Wednesday, September 19, 2012

மருதாணி கோன் செய்யும் முறை

மருதாணி கோன் செய்யும் முறை

மருதாணி டிசைன் தான் போட வரல கோண் ஆவது செய்து காண்பிப்போமே. மருதாணி பவுடர் வாங்கி இது போல் நாமே தாயாரித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் அடிக்கடி மருதாணி வைத்து கொள்ளலாம்.



தேவையானவை
மருதாணி கலவை
பிளாஸ்டிக் திக் கவர் 
ஸ்பூன்
கத்திரிக்கோல்
செலோ டேப்


செய்முறை



1.       திக் பிளாஸ்டிக் கவரை சதுர வடிவமாக வெட்டி கொள்ளவும். மருதாணி பவுடரை வெள்ளை மல்துணியில் சலித்து அத்துடன் நீலகிரி தைலம், திக்கான பிளாக் டீ,சிறிது சர்க்கரை சேர்த்து  உளுந்து வடை மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.



2.       சதுர வடிவமாக வெட்டிய பிளாஸ்டிக் கவரை வேர்கடலை மடிக்கும் பொட்டலம் போல்  மடித்து செலோ டேப் போட்டு அங்கேங்கே பிரியாமால கீழிருந்து மேலாக ஒட்டவும்.



3.       பிறகு கலக்கிய மருதாணியை ஒரு ஸ்பூனால் உள்ளே எடுத்து நிறப்பவேண்டும். முக்கால் பாகம் நிறப்பினால் போதும்.



4.       மேலே உள்ள கால்பாகத்தை மடித்து சல்வார் டேப் போட்டு ஒட்டி விடவும்.

5.       மருந்தாணி கோன் ரெடி


டிப்ஸ்: பிளாக் டீக்கு பதில் கட்டியான புளிசாறும் சேர்க்கலாம். மருதாணி உடல் சூட்டை தணிக்கும். மாதம் ஒரு முறை வைப்பது அனைவருக்கும் நல்லது.







இது சாதியா வைத்து விட்டது



இது என் நாத்தனார் மகள் சைமா வைத்துவிட்டது





இது என் நாத்தானார் எனக்கு வைத்து விட்டது



இது நான் வைத்தது



மருதாணி டிசைன் அழகாக போடதான் வரல அதை எப்படி கோன் வடிவில் செய்யலாம் என்றாவது போடலாம் என்று இரண்டு வருடமுன் நானும் என் தங்கையை செய்ய சொல்லி போட்டோக்கள், ஆனால் சரியாக வரவில்லை, இதில் உள்ளது நானே ஒரு வருடம் முன் செய்து எடுத்து வைத்தது.

கடையில் வாங்கும் போது சில மருதாணி கோன் ஸ்மெல் அடிக்கும். என்ன கலக்குறாங்கன்னு தெரியல. 
இது போல் நாமே தயாரித்து வைத்து கொண்டால் தேவைபடும் போதெல்லாம் போட்டு கொள்ளலாம். 

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமேல் கடையில் வாங்க வேண்டாம்... நன்றி...

அந்நியன் 2 said...

// ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.

என்றும் உங்கள்
ஜலீலாக்கா //

உண்மையிலயே நல்லா இருந்தது ஆனால்......ஆனால்.

Chitra said...

Naanun try panren. Designs super aa irukku. thnx for sharing :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மருதாணி இட்ட கைகள் போன்ற வெகு அழகான பதிவு. பாராட்டுக்கள்.

0000000

தாங்கள் கேட்ட தக்வல்கள்:
==========================

தலைப்பு:

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?

http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html பகுதி-1

http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html பகுதி-2

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
e-mail: valambal@gmail.com

ஹுஸைனம்மா said...

மருதாணி கோன் செய்யும் முறை மிக ஈஸியாத்தான் இருக்கு. கடையில் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டதை வாங்குவதைவிட நாமே செய்துக்கிறதுதான் நல்லது.

எத்தனை டிஸைன்கள்!! படங்களில் எல்லாமே உங்க கையா? மருதாணி மாசமே கொண்டாடிருப்பீங்க போல!! :-))))

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா