| Tweet | ||||||
Thursday, March 23, 2023
Zeeba Collection Wholesale Shop
அன்பான தோழ தோழியர்களே
இந்த பிலாக் ல என் போஸ்டை தொடர்ந்து பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு மிக்க நன்றி
சென்னை ப்ளாசா துபாய் புர்கா மொத்தமாகவும் சில்லைறையாகவும் நாங்கள் விற்பனை செய்வது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அதோடு ஜீபா கலெக்ஷன் என்று அடுத்த கடையும் திற்ந்து இருக்கிறோம் அதன் விபரங்கள் அடிக்கடி என் சேனலிலும் சென்னை ப்ளாசா சேனலிலும் பகிர்ந்து வருகிறேன்.
ஜீபா கலெக்ஷனில் எங்கள் தயாரிப்பான லெகின்ஸ், ஆங்கிள் ஃபிட், பளாசா எல்லாமே 25 கலரில் சல்வார், சுடிதார் அனார்கலிக்கு போடும் பேன்ட் வகைகள் எங்களிடம் உள்ளது நீங்கள் மேட்சிங் செலக்ட் செய்து வாங்கி கொள்ளலாம்.
chennai plaza zeeba collections face book
அட இந்த டிப்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கே 7 Useful Kitchen Tips
#Ramadan 2023
ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்
1. மீன் பொரிக்கும் போது வீடு முழுவதும் புகைச்சல் ஏற்படும் அதற்கு தீயின் தனலை மீடியமாக வைத்து பொரிக்கவும்.
2.மீன் பொரிக்கும் போது அந்த பொரித்த வாடை மீன் வாசனை நாம் போட்டு இருக்கும் துணி அடிக்கும் அதற்கு சிறிய திக் டவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து அதை கேஸ் அடுப்பு கை பிடியில் அல்லது பக்கத்தில் தொங்க விட்டு கொள்ளுங்கள் . ஈரதுணி எல்லா புகையையும் இழுத்து கொள்ளும். இப்படி செய்வதால் அணிந்திருக்கும் ஆடை மீன் புகை வாடை ஏறாது.
3.மீன் சமைக்கும் போது மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்தால் கூட அந்த வாடையை இழுத்துகொள்ளும்.
4.மீன் சமைக்கும் போது வீடு முழுவதும் அடிக்கும் மீன் வாடையை தவிர்க்க சாம்ராணி புகை போட்டாலும் மீன் சமைத்த சுவடே தெரியாது.
வீடியோ முழுவதும் பாருங்கள் , இன்னும் பல குக்கிங் டிப்ஸ் இருக்கு அதையும் செக் பண்ணுங்கள்
| Tweet | ||||||
Welcome Ramadan 2023
Ramadan Recipes
Welcome Ramadan 2023
நோன்பு ஆரம்பித்து விட்டது
இதில் வீடியோ லின்க் கள் கொடுத்துள்ளேன், சப்ஸ்கிரைப் செய்து வைத்து கொண்டால் உங்களுக்கு எப்ப வேண்டுமானாலும் உதவும்
கீழே கொடுக்க பட்டுள்ள லின்குகளை கிளிக் செய்து பாருங்கள்
please click below links
| Tweet | ||||||
Wednesday, March 8, 2023
HAPPY WOMEN'S DAY 2023/பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.
Only a Woman Can Almost Die and Give Birth at the Same Time. ..
உலகில் உள்ள அனைத்து மகளீர்களுக்கும் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.2023
பெண்கள் தின கலர்
ரோஸ்
வெள்ளை
பச்சை
வைலட்
Women's day colours
Pink
purple
white
green
| Tweet | ||||||
Thursday, March 2, 2023
வறுத்து அரைத்த மிளகு சோம்பு ஈரல் #hemoglobinincreasefood
Blood increase food
என் சமையல் அட்டகாசம் பிலாக் பார்த்து சப்போட் செய்து கொண்டு இருக்கும் அனைவரும், என் சேனலையும் பார்த்து சப்ஸ்கிரைப் செய்து லைக் கமெண்ட் செய்து சப்போர்ட் செய்யும் படி கேட்டு கொள்கிறேன்
ஆத்தாடி எம்புட்டு ருசி இப்படியும் இத செய்யலாமா?#hemoglobinincreasefood
வறுத்து அரைத்த மிளகு சோம்பு ஈரல்
#Bloodincreasefood
ஈரல் 150 கிராம்
பச்ச மிளகாய் ஒன்று
வெங்காயம் சிறிது
சோம்பு ஒரு டீஸ்பூன்
மிளகு முக்கால் டீஸ்பூன்
சீரகம் முக்கால் டீஸ்பூன்
உப்பு ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை முன்று மேசைகரண்டி
கரம் மசாலா கால் டீஸ்பூன் (பட்டை லவங்கம் ஏலம்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
சோம்பு சீரகம் மிளகு கருவேப்பிலையை வறுத்து ஆறவைத்து கொர கொரப்பாக திரிச்சி கொள்ளவும்.
பச்ச மிளகாய் வெங்காயத்தை அரைத்து வைத்து கொள்ளவும்.
முன்று டீஸ்பூன் நல்லெண்ணை அல்லது சன்ப்ளவர் ஆயில் அரைத்த வெங்காயம் பச்சமிளகாய் சேர்த்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
ஈரல் சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பொடித்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு கலக்கி 7 நிமிடம் வேகவைக்கவும்.
நன்கு கூட்டு பதம் வந்ததும் கிளறி கடைசியாக கொத்துமல்லி கீரை கருவேப்பிலை தூவி இரக்கவும்
| Tweet | ||||||
Labels:
Blood Increase food,
ஈரல்,
மட்டன்,
மிளகு மட்டன் கிரேவி
Tuesday, February 28, 2023
Weight Loss Snacks/Lotus Seed By Jaleelakamal
மக்கனா என்னும் தாமரை விதை
அருமையான வெயிட் லாஸ் ஸ்னாக்ஸ்
Winter Snacks/Weight Loss Snacks/Lotus Seed By Jaleelakamal
வீடியோவை கிளிக் செய்து முழுவதையும் பார்த்து சப்ஸ்கிரைப் செய்து லைக் கமென்ட் செய்யுங்கள்
| Tweet | ||||||
Wednesday, February 1, 2023
ராஜ்மா சாலட் / கலர் ஃபுல் ராஜ்மா சாலட்/Rajma Salad with veggies
Aval kitchen
ராஜ்மா சாலட் / கலர் ஃபுல் ராஜ்மா சாலட் - 4தேவையான பொருட்கள்
லெட்டியுஸ் இலை ஒரு கப்
தில் இலை - கால் கப்
வேக வைத்த ராஜ்மா - 100 கிராம்
நீளவாக்கில் அரிந்த வைலட் கோஸ் -இரண்டு மேசை கரண்டி
நீளவாக்கில் அரிந்த முட்டை கோஸ் - இரண்டு மேசை கரண்டி
நீளவாக்கில் அரிந்த மூவண்ண கொடைமிளகாய் -முன்று மேசை கரண்டி
சோளம் - இரண்டு மேசைகரண்டி
டிரெஸ்ஸிங் செய்ய
உப்பு
மிளகு தூள்
ஆப்பிள் சைடர் வினிகர் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைகரண்டி
ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி
தயிர் - 175 மில்லி
செய்முறை
மிளகு தூள்
ஆப்பிள் சைடர் வினிகர் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைகரண்டி
ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி
தயிர் - 175 மில்லி
செய்முறை
தயிரை ஒரு மெல்லிய துணியில் வடிக்கட்டி கெட்டியான தயிராக எடுக்கவும்.
ஒரு வாயகன்ற பவுளில் முதலில் வடிகட்டிய தயிரை சேர்க்கவும்
அதில் ஆலிவ் ஆயில்,சாஸ் வகைகள் , உப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
வேக வைத்த ராஜ்மாவை சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து உப்பு , மிளகு தூள் தூவி லேசாக வறுத்து கொள்ளவும்.
பிறகு அரிந்து வைத்துள்ள சாலட் இலைகள் மற்றும் காய் வகைகள்(மூவர்ண கொடை மிளகாய் மற்றும் இரண்டு வகையான கோஸ் ,வறுத்து வைத்த ராஜ்மா ,சோளம் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக லெமன் ஜூஸ் சிறிது பிழிந்து கிளறி பரிமாறவும்.
அனைத்து சத்துக்களும் அடைங்கிய அருமையான சாலட் ரெடி.
இன்னும் கிரீமியாக வேண்டும் என்றால் ப்ர்ஷ கீரீம் அல்லது எக் லெஸ் மையானஸ் சேர்த்து கொள்ளலாம்.
| Tweet | ||||||
Subscribe to:
Posts (Atom)








mak.jpg)



