கிளாஸ் இருக்க‌ட்டும்.

8. கூடுமான‌ வரை வெளியில் செல்வ‌து மாலை நேர‌ங்க‌ளில் வைத்து கொள்ளுங்க‌ள்.

9.டின் ஜூஸ்க‌ளை விட‌ ஃப்ரெஷாகா ஜூஸ் வகைகளை வீட்டிலேயே தாயாரித்து குழ‌ந்தைக‌ளுக்கு கொடுக்க‌வும்.

அம்மை போட்டு இருந்தால் ,அம்மை தழும்பிற்கு

1.தினமும் வேப்பிலை, பூண்டு, மஞ்சள் அரைத்து சாப்பிட கொடுக்கனும்.

2.அம்மை தழும்பு மறைய கொத்துமல்லி, வேப்பிலை, மஞ்சள்,கிராம்பு அரைத்து அவர்களை குளிக்க வைக்கும் போது அள்ளி கட்டிகளில் வைத்து லேசாக தேய்த்து குளிக்க வைக்கவும்.

அம்மை போட்டு இருந்தால் அவர்களை நல்ல படியாக கவனிக்கவும்.


முதலில் சுத்தம் தேவை, தினமும் பெட்சீட், தலையனை உறை எல்லாம் மாற்றனும் கூடுமான வரை வெள்ளை துணியாக இருந்தால் நல்லது.

ரொம்ப அரிப்பெடுக்கும் சொரிய விடக்கூடாது, சொரிந்து விட்டால் அந்த தழும்பு என்றைக்கும் ஆறாது.

வேப்பிலையை கொத்தாக கட்டு போல் கட்டி அதை கையில் கொடுத்து சொரி எடுக்கும் இடத்தில் வருடி விட சொல்லவும்.

சின்ன குழந்தைகளாக இருந்தால் நீங்களே மெதுவாக வருடி விடவும்.

அவர்களுக்கு படுத்தே இருப்பது போரடிக்கும் கையில் நிறைய எலுமிச்சையை கொடுத்து பால் போல் விளையாட கொடுக்கலாம்.

Monday, April 6, 2009

குழந்தைகளுக்கு வயிற்று வலி

குழந்தைகளுக்கு வயிற்று வலி என்றால் மேல் வயிறு முட்டை மாதிரியும், கல்லு மாதிரியும் இருக்கும்.

அதற்கு தொப்புளை சுற்றி விளக்கெண்ணை (அ) தேங்காய் எண்ணை தடவவும்.


சூடான‌ வெண்ணீரை ஆற்றி அப்ப‌ அப்ப‌ இரண்டு ஸ்பூன் கொடுக்க‌வும்.

அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கால் தேக்க‌ர‌ண்டி சோம்பை லேசாகா கருகாமல் வ‌ருத்து த‌ண்ணீர் சேர்த்து இர‌ண்டு ஸ்பூனாக‌ வ‌ற்ற‌விட்டு கொடுக்க‌வும்.

கண்ணின் மேல் உள்ள கட்டிகளுக்கு

1. வீங்கிய கட்டிக்கு
கண்ணுக்கு மேல் அல்லது முகத்தில் வேறு எங்கு கட்டி வந்தாலும்கிராம்பும், மஞ்சளும் நல்ல பொடி செய்து பண்ணீரில் கலந்து தேய்க்கவும். இரண்டு நாட்களில் குணம் தெரியும்.
கொஞ்சமாக பொடிக்க முடியாது இதை அதிக அளவில் பொடித்து வைத்து
கொண்டால் தேவைக்கு பயன் படுத்தலாம்.

2. அம்மை தழும்பிற்கு


வேப்பிலை, பூண்டு, மஞ்சள் சேர்த்து அரைத்து சிறிது சாப்பிட கொட்கொக்கனும்.
தழும்பு மறைய வேப்பிலை, கருவேப்பிலை, கொத்து மல்லி,மஞ்சள், கிரம்பு நல்ல அரைத்து அந்த கட்டிகளில் அள்ளி வைத்து லேசாக தேய்த்து குளிக்க வைக்கவும்.

3. நக சுத்திக்கு

நக சுத்திக்கு மருதாணியில் மஞ்சள்பொடி, கிராம்பு பொடி , எலுமிச்சை சாறு,சிறிது கடுகு எண்ணை, நீலகிரி தைலம் கலந்து கையில் தொப்பி போல் வைக்கவும், இதே போல் அழுகி போன நகத்துக்கும் வைக்கலாம்.
முன்று நாள் தொடர்ந்து முன்று நாட்கள் மாத்திரை சாப்பிடுவது போல் கையில் தொப்பி வைக்க வேண்டும்.

முட்டை கோஸ் டிப்ஸ்


முட்டை கோஸ் என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்காது அதை எப்படி உணவில் சேர்ப்பது.

1.பருப்பு உசிலி செய்யும் போது பீன்ஸ்,கொத்தவரைக்கு பதில் முட்டை கோஸை சேர்க்கலாம்.

2.பிரைட் ரைஸில் சேர்க்கலாம்.

3.வெங்காய பகோடா செய்யும் போதும் சேர்க்கலாம்.

4.பிட்சா தோசை செய்யும் போதும் சேர்க்கலாம்.

5.மன்சூரியன் பால்ஸிலும் சேர்த்து பொரித்து கொடுக்கலாம்.

6.கீமா பிரெட் சாண்ட் விச்சிலும் இது ஒரு கைபிடி அளவு சேர்த்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட வாறு முட்டைகோஸை சேர்த்து செய்து கொடுக்க்லாம். முட்டை கோஸ் பிடிக்காதவர்கலும் இப்படி சாப்பிடலாம்.இது கேன்சர் நோயை கட்டு படுத்தும், வெயிட் குறையவும் அதிகமாக் சாப்பிடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி மற்றும் , கேஸ் பிராப்ளத்திற்கு

1. வயிற்று வலிக்கு

வயிற்று வலிக்கு வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லைவெந்த‌ய‌த்தை வ‌றுத்து பொடிசெய்து ஒரு ட‌ம்ள‌ர் மோரில் அரை தேக்க‌ர‌ண்டி வீத‌ம் க‌ல‌ந்து குடிக்க‌வும்.


2. கேஸ் பிராப்ள‌த்திற்கு

சுக்கு, சோம்பு, வெல்ல‌ம் முன்றையும் க‌ல‌ந்து சாப்பிட‌வும்.
இல்லை சுக்கு, சோம்பு காப்பி, அல்ல‌து சுக்கு சோம்பு டீ குடிக்க‌வும்.

3.