Tuesday, September 18, 2012

பாலோ செய்த பிளாக்கை எப்படி மறுபடி பாலோ செய்வது..




என்ன தலைப்ப பார்த்தததும் சமையல் அட்டகாசம் எப்ப பிளாக்கர் டிப்ஸ்க்கு மாறியது என்று எல்லாருக்கும் குழப்பமாக இருக்கா??? 


நிறைய பேருக்கு  தெரியுமா தெரியாதான்னு தெரியல நான் 


http://allinalljaleela.blogspot.com/

http://jaleela-duwa.blogspot.com/

http://tipsofjaleela.blogspot.com/

http://kidsfood-jaleela.blogspot.com/



இந்த நான்கு பிளாக்குகளை வைத்து கொண்டு ஆரம்பித்த புதிதில் ஒவ்வொன்றாக் தனித்தனியக போய் பதிவு போடுவது ரொம்ப திண்டாட்டாமாக இருந்தது. பிளாக் ஆரம்பித்ததில் வேறு யாரிடமும் சந்தேகம் கேட்பதில்லை நானே தான் எனக்கு தெரிந்ததை போட்டு கொள்வேன்.

அப்போது பிளாக்கர் டிப்ஸ் எழுதி வந்த சுஹைனா விடம் கேட்டபோது. உடனே நான்கு பிளாக்கையும் ஒன்றாக இனைத்து “ allinalljaleela" என்று மாற்றி அமைத்து கொடுத்தாங்க.

பிறகு சமையல் அட்டகாசங்கள் என்று பெயர் மாற்றலாம் என்று ஒரு நாள் இரவில் உட்கார்ந்து 2 மணிநேரமா எப்படி மாற்றுவதுன்னு பார்த்து பெயரையும் மாற்றியாச்சு.

பொதுவாக பதிவு எழுதினால் அனைவருக்கு அவரவர் பிளாக் ஓப்பன் செய்யும் போது டேஷ் போர்டில் மற்றவர்கள் பதிவுகள் வரும்.
ஆனால் நான் பெயரை மாற்றியதில் யாருக்கும் டேஷ் போர்டில் என் பதிவுகள் வரவில்லை.

ஏன்னு கேட்கிறீங்களா ஒரு வார்த்த நான் மாற்ற போறேன்னு ஒரு பதிவ போட்டுட்டு மாற்றி இருந்தால் எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்.

தெரிந்தவர்கள் மெயில் செய்து கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
சொல்லாமல் மாற்றிய்தால் மற்றவர்கள் டேஷ் போர்டில் என் பதிவு வரவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்து சில தோழிகளிடம் unfollow  செய்துட்டு மறுபடி follow செய்யுங்கள் எங்கு சொன்ன்னேன்.அதன் படி செய்து டேஷ் போர்டில் அவர்களுக்கு இப்போது வருகிறது. இன்னும் மற்றவர்களுக்கும் பதிவுகள் கிடைக்கலையே எப்படி பதிவு போடுவதுன்னு தேடும் போது தான் ப்ளாக்கர் நண்பன் பாஸித்தின் இந்த பதிவு தெரிய வந்தது. 


கீழே உள்ள பதிவில் சொல்லியுள்ள படி செய்யுங்கள்.



**********************************************************************


புதிய டொமைனுக்கு மாறினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று, நீங்கள் பதிவிட்டு சில மணி நேரம் கழித்தே நமது ப்ளாக்கை  பின்தொடர்பவர்களின் டாஷ்போர்டில் தெரியும்.அதனை சரி செய்வதற்கு உங்கள் ப்ளாக்கை பின்தொடர்பவர்கள் ஒருமுறை Follower Gadget-ல் Unfollow செய்துவிட்டு மீண்டும் பின்தொடர வேண்டும்.

ப்ளாக்கர் நண்பன் தளத்தை பின்தொடர்பவர்களும் சிரமம் பார்க்காமல் இதனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதை எப்படி செய்வது? என்று பார்ப்போம்.

முதலில் Follower Gadget-ல் கீழே Sign-in என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு நீங்கள் எந்த கணக்கை கொண்டு பின்தொடர்ந்தீர்களோ? அதனை க்ளிக் செய்யுங்கள். (அதிகமானோர் கூகிள் மூலம் தான் பின்தொடர்ந்திருப்பீர்கள். ஆம் என்றால் கூகிள் என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு  கூகிள் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கேட்கும். அதனை கொடுத்து Sign in என்பதை க்ளிக் செய்யுங்கள்.




பிறகு Follower Gadget-ல் பின்வருவது போல இருக்கும். அதில் Optionsஎன்பதை க்ளிக் செய்து, Site Settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு Stop following this site என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு மீண்டும் stop following என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அதனை க்ளிக் செய்தவுடன் அந்த ப்ளாக்கை பின்தொடர்வது நிறுத்தப்படும்.

இனி மீண்டும் பின்தொடர, முதல் படத்தில் உள்ளது போல Follower Gadgetகீழே உள்ள Sign in என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு  Follow this blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு Done என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! நீங்கள் ப்ளாக்கை பின்தொடர ஆரம்பித்துவிட்டீர்கள். இனி பதிவுகள் உடனடியாக உங்கள் டாஷ்போர்டில் வரும்.


நன்றி ப்ளாக்கர் நண்பன்  இதில் இருந்து எடுத்து போட்டது.




2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் உதவும்...

வலைச்சர கலக்கலுக்கு வாழ்த்துக்கள்...

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

இதேபோல செய்தேன், பார்ப்போம் இனிமேல் உங்கள் தலைப்பு மேலே மிதக்குதோ என.... மீண்டும் தெரியாவிட்டால் என்னதான் பண்ணுவதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா