Wednesday, June 1, 2016

சிம்பிள் ஈசி சேமியா பாயாசம்

தேவையான பொருட்கள்

பால் - இரண்டு டம்ளர்
ஏலக்காய் - ஒன்று
பாம்பினோ சேமியா - ஒரு கைபிடி
சாப்ரான் - இரண்டு சிட்டிக்கை
ஸ்வீட்டன்ட் கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு குழிகரண்டி
நெய்யில் வறுத்த முந்திரி  - சிறிது

செய்முறை

பாம்பினோ சேமியாவை சிறிது நெய் விட்டு சிவற வறுத்து எடுத்து வைக்கவும்.
பாலை ஏலக்காய் மற்றும் சாப்ரான் சேர்த்து காய்ச்சி கால் பாகம் வற்ற விடவும்.
பிறகு வறுத்து வைத்த சேமியாவை சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் கன்டெஸ்ட் மில்க் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கலக்கி இரக்கவும்.

ஈத் வேலைகளில் புதிதாக சமையல் ஆரம்பித்த்து கற்று கொண்டு செய்யும் நிலையில் உள்ளவர்ளுக்கு இந்த ரெசிபி செய்வதற்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, May 31, 2016

நவ தானிய கருப்பட்டி சர்க்கரை பொங்கல்

காலை உணவிற்கு சர்க்கரை பொங்கலும் சுண்டலும் பொருத்தமான சமையல்.
அரிசி உணவில் தயாரிப்பதை விட ஹெல்தியான நவதானியத்தில் ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடலாம்.நவ தானிய சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்
குதிரை வாலி
சாமை
தினை
வரகரிசி
எல்லா அரிசியும் சேர்த்து - 1 டம்ள்ர்
பாசிப்பருப்பு - கால் டம்ளர்
சுக்கு கருப்பட்டி - 1 டம்ளர்
பால் - ஒரு டம்ளர்
தண்ணீர் ஒரு டம்ளர்
ஏலக்காய்  பொடி - அரை தேக்கரண்டி
நெய் - இரண்டு குழிகரண்டி
முந்திரி கிஸ்மிஸ் பழம் - 25 கிராம்


செய்முறை

சுக்கு கருப்படியில் ஒரு  டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு  வடிக்கட்டவும்.
அரிசி வகைகளை களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.

முந்திரி கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்து வைக்கவும்.
பால் தண்ணீர் இரண்டையும், கொதிக்க விட்டு அதில் ஊறிய அரிசிவகைகளை சேர்த்து கொதிக்க விடவும்.
பாதி கொதித்து வரும் போது வடித்து வைத்துள்ள சுக்கு கருப்பட்டியை மற்றும் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும், கொதிக்கும் போது சிறிது நெய் விட்டு குக்கரை மூடி இரண்டு முன்று விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடங்கியதும் வேறு பாத்திரத்தில் மாற்றி அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து கிளறி பரிமாறவும்.

சுவையான நவதானிய கருப்பட்டி சர்க்கரை பொங்கல் ரெடி.https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, May 16, 2016

சிம்பிள் கார சட்னி


சிம்பிள் கார சட்னி
பேலியோ டயட் ரெசிபி
( கிரில் வகைகள் மற்றும் காலிப்ளவர் த்யிர் சாதம், லெமன் சாதத்துக்கு ஏற்ற பக்க உணவு.தேவையான பொருட்கள்
(சிவப்பு ) காய்ந்த மிளகாய் (குண்டு) – 4
வெங்காயம் – 50 கிராம்
கல் உப்பு – தேவைக்கு
நல்லெண்ணை அ சூடான நெய் – தேவைக்குhttp://cookbookjaleela.blogspot.com/…/simple-kara-spicy-chu…


செய்முறை


மிளகாய் , உப்பு, வெங்காயம் சேர்த்து நல்ல மையாக மிக்ஸியில் அரைக்கவும்.
அதன் மேல் நல்லெண்ணை அல்லது சூடான நெய் ஊற்றி கிரில் மற்றும் பேலியோ டயட்டுக்கு செய்யும் தயிர் சாதம் லெமன் சாதத்துக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும்.
இதில் தாளிப்பு தேவைப்பட்டால் சிறிது எண்ணையில் கடுகு , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி 3 நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.


இட்லி தோசை ஆப்பத்துக்கு ஏற்ற சிம்பிள் சட்னி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, April 22, 2016

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ....


என் சமையல் பயணம் முதல் முதல் ஆரம்பித்த  அறுசுவைடாட்காம் முகப்பை தினம் ஒரு முறையாவது பார்க்கனும் அப்ப தான் அன்றைய வேலையே ஓடும். பிறகு பிளாக் அடுத்து ஆபிஸ் பிசினஸ் என்று பிசியாகி போய் என்னால் தொடர முடியவில்லை. 
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு வனி என்னிடம் சில கேள்விகளை ( நேர்காணல் போல ) தொகுத்து அனுப்பி இருந்தார் . ரொம்ப நாட்களாக பதில் போடாமல் ஒரு நாள் எதர்தாமாக சட்டுன்னு எழுதி அனுப்ப அதை அறுசுவை டாட்காமில் போட்டு இன்ப அதிர்ச்சியை கொடுத்து விட்டார்கள்.
நன்றி வனி.
அதற்கு நான் அளித்த பதில்கள் கிழே உள்ளன, கிழே உள்ள லின்கிலும் சென்று படிக்கலாம்.

இதில் என் குறிப்புகளை காண 


நீண்ட இடைவெளிக்கு பிறகு .. சுட்டியை சொடுகி படிக்கவும்.. 

1. ஆண் பிள்ளைகளுக்கு சமையல் பழக்குவிப்பது பற்றி உங்களின் கருத்து என்ன ? (வாணி)
‍‍- ‍‍ஆண் பிள்ளைகளுக்கு சமையல் பழக்குவிப்பது மிகவும் நல்லது. இப்போது வெளிநாடுகளில் பிள்ளைகள் படிப்பதற்கோ அல்லது வேலை பார்க்கவோ வெளி நாடுகளில் இல்லை உள்ளூரிலேயே வேறு ஊர்களில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அவர்களுக்கு சின்ன சின்ன சமையல் தெரிந்து வைத்து கொண்டு சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

2. ஒரு குறிப்புக்கு பின்னூட்டங்கள் எந்த அளவுக்கு அவசியம்? அதைப் படிக்கும் போது எப்படி உணருவீங்க? (நிகிலா)
- குறிப்புகளுக்கு பின்னூட்டம் கண்டிப்பாக தேவை அது பெரிய சந்தோஷம் அடுத்த போஸ்ட் இன்னும் நல்ல போடனும் என்ற ஆர்வத்தை அளிக்கும்.

3. உங்களுக்குப் பிடித்த சைவ சமையலில் விருந்தினருக்கு ஏற்றார்ப் போல சுவையான குறிப்பாக ஒரு ஃபுல் மெனு எங்களுக்காக சொல்ல முடியுமா? (நிகிலா)
- சைவ சமையல் விருந்தினருக்கு ஏற்ற ஃபுல் மெனு பார்டிக்கு செய்ய
ஆனால் நார்மலாக செய்ய அப்படியே பாதி மெனு செய்வேன்.
கிரிஸ்பி காலிப்ளவ்ர் 65
கிரீன் சட்னி
சென்னா புலாவ்
கேரட் ரைத்தா
பனீர் டிக்கா
மஷ்ரும் பீஸ் குருமா
நான் (அ) ரொட்டி
தால்
வெஜ் கட்லெட்
பன் & பாதாம் பீர்னி
கலர்புல் அகர் அகர்
ஃப்ரூட் சாலட் வித் ட்ரை கலர் ஐஸ்கிரீம்
ரசமலாய்
அத்திபழ தக்காளி ஹல்வா
கிரீன் சாலட்
மிக்டு வெஜ்ஜிசாலட்

4. நீங்கள் முதன் முதலில் சமைத்த குறிப்பு எது? அதற்கு முதல் பாராட்டு யாருடையது? (ரேவஸ்)
- முதல் முதலில் சமைத்த ரெசிபி நிறைய இருக்கு... ஆனால் எங்க அப்பா கேட்டு செய்து கொடுத்த ஸ்நாக்ஸ் கிரிஸ்பி பக்கோடா இது ரொம்ப ரொம்ப சொதப்பி கடைசியில் நல்லா செய்து என் தந்தையிடம் பாராட்டை பெற்றபோது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.
திருமணம் ஆனதும் தோசைக்கு தொட்டுக்க செய்த வடகறி என் கணவர் விரும்பி சாப்பிட்டு ஹோட்டலில் சாப்பிடுவதை விட மிக அருமை என்றார்.

5. உங்களுக்கு கஷ்டமான ரெசிபி இன்னும் திரும்ப திரும்ப செய்தாலும் அதன் ஒரிஜினல் சுவை வராமல் இருந்துருக்கா? அது என்ன ரெசிபி? (ரேவஸ்)
- ரொம்ப சொதப்பிய ரெசிபி இடியாப்பம்.

6. ஹோட்டல், மற்றவர் கைவண்ணத்தில் சமைத்த உணவுகளில் உங்களுக்கு பிடித்த ரெசிபிய அவர்களிடம் குறிப்பு கேட்காமல் செய்து பார்த்து அதன் சுவையை எடுத்து வந்ததுண்டா? அப்படி வந்ததுக்கும் அப்பறம் உங்களுக்கு எப்படி இருக்கும்? (ரேவஸ்)
- கூடுமானவரை சாப்பிடும் சுவையை வைத்து செய்து பார்ப்பேன். அதில் நிறைய சைவ சமையல் சூப்பராக வந்துள்ளது. ரொம்ப நல்லா வந்தது என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப அளவில்லாத மகிழ்ச்சியை அடைவேன். இறைவனுக்கு நன்றி செலுத்துவேன்.

7. உங்க வீட்டு சமையல் உபகரணங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது ? ஏன் ? (ஏஞ்சல்)
- எனக்கு ரொம்ப பிடிச்சது நான்ஸ்டிக் தோசை கரண்டியும் சின்ன தோசை தவ்வாவும் நான் அடிக்கடி பயன்படுத்துவது. அது தான் எல்லாவிதமான சமையலுக்கும் பயன் படுத்துவேன். புதுசாவாங்கும் அலுமினியசட்டிகள் ரொம்ப பிடிக்கும்.
சின்ன சின்ன குட்டியான ஃபுட் கன்டெயினர்கள் ஜார் எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

8. உங்க கிச்சனில் நடந்த நீங்க அடிக்கடி நினைத்து சிரிக்கும் சம்பவம் என்ன ? (ஏஞ்சல்)
- கிச்சனில் சீரியஸாக வேலை செய்வேன் அத‌னால் சிரிக்கும் படியாக நடந்த சம்பவம் எதுவும் ஞாபகம் வரவில்லை.
சிரித்த சம்பவத்தை விட பக் பக் சம்பவம் தான் கொஞ்சம் அதிகம், ஆபிஸ் போகிற அவசரத்தில் செய்வதால் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் அடுப்ப ஆஃப் பண்ணேனா இல்லையா என்று பயம் பட படப்பு இருக்கும்.

9. ஒரு நாள் எதிர் பாராத விதமா உங்க சமையல் ரொம்ப சொதப்பிடுச்சு. உங்க வீட்டுக்கு அன்னைக்குன்னு அறுசுவை தோழி ஒருவர் வந்திருக்காங்க. எப்படி இருக்கும் உங்களுக்கு? என்ன பண்ணுவீங்க? எப்படி சமாளிப்பீங்க?
- இதுவரை விருந்தினருக்கு சொதப்பியது இல்லை. அப்படி சாப்பாடு சொதப்பி விட்டது என்றால் அப்படியே அதை ஓரங்கட்டி விட்டு வேறு ஏதாவது சுலபமாக முடியக்கூடிய சமையலை செய்து சமாளித்து விடுவேன்.

10. அறுசுவையில் உங்கள் சமையல் தவிர நீங்க விரும்பி சமைக்கும் மற்றவர் சமையல் எது? யாருடையது? எதனால்?
- ஜேமாமி, தளிகா, விஜி சமையல் ஜேமாமி கை தேர்ந்த அனுபவசாலி ஆகையால் அவர்களின் சமையல் ரொம்ப பிடிக்கும். எப்பவாவது ஒரு சேன்ஞ்க்கு இவர்களுடைய சமையலை செய்வேன். மற்றவர்கள் சமையலும் பிடிக்கும்.
தளிகாவின் நான் வெஜ் கேரள சமையல் மற்றும் விஜியின் வெஜ் கேரள சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கேள்விகள் அனுப்பிய‌ தோழிகள் வாணி, ஏஞ்சல், ரேவ்ஸ், நிகிலா அனைவருக்கும் மனமார்ந்த‌ நன்றிகள். உங்கள் உதவியின்றி இதை என்னால் செய்திருக்க‌ இயலாது. கேள்விகளை படித்து பொறுமையாக‌ எங்களுக்காக‌ பதிலளித்த‌ அன்புக்குறிய‌ தோழி ஜலீலாக்கு எங்கள் அனைவர் சார்பாகவும் மீண்டும் நன்றி :)
புதுமுகங்களுக்காக‌ ஜலீலாவின் சமையல் குறிப்புகளின் பட்டியல் இங்கே:
http://www.arusuvai.com/tamil/expert/3475
சமைத்து மறக்காமல் உங்கள் பின்னூட்டங்கள் அறுசுவையில் பதியுங்கள். கேள்வி பதில்களை படிப்பதோடு நிறுத்திவிடாமல் ஜலீலா குறிப்பில் நீங்கள் செய்து அசத்திய‌ குறிப்பு எது, அடிக்கடி விரும்பி செய்யும் குறிப்பு எது என‌ இங்கே தெரிவியுங்கள், மற்றவர்களும் செய்து பார்க்க‌ இது உதவும். :)

Thank u vani and Babuhttps://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, March 9, 2016

சிறப்பு விருந்தினர் பதிவு - கலா ஸ்ரீராம் - பாகற்காய் கொத்சு & ராகிஅன்பான வலை உலக தோழ தோழியர்களே பாரம்பரிய குறிப்பு சிறப்பு விருந்தினர் பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டன, நிறைய தோழிகள் குறிப்புகள் அனுப்பி இருந்தாலும் அதை தொகுத்து இங்கு பதிவிட நேரம் கிடைகக்வில்லை

இன்று சமையல் அட்டாகாசம் வலைப்பூவில் சிறப்பு விருந்தினராக பாரம்பரிய சமையல் குறிப்பை நமக்கு வழங்கி இருப்பவர் கலா ஸ்ரீராம் 
இவர்களுடைய வலைப்பூவின் பெயர் புதுகை தென்றல் , 1000 க்கும் மேற்பட்ட பயனுள்ள பதிவுகளளை வலைப்பூவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
இவரின் வலைப்பூ பல்சுவை நிறைந்ததாக இருக்கும். நிறைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். பேரண்ட்ஸ் கிளப் வலை பூவிலும் கூட்டாக பிளாக்கர்கள் சேர்ந்து அவரவர் பதிவுகளை இங்கு பகிர்ந்துள்ளனர்.  பெற்றோர்களுக்கு பயனுள்ள தாக பிள்ளைகளின் அனுபவங்களை தொகுத்து எழுதி இருக்கிறார்.


http://parentsclub08.blogspot.in/ பேரண்ட்ஸ் கிளப் லிங்க்
http://pudugaithendral.blogspot.in/ என்னுடைய வலைப்பூ
நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள்.

அன்புநட்புக்களுக்குவணக்கம்.
என்பெயர்கலாஸ்ரீராம்.
வலையுலகில்புதுகைத்தென்றல்.
புதுகைத்தென்றல்
என்னுடைய 

சுய அறிமுகம்:
வணக்கம். வலையுலகில் எனது பெயர் புதுகைத் தென்றல். எனது வலைப்பூவின் பெயரும் அதுவே. பேரண்ட்ஸ் கிளப் எனும் வலைத்தளத்திலும் எழுதுவதை என் பெருமையாக கருதுகிறேன்.
மூத்தமகன் +2 தேர்வுக்கு ரெடியாகி கொண்டிருக்க இளையவளோ 9 ஆம் வகுப்பு பரிட்சைக்கு ரெடியாகி கொண்டிருக்கிறார். இலங்கையில் 7 வருடங்கள் வாழ்ந்ததை என் பாக்கியமாக கருதுகிறேன். இப்பொழுது ஹைதராபாத்தில் இருக்கிறோம்.

ஜலீலாக்கா என எங்களால் அன்பாலஅழைக்கப்படும் ஜலீலாகமல் அவர்களின் சமையல்அட்டகாசம் வலைப்பூமூலமாதெரியும்.
அவங்களுடைய சமையல்குறிப்புக்களுடன் பல பயனுள்ள டிப்ஸ், மருத்துவ குறிப்புகள், குழந்தை உணவு, சமையல் டிப்ஸ்கள், ஆண்களுக்கு டிப்ஸ்கள், கர்பிணி பெண்களுக்கான பதிவுகள் என்று பல பயனுள்ள பதிவுகளை பதிந்துள்ளர். அனைத்து பதிவுகளும் மிக அருமை. 

பாராம்பரிய சமையல்:
எனக்கு மிகவும் பிடித்த இந்த உணவு உடலுக்கு ரொம்பவும் நல்லது. வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு பதின்ம வயது குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியை தரும் சத்தான உணவு.
ராகி சங்கட்டி:
இது ஆந்திரா ஷ்பெஷல் உணவு.
தேவையான பொருட்கள்:
ராகி(கேப்பை மாவு) 1 கப், சமைத்த சோறு - 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் - 1 ஸ்பூன்.
செய்முறை:

கொஞ்சம் குழைவாக சமைத்த சோற்றில் தேவையான அளவு
உப்பு், 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

1 கப் ராகிக்கு 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து
கரைத்து வைக்கவும்.

அடுப்பை பற்றவைத்து, அடி கனமான பாத்திரம் வைத்து
அதில் கரைத்து வைத்திருக்கும் சோற்றை போட்டு கிளறவும்,
கொஞ்சம் கொதிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் கரைத்து
வைத்திருக்கும் கேப்பை மாவையும் ஊற்றி கைவிடாமல்
கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது நெய்
சேர்த்து மேலும் கிளறி இறக்கினால் சங்கட்டி ரெடி.

புளி இலையைப் போட்டு ஒரு குழம்பு செய்வார்கள். அதோடு
இந்த களியை தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். அது இல்லாவிட்டாலும்
இதற்கு சரியான ஜோடி பூண்டுக்குழம்பு அல்லது வடைகறி.

காரம் சைட்டிஷ்ஷில் மட்டும் தான் எனவே, இது வயிற்றுக்கு ஊறு ஏதும் செய்யாது.
கேப்பை உடலுக்கு மிகவும் நல்லது. குளிர்ச்சி தரும்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இவ்வுணவு மிக 
உதவும்.


1.சமைத்த சோறு இல்லாவிட்டால் அரிசியை
மிக்சியில் போட்டு உடைத்து(அரிசி உப்புமா
செய்யும் பதம்) சோறு சமைத்து சேர்க்கலாம். 
சமையற்குறிப்பு
பாகற்காய் கொத்சு செய்வதுஎப்படின்னுபாப்போம்.

இது ஆந்திராபக்கம்செய்யப்படும்உணவு.
வெண்பொங்கலுக்குசரியானஜோடி.
கசப்பேதெரியாது. சாதத்துலஊத்திபிசைஞ்சும்சாப்பிடலாம்.
தோசைக்கும் நல்லா இருக்கும்.
இவ்வளவுருசியானகொத்சு செய்ய என்னென்னதேவைன்னுபாத்துக்கலமா!!!!தேவையானபொருட்கள்:

பாகற்காய்: 250 gms, (விதைநீக்கிவெட்டிவெச்சுக்கணும். ரவுண்டாகவோநீளமாகவோஅதுஉங்கவிருப்பத்தைபொறுத்து
கடலை பருப்பு: 1 cup
உளுத்தம் பருப்பு : 1 cup
காய்ந்தமிளகாய் : 7
எலுமிச்சைஅளவுபுளிஊறவைத்துஅந்ததண்ணி
வெள்ளை எள்ளுஇல்லைன்னாகறுப்புஎள்ளு50 gms.க்
கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் – 1 ஸ்பூன்.
வெல்லம் - ருசிக்கு

செய்முறை:

வெறும்கடாயில்எள்ளைவறுத்துஆறியதும்பொடித்துவைக்கவும்.க.பருப்பு, உ.பருப்பு, காய்ந்தமிளகாய்இவைகளையும் எண்ணெய் சேர்க்காமல்வறுத்துஆறியதும்பொடிசெய்துவைத்துக்கொள்ளவும்.அதேகடாயில்இல்லாவிட்டால்வெறொருவாணலியில் எண்ணெய் விட்டுகடுகு, கறிவேப்பிலைதாளித்துநறுக்கிவைத்திருக்கும்பாகற்காயை போட்டு நன்குவதக்கவும்.கொஞ்சமாக உப்பு சேர்த்துமேலும்வதக்கவும்.காய்நன்குசுருண்டுவதங்கும்தருவாயில், கரைத்துவைத்திருக்கும்புளிநீரைசேர்த்துநன்குகொதிக்கவிடவும். மஞ்சள், உப்பு சேர்த்துபுளிவாசனைபோகநன்குகொதித்ததும்பொடித்துவைத்திருக்கும்எள்ளுபொடிமற்றும் பருப்பு மிளகாய்பொடியைசேர்த்துநன்குகொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்துவரும்பொழுதுகொஞ்சம்வெல்லம்சேர்த்துநன்குகலக்கிஇறக்கவும்.ருசியானபாகற்காய்கொத்சுரெடி.
குறிப்பு
அவசரமாகசெய்யும் பொழுது வறுத்துபொடிக்கநேரமில்லைஎன்றால்இட்லிமிளகாய்ப்பொடி( க.பருப்பு, உ.பருப்பு, காய்ந்தமிளகாய், எள்ளு போட்டு அரைத்தது) போட்டு செய்யலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு, சிறப்பு விருந்தினர் பதிவு, பாரம்பரிய சமையல்


சிறப்பு விருந்தினர் பதிவு
உங்கள் குறிப்புகளையும் இங்கே நீங்கள் பகிற விரும்பினால் என் மெயில் க்கு அல்லது கிழே கமெண்டில் தெரிய படுத்தலாம்.
அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள்,முக நூல் தோழியர்கள் வலை உலக தோழ தோழியர்கள் மற்றும் இதை பதிவை பார்ப்பவர்கள் யாருக்கும் விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகை, மதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள், மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள். குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம் மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன். 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, March 8, 2016

பெண்மையை கொண்டாடுவோம்அஸ்ஸலாமு அலைக்கும்


அல்ஹம்து லில்லாஹ் சென்னை ப்ளாசாவில் இருந்து கிளைகள் போல பல சகோதரிகள் ஹோல்சேலில் எங்களிடம் சரக்குகள் வாங்கி விற்று கொண்டு இருக்கின்றனர். பல பெண்கள்  சிறு தொழிலில் ஆர்வமாய் இருப்பது.

மிகவும் சந்தோஷம். 
அல்லாஹ் அனைவருக்கும் தொழில் பரக்கதை அளிப்பானாக.
எல்லா புகழும் ஏகவல்ல இறைவனுக்கே.


உலகில் உள்ள அனைவருக்கும் இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்
இஸ்லாமிய சாதனை பெண்களின் மகளிர் தினம்
ஏன் நம்மில் பலர் பெண்களாய் பிறந்ததை நினைத்து சலித்து கொள்கிறார்கள்? 


Happy Women's Day

  • பெண்ணாய் பிறந்ததற்கு நாம் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
  • பெண்கள் அனைவரும் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் உங்களை பிசியாக வைத்து கொண்டால் வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகள் மன அழுத்தம் ஆகியவைகளில் இருந்து விடுதலை பெறலாம்
  • பெண்கள் கண்டிப்பாக தத்தம் சின்ன சின்ன செலவுகளுக்கு உரிய செலவுகளை நாமே பார்த்துகொள்ளும் அளவிற்கு சிறுதொழில் செய்து தொகை ஈட்டவேண்டும்
  • இப்படியான பெண்கள் நிச்சயம் கொண்டாடப்படவேண்டியவர்களே. அவர்களுக்கெல்லாம் சலிப்பு வராது, மாறாக இன்னும் எப்படி முன்னேறலாம் என்பதில் தான் சிந்தனை ஓடும்.


  • பெண்களே மனதை ரிலாக்ஸ் ஆக வைத்து கொள்ளுஙக்ள் இல்லையென்றால் குடும்பத்தை சரி வர கவனிக்க முடியாது.
  • கணவரின் வருவாய்க்கு ஏற்றபடி சிக்கனமாய் செலவு செய்யுங்கள்.
  • எதையும் வீண் விரையம் செய்யாதீர்கள். ஆரோக்கிய மான உணவை செய்யுங்கள், எதையும் அளவுக்கு அதிகமாக வாங்காதீர்கள்.
  • பிள்ளைகளை நல் வழி படுத்துங்கள்,ஆக்கம்
ஜலீலா
மேலும் வேறு யாருக்கும் கடைகளுக்கோ அல்லது வீட்டில் வைத்து சேல் செய்யும் எண்ணம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.Assalamu alaikkum
2016 Latest Model Shawls/Duppatta/Shela/Hijab/Head Cap/Niqab(Nose Piece)
Islamic Clothing @ Chennai Plaza
Available in Wholesale and Retail
Please like and Share

http://cookbookjaleela.blogspot.com/…/2016-latest-model-sha…
தொடர்புகொள்ளவேண்டிய
வாட்ஸஅப் நம்பர்
00971 55 9608954
00971 55 9608961


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, March 5, 2016

காலிப்ளவர் தயிர் சாதம் ( பேலியோ டயட் லன்ச்)
காலிப்ளவர் தயிர் சாதம் ( பேலியோ டயட் லன்ச்)

பேலியோ டயட்டில் அரிசிக்கு பதில் பயன் படுத்துவது காலிப்ளவர் தான் அதை சோறு போலவே வடித்து நமக்கு தேவையான கட்டு சாதங்கள் தயாரிக்கலாம்.


தேவையான பொருட்கள்

காலிப்ளவர் – 200 கிராம்

தயிர் – 75  மில்லி
பால் -  50 மில்லி

தாளிக்க

நெய் – 2 தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
பூண்டு – ஒரு பல் பொடியாக அரிந்தது
பெருங்காயப்பொடி – அரை சிட்டிக்கை
கருவேப்பிலை – சிறிது
முந்திரி – பொடியாக அரிந்தது ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் – பொடியாக அரிந்தது ஒன்று
இஞ்சி துருவியது – அரைதேக்கரண்டிசெய்முறை
காலிப்ளவரை சிறிய பூவாக துருவி , வெண்ணிரை கொதிக்க வைத்து உப்பு சேர்த்து காலிப்ளவரையும் சேர்த்து கொதிக்க விட்டு வெந்து வடிக்கட்டவும்.

ஒரு வாயகன்ற சட்டியை அடிப்பில் வைத்து அதில் நெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து வதக்கி தயிரையும் பாலையும் சேர்த்து தேவைக்கு உப்பு தூவி கொத்தி விட்டு நன்கு கிளறி இரக்கவும்


பேலியோ லன்ச்

காலிப்ளவர் தயிர் சாதம்
தம் காலிப்ளவர் (பொரியல்)
பாயில்ட் எக் ப்ரை
உப்பு நெல்லிக்காய்
Paleo Diet Lunch


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/